Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“இப்போதைக்கு நல்ல பையன்... மத்ததெல்லாம் சீக்ரெட்!” - `குலதெய்வம்’ ‘ரோஹித்’ பவித்ரன்

``அந்தப் பையனா இது?” என்று வியக்கும் அளவுக்கு நிஜத்தில் படுஅமைதியாக இருக்கிறார் `குலதெய்வம்’ ரோஹித் அலைஸ் பவித்ரன். இவருக்கு, கல்லூரியில் கெத்துகாட்டும் மாணவர் தோற்றம்.ஆனால், இவர் காலேஜ் முடித்து இரண்டு, மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. சீரியல்களில் பிஸியாகச் சுழன்றுகொண்டிருக்கும் பவித்ரன், நமக்காகப் பேட்டியளித்தார்.

ரோஹித்

``வால்பையன் ரோஹித்தை எல்லாருக்கும் தெரியும். பவித்ரன் பற்றிச் சொல்லுங்க?”

``சீரியலில் மட்டும்தான் என் பெயர் ரோஹித். மற்றபடி நான் பவித்ரன். அரக்கோணம் என்னோட சொந்த ஊர். வளர்ந்தது, படிச்சதெல்லாம் சென்னை. விஸ்காம் முடிச்சது டி.ஜி வைஷ்ணவா காலேஜ். படிப்பு முடிஞ்சதும் பாபி சிம்ஹா, கோகுல் நடிப்பில் வெளியான ‘ஆ’ ஹாரர் மூவில உதவி இயக்குநரா வேலைபார்த்தேன். கல்லூரிக் காலத்திலிருந்தே டான்ஸ்ல கிரேஸ். அதனால  `விஜய் டிவி ஜோடி' மாதிரியான டிவி டான்ஸ் ஷோக்களில்  நடன இயக்குநரா இருந்திருக்கேன். அப்போதான் நடிப்பில் இன்ட்ரஸ்ட் வந்தது. அதற்கேற்ற மாதிரி வாய்ப்புகளும் கிடைச்சது. இதுதான் என்னோட கதை.”

``பவித்ரன் இப்போ ஜீ தமிழ் ‘பூவே பூச்சுடவா’ சீரியலில் ரொம்ப நல்ல பையன். வில்லன் டு நல்ல பையன் சேஞ்ச் ஓவர் ஃபீல் எப்படியிருக்கு?”

``வில்லனா நடிக்கிறப்போகூட கஷ்டமா இல்லை. இப்போ நல்ல பையனா நடிக்கிறப்போதான் ரொம்ப கஷ்டமா இருக்கு. ரியல் லைஃப்லயும் சரி... ரீல் லைஃப்லயும் சரி, நல்லவங்களா இருக்கிறது கஷ்டமான விஷயம். வில்லனா, கெட்டவனா நடிச்சா ‘அட போடா நான் இப்படித்தான்’ங்கிற டோன்ல நடிச்சுட்டுப் போயிடலாம். ஆனா, நல்ல பையனுக்கு ரொம்பவே மெனக்கெடணும். வில்லனா நடிக்கிறது ஜாலியா இருக்கும். கூடவே சேலஞ்சிங் ரோல்கூட. அடக்க, ஒடுக்கமா நடிக்கிறது என்னைப் பொறுத்தவரை கண்ண கட்டுது பாஸ்.”

``நடிப்பு இல்லாம மாடலிங் ஃபீல்டுலயும் கலக்குறீங்களே?”

“என்னோட நண்பர்கள்தான் எனக்கு மாடலிங் கோ ஆர்டினேட்டர்ஸ். நிறைய நண்பர்கள் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நடத்திட்டிருக்காங்க. அவங்களோட அன்புத்தொல்லைக்காக ரேம்ப் வாக் ஷோ, போட்டோ ஷூட் எல்லாம் செய்து கொடுத்திருக்கேன்.”

`` ‘பூவே பூச்சுடவா’வில் கடைசிவரைக்கும் ‘குட் பாய்’ தானா? சீக்ரெட் சேஞ்ச் எதுவும் இருக்கா?”

``இப்போதைக்கு கெளதம் ரொம்ப நல்ல பையன். அதுமட்டும்தான் சொல்ல முடியும். போகப்போகதான் கெளதம் நல்லவனா, கெட்டவனானு தெரியும். வெயிட் அண்ட் சீ.”

`` ஓர் உதவி இயக்குநர் பார்வையில், சினிமா இயக்கம்... சீரியல் இயக்கம் என்ன வித்தியாசம்?”

``உருவாக்கம்தான் வித்தியாசம். சினிமாவில் ஷாட் கணக்கு. சீரியலில் எபிசோடு கணக்கு. சினிமாவில் ஒரு நாளைக்கு மூணு சீன் எடுத்தாலே பெரிய விஷயம். சீரியலைப் பொறுத்தவரையில் ஒரு நாளைக்கே ஆறேழு சீன் எடுக்கவேண்டியிருக்கும்.”

“மெளலி, வடிவுக்கரசி இருவருமே சீனியர் நடிகர்கள். முதல் நடிப்பு அனுபவமே அவங்களோடு. என்னவெல்லாம் கத்துக்கிட்டீங்க?”

`` `குலதெய்வம்' சீரியல் எப்பவுமே க்ளோஸ் டு மை ஹார்ட். ஏன்னா, என்னோட முதல் சீரியல் அது. அந்த டீம்ல யாருமே என்னைப் புதுசுனுலாம் ட்ரீட் பண்ணதே கிடையாது. ஒவ்வொருத்தரும் அவ்ளோ உற்சாகம் கொடுப்பாங்க. எனக்கும் வடிவுக்கரசி அம்மாக்கும் ஒரு பாட்டி - பேரன் சீன் இருந்தது. அப்போ கொஞ்சம்கூட பந்தா இல்லாம `அப்படி நடி, இப்படிப் பண்ணினா நல்லாருக்கும்'னு சொல்லிக்கொடுத்தாங்க.

மெளலி சார் ரொம்பவே ஃப்ரெண்ட்லி. டேக் வாங்காம நடிக்கிறதை அவர்கிட்டதான் நான் கத்துக்கிட்டேன். ஒருமுறை மூணு ஆர்ட்டிஸ்ட் மட்டுமே வர எபிசோடு ஒரே டேக்ல எடுத்தாங்க. புதுப்பையன்னு நினைக்காம அந்த சீனில் என்னை நம்பிக்கையோடு நடிக்கவெச்சாங்க டைரக்‌ஷன் டீம். நடிப்பு மட்டுமில்லாம, பிகேவியர், ஃப்ரெண்ட்லியான குணம், உற்சாகம் எல்லாமே `குலதெய்வம்' சீரியல் எனக்குக் கத்துக்கொடுத்த பாடங்கள்.”

``சீரியலில் எக்கச்சக்க கேர்ள் ஃப்ரெண்ட்ஸ். நிஜத்தில் எப்படி?”

“ஹி ஹி ஹி... நிஜத்தில் நடக்காததெல்லாம் சீரியலில் நடக்கிறது ஜாலிதான். 'பூவே பூச்சுடவா’ கெளதம் மாதிரி பவித்ரன் நிஜத்தில் ஒழுங்கான பையன். நிறைய கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. ஆனா, அவங்க எல்லாரும் நல்ல ஃப்ரெண்ட்ஸ் மட்டும்தான். சீரியலில் வர்ற மாதிரி கிடையாது. உண்மைதான் சொல்றேன் நம்புங்க பாஸ்” என்றார் பவித்ரன்.

நாமும் நம்புவோமாக!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்