Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

சூப்பர் சிங்கர் ஃபைனல், சாம்பியன்ஸ் டிராஃபி ஃபைனல், மைக்கேல் ஜாக்சன் படம்... இந்த வாரம் செம விருந்து! #TVSchedule

பிரமாண்ட இசை விருந்தான 'சூப்பர் சிங்கர் ஜூனியர் - GRAND FINALE', ஐசிசி சாம்பியன் ட்ராபி கிரிக்கெட் போட்டியின் ஃபைனல், உங்களின் ஃபேவரைட் திரைப்படங்கள் என இந்த வாரம் ஒளிபரப்பாகவிருக்கும் சின்னத்திரை ஸ்பெஷல் டிவி நிகழ்ச்சிகள் லிஸ்ட் இதுதான். 

டிவி நிகழ்ச்சிகள்

ஸ்டார் கோல்ட்:- 'சாந்தினி சவுக் டு சைனா' சனிக்கிழமை, காலை, 9.05:

தன்னால் கொல்லப் பட்ட ஒருவன் சீன மதத் துறவியின் மறுபிறவி என்பதைக் கண்டுபிடிக்கிறார் ஹீரோ அக்‌ஷய் குமார். அது உண்மையா? இல்லையா? என்பதை ஜாலியாக சொல்லும் படம். 

மூவீஸ் நவ்:- 'டிஸ்பிகபிள் மீ 2' சனிக்கிழமை, காலை 9.30: 

மினியன்ஸ் செய்யும் அதிரடி கலாட்டாதான் படம். வில்லனான குரு ஹீரோவாக மாறி, தீயசக்திகளிடமிருந்து மக்களை காப்பாற்ற செய்யும் திட்டமும், அதில் நடக்கும் காமெடி அதகளம் ‘டிஸ்பிகபிள் மி’. கூடவே சேட்டைக்கார மியன்ஸின் ஆக்‌ஷன் சீக்குவன்ஸூம் வேற லெவல். 

டிவி டிஸ்பிகபிள் மீ

 

ஜீ சினிமாஸ்:- 'ஹம் சாத் சாத் ஹேன்' சனிக்கிழமை, காலை, 10.30:

அம்மா-மகன் பாசம் மற்றும் காதல் உணர்வு இவற்றை திரையில் சென்டிமெண்டாக காட்டி மில்லியன் டாலர் ஹிட் அடித்த படம்.  

HBO:- ​​​​ 'ஜார்னி 2 தி மிஸ்ட்ரியஸ் ஐலேன்ட்' - சனிக்கிழமை, காலை 11.40

ஹாலிவுட்டில் தெறி ஹிட் மூவி இது.  ஹீரோ அலெக்சாண்டர் உலகின் மர்மனான தீவைக் கண்டுபிடிக்கிறார். அது பற்றிய தகவல்களை தன்னுடைய பேரனுக்கு அனுப்பி வைத்து, அத்தீவைப் பற்றிய இன்னும் சில மர்மமான புதிர்களை அவிழ்க்கும் படி கூறுகிறார். க்ளைமேக்ஸில் அந்த தீவை கண்டுபிடித்தார்களா, ஹீரோ அலெக்சாண்டர் என்ன ஆனார் என்பதுதான் ட்விஸ்ட். மாயாஜாலம் கலந்த த்ரில்லர் மழையாக இருக்கும். 

டபுள்யு. பி:- 'மைக்கேல் ஜாக்சன்-திஸ் ஐஸ் இட்' சனிக்கிழமை, மதியம் 1.47:

மைக்கேல் ஜாக்சனுக்கு நடந்த உண்மை சம்பவங்களின் தொகுப்பே இப்படம். இவரின் ‘திஸ் இஸ் இட்’ ஆல்பத்துக்காக லண்டன் செல்கிறார் மைக்கேல் ஜாக்சன். அங்கு நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள், நேர்காணல்கள், சந்தித்த மனிதர்கள் என மைக்கேல் ஜாக்சனும் லண்டனும்தான் கதை. மைக்கேல் ஜாக்சனின் ‘திஸ் இஸ் இட்’ ஆவணப்படம்  செம ஃபேமஸ் பாஸ். #Dont'tMiss!

டிவி மைக்கேல் ஜாக்சன்

ஸ்டார் மூவீஸ் ஆக்ஷன்:- 'ஹனி ஐ ஷ்ரங்க் தி கிட்ஸ்' சனிக்கிழமை, மதியம் 3.21

சைன்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படம். ​​​​சையின்டிஸ்டான ஹீரோ கண்டுபிடித்த இயந்திரத்தில் ஏற்படும் கோளாறினால் அவரின் குழந்தைகளுக்கு ஏற்படும் விபரீதம், அதன் பின் என்ன நடக்கும் என்பதை செம ஜாலியாக சொல்லும் ஹ்யூமர் கலந்த சயின்ஸ் பிக்‌ஷன் ஜானர்

சினிமா டி.வி:-'பேஜ் 3' சனிக்கிழமை, மாலை 4.05:

ஒரு பெண் பத்திரிக்கையாளர் சமூகத்தில் நடக்கும் அவலங்களை கண்டறிந்து, அதை சமூக மக்களின் பார்வைக்கு கொண்டுச் செல்கிறார். அவர் சந்திக்கும் பிரச்னைகள் பற்றிய சமூகப் படம்.  

 விஜய் டிவி:- 'சூப்பர் சிங்கர் ஜூனியர் - GRAND FINALE’- சனிக்கிழமை, மாலை 6:00

சூப்பர் சிங்கர் ஜூனியரின் இறுதிச்சுற்று  சனிக்கிழமை (ஜூன் 17, 2017) நேரடியாக ஒளிபரப்புகிறது விஜய் டிவி. சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் பத்தாவது சீசன் இது. ஐந்து போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தேர்வாகியிருக்கிறார்கள். அதில் மூன்று பேர் சிறுமிகள், இரண்டு சிறுவர்கள். இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார்? இந்த வாரம் தெரிந்துவிடும். 

ஜே மூவீஸ்:- 'உள்ளம் கேட்குமே' சனிக்கிழமை, மாலை, 7.00:

உள்ளம் கேட்குமே படம்

அசின், ஆர்யா, பூஜா, லைலா, ஷாம் என்று நட்சத்திர பட்டாளங்கள் நடித்த படம். ஜீவா இயக்கத்தில் வெளியான இப்படம் இப்பொழுதுமே கோல்டன் மெமரீஸ். நண்பர்கள் வட்டாரத்தில் நடக்கும் கலகலப்புகள், அவர்கள் பிரிந்துச் செல்லும் பொழுது ஏற்படும் சோகங்கள், மீண்டும் சந்தித்துக்கொள்ளும் போது ஏற்படும் மகிழ்ச்சியும் வருத்தமும் என நட்பும், நட்பு நிமித்தமும்தான் படம். 

FIFA

டபுள்யு. பி: ‘FIFA 2006 வேர்ல்ட் கப் ஃபிலிம் தி  கிராண்ட் ஃபினாலே' மூவி, சனிக்கிழமை, மாலை, 7.03:

2006 -ல் நடந்த ஜெர்மனியில் நடைபெற்ற  FIFA உலகக் கோப்பையின் க்ளாசிக் தருணங்கள் தான் படமே. 

ராமெடி நவ்: 'வெட்டிங் கிராஷஸ்' சனிக்கிழமை, இரவு, 10.50: 

திருமணப் பொழுதுகளில் நடக்கும் நகைச்சுவைத் தருணங்களை விவரிக்கும் படம். 

ஞாயிறு:-

ஜீ ஸ்டூடியோ, ஹெச். டி: 'அபார்ட்மெண்ட் 1303' ஞாயிறு, காலை 3.30: 

அபார்ட்மெண்ட் 1303 அறையில் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். இவரை பற்றி விசாரித்து பின்னணி சம்பவங்களை ஸ்வாரஸ்யத்துடன் கூறும் டிடக்ட்டிவ் மூவீ. 

அண்ட் பிக்சர்ஸ்:- 'கூப்சூரத்' ஞாயிறு, காலை, 6.04

அரச குடும்பத்தில் பிஸியோதெரபிஸ்டாக வேலை செய்ய வந்த பெண்ணிடம், ஹீரோ காதல் வயப்படுகிறார். இவர்களின் காதல் மற்றும் அரச குடும்பத்தின் பழக்க வழக்கங்களை கூறும் ரொமான்டிக்-காமெடி மூவீ. 

மூவீஸ் ஓகே: 'ஸத்தூரா- எ ஸ்பேஸ் அட்வெண்சர்' ஞாயிறு, காலை, 9.25: 

இரண்டு சகோதரர்கள் விளையாடிக்கொண்டிருக்கும் போது, திடீரென ஒரு இடத்திற்குள் சிக்கி அதன் வழியே விண்வெளிக்குச்  சென்றுவிடுகிறார்கள். அங்கிருந்து பூமிக்கு எப்படித் திரும்பினார்கள் என்பதுதான் ஒன்லைன். செமத்தியான த்ரில்லர் படம்.  

அண்ட் பிக்சர்ஸ்:- 'ஸ்டூஅர்ட் லீட்டல்' ஞாயிறு, மதியம், 12.00: 

மனிதனைப் போல் சகஜமாக பேசவும், பழகவும் தெரிந்த எலி செய்யும் அட்டகாசம்தான் இந்த படத்தின் கதை. இது அனிமேஷன்-காமெடி ஜானர்.

மூவீஸ் ஓகே: 'பாடி கார்ட்' ஞாயிறு, மதியம் 2.47:

பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த ஹார்ட் பிரேக் காதல் கதை. தமிழில் விஜய்யின் ‘காவலன்’ பார்த்து அலுத்துவிட்டீர்கள் என்றால், அதன் இந்தி ரீமேக்கான ‘பாடி கார்ட்’ படத்தைப் பார்க்கலாம். விஜய் கேரக்டரில் சல்மான் கானும், அசின் கேரக்டரில் கத்ரீனாவும் என பாலிவுட் மயம். 

 

ஐசிசி

ஸ்டார் ஸ்போர்ட்ஸ்:- ஐசிசி கிரிக்கெட் - ஞாயிற்றுக்கிழமை மாலை 3:00

கிரிக்கெட் பிரியர்கள் கவனத்திற்கு... ஐ.சி.சி. சாம்பியன் ட்ராபி கிரிக்கெட் போட்டியின் ஃபைனல் மேட்ச் நடக்கவிருக்கிறது. பாகிஸ்தானுடன் இந்தியா மோதவிருக்கிறது. 

ஸ்டார் மூவீஸ்: 'கார்ஸ்' ஞாயிறு, மாலை 6.26: 

அனிமேஷன் கார்களின் அட்டகாசம் தான் ‘கார்ஸ்’. இந்த சேட்டைக்கார கார்களின் ரேஸ் வித்தைகள் தான் படம். அதனால் ஏற்படும் விபரீதம்தான் க்ளைமேக்ஸ்.

ஸ்டார் கோல்ட்: 'மேரி தாக்கத் மேரா பாய்ஸ்லா' ஞாயிறு, இரவு 10.05:

ஊருக்கு சேவை செய்யும் சேவகன், அரசியல் தலைவர்களின் ஊழலைக் கண்டறிந்து, அவர்களுக்கு தண்டனையை விதிக்கும் விதமாக எடுக்கப்பட்ட சமூகப் படம். 

பாடி கார்ட்

- சென்ற வாரம்  போல் இந்த வாரமும் கிரிக்கெட் போட்டி, கலக்கல் டிவி நிகழ்ச்சிகள், தி பெஸ்ட் திரைப்படங்கள் வெயிட்டிங் என்பதால் டிவி ரிமோட்டுக்கு லீவ் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான் ஃப்ரண்ட்ஸ்.. ஹேப்பி வீக்எண்ட்...!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement