Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''அவங்ககிட்ட மட்டும் அடிவாங்கிடவே கூடாது!" - 'வாணி ராணி' நவ்யா

நடிகை நவ்யா

"தமிழே பேசத் தெரியாமல் தயங்கித் தயங்கி இங்கே வந்தவள், மூணு வருஷத்தில் அருமையா தமிழ் பேசறதோடு, 'இந்தப் பொண்ணு ரொம்பவே அன்பான மருமகள்'னு ரசிகர்கள் பாராட்டுற அளவுக்குப் பெயர் எடுத்திருக்கேன்'' - உற்சாகமாகப் பேசுகிறார் நடிகை நவ்யா. சன் டிவி 'வாணி ராணி' சீரியலில் பூஜா கேரக்டரில் ஸ்கோர் அள்ளுபவர். 

"மீடியா என்ட்ரி எப்படி ஆரம்பிச்சது?" 

"பிறந்து வளர்ந்ததெல்லாம் மைசூர். 2008-ம் வருஷம் ஸ்கூல் முடிச்சேன். மெடிக்கல் படிக்க ஆசை. நல்ல மார்க் இருந்தும் எதிர்பார்த்தபடி எங்க ஊர் காலேஜ்ல இடம் கிடைக்கலை. அதனால், பிபிஎம் கோர்ஸ் சேர்ந்தேன். காலேஜ் சேர்ந்த கொஞ்ச நாளிலேயே, 'நீ பார்க்க ஹீரோயின் மாதிரி இருக்கே. மீடியாவுக்கு டிரை பண்ணலாமே'னு ஃப்ரெண்ட்ஸ் உற்சாகப்படுத்தினாங்க. ஒரு கன்னட சேனலின் சீரியல் ஆடிஷன்ல செலக்ட் ஆனேன். படிச்சுக்கிட்டே நடிக்க ஆரம்பிச்சேன்." 

நடிகை நவ்யா

"தமிழ் சீரியல் என்ட்ரி எப்படி கிடைச்சது?"

"கன்னடசீரியல் நடிப்புடன் கன்னட 'ஜீ' சேனலில் ஆங்கரிங்கும் செய்துட்டிருந்தேன். காலேஜ் ஃபைனல் இயர் படிக்கிறப்போ, நடிப்பில் ரொம்பவே பிஸியாகிட்டேன். அதனால், மாஸ்டர் டிகிரி படிக்கும் ஆசையை விட்டுட்டேன். விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்புல தமிழில் ஒளிபரப்பான  'தென்றல்' சீரியலின் கன்னட வெர்ஷனில் (தங்காலி) நான்தான் ஹீரோயின். அந்த சீரியல்ல நடிக்கும்போது நிறையத் தமிழ் மீடியா நண்பர்களின் அறிமுகம் கிடைச்சுது. அப்படித்தான் 'வாணி ராணி' சீரியலில் கமிட் ஆனேன். தமிழ்த் தெரியாமல் நிறைய டேக் வாங்குவேன். டயலாக் பேசவே பயமா இருக்கும். சக ஆர்டிஸ்ட் எனக்குத் தமிழ் சொல்லிக்கொடுத்து உதவினாங்க. அவங்களுக்கு நன்றி.'' 

"ராதிகா, உங்க பக்கத்தில் வந்தாலே பயப்படுவீங்களாமே..." 

"அது மரியாதை கலந்த பயம். அவங்க நடிக்கிறப்போ உன்னிப்பா கவனிப்பேன். அவங்ககிட்டே இருந்து நிறைய ஆக்டிங் நுணுக்கங்களை கத்துகிட்டேன். ஃபேஸ் மாடுலேஷன் எப்படி இருக்கணும், எப்படியெல்லாம் எக்ஸ்பிரெஷன் கொடுத்தால் நல்லாயிருக்கும்னு நிறைய அட்வைஸ் கொடுப்பாங்க. ஆனாலும், அவங்க பக்கத்தில் வந்தால் நடுக்கம் வந்துடும். அதை வெளிக்காட்டிக்காம பேசுவேன். குறிப்பா, அவங்க யாரையாவது அடிக்கிற மாதிரியான காட்சி வந்தால், ரியலா இருக்கணும்னு நினைப்பாங்க. அந்த ஆர்வத்தில், சில சமயம் நிஜ அடியே கிடைச்சுடும். (சிரிக்கிறார்). ஒருமுறை பப்லு சாரை, அவங்க அடிச்சதில் அவர் வலியில் துடிச்சுட்டார். அப்போதிலிருந்து 'ராதிகா மேம்கிட்ட அறை வாங்கும் காட்சி வந்துடக்கூடாது சாமி'னு மனசுல வேண்டிக்குவேன்." 

நடிகை நவ்யா

''சீரியலின் 'பெஸ்ட் ஜோடி' எனப் பெயர் வாங்கி இருக்கிறது எப்படி இருக்கு?'' 

"ஆமாம்! 'வாணி ராணி' சீரியல்ல என் ஜோடியா நடிக்கும் கெளதமும் நானும் ஆரம்பத்திலிருந்தே அந்நியோன்யமான தம்பதி மாதிரி நடிச்சுட்டிருக்கோம். அந்தக் காட்சிகள் பெஸ்ட்டா இருக்கணும்னு ஸ்கிரிப்டை முன்னாடியே கேட்டு வாங்கி ரிகர்சல் பார்த்துப்போம். அதுதான், 'பெஸ்ட் ஜோடி' எனப் பலரிடம் பாராட்டை வாங்கிக் கொடுத்திருக்கு.'' 

"நீங்க டிரைவிங் பிரியையாமே..." 

"ஆமாம்! டிரைவிங்னா ரொம்பப் பிடிக்கும். ஷூட் இல்லாத நாட்களில் காரை எடுத்துக்கிட்டு தனியாக லாங் டிரைவ் கிளம்பிடுவேன். கோவா வரைக்கும் டிரைவிங் போயிருக்கேன். சென்னைக்கு ஷூட்டிங் வரும்போதும், பெரும்பாலும் நானே டிரைவிங் பண்ணிட்டு வருவேன். இப்ப ஒரு தெலுங்கு சீரியலிலும் நடிச்சுட்டிருக்கேன். லைஃப் ரொம்ப என்ஜாய்மென்ட்லா போயிட்டிருக்கு" எனப் புன்னகைக்கிறார் நவ்யா. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்