''ப்ளீஸ் அம்மா... எங்களை ஏத்துக்கங்க..!’’ - 'பிரியமானவள்' கிரண்

பிரியமானவள் கிரண்

 

ன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் 'சிறந்த மருமகள்' என்கிற செல்லப் பட்டத்தை பெற்றிருக்கிறார் ‘பிரியமானவள்’ கிரண்.  

குழந்தை மனம், இரக்கக் குணம் என்று சீரியலில் அசத்துபவரிடம் நிஜத்திலும் இப்படிதானா..? என்று கேட்டோம். 'நோ' என்று புன்னகைத்தப்படியே பேச ஆரம்பித்தார் கிரண். 

பிரியமானவள் கிரண்

’'என்னுடைய சொந்த ஊர் ஆந்திரா. அப்பா எலெக்ட்ரிஷனா வேலை பார்த்தாங்க. அவங்களுடைய வேலைக்காக சென்னையில் செட்டில் ஆகிட்டோம். நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு. அப்பா ‘தாஸ்’ பட சூட்டிங்ல வேலை பார்த்துட்டு இருந்தாங்க. அப்போ அந்தப் படத்துக்கு குழந்தை நட்சத்திரம் தேடிட்டு இருக்குறதைக் கேள்விபட்டு, அப்பா என்னைக்  கூட்டிட்டுப் போனாங்க. இப்படித்தான் என்னோட மீடியா பயணம் ஆரம்பிச்சது.

பிரியமானவள் கிரண்

ராஜ் டி.வி-யில்தான் என்னோட முதல் சீரியல் என்ட்ரி ஆரம்பிச்சது. அதுக்குப் பிறகு சன் டி.வி - யில் 'தென்றல்' சீரியலுக்கு வாய்ப்பு கிடைச்சது. இந்த ரெண்டு சீரியல்லேயும் சைடு ரோல்தான் பண்ணிட்டு இருந்தேன். 'பிரியமானவள்' சீரியலுக்கு கூப்பிட்டப்பவும் சைடு ரோலாதான் இருக்கும்னு நினைச்சேன். ஆனா, இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பேசப்படுகிற கதாபாத்திரமா இருக்கும்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல. அப்பா என்னை இந்த மாதிரிதான் மீடியால பார்க்கணும்னு நினைச்சாங்க. ஆனா, என் வளர்ச்சியை பார்க்குறதுக்கு அப்பா என்கூட இல்ல. அவர் தவறி மூணு வருஷம் ஆச்சு'' என்று கண்கலங்கினார். 

கிரண்

அவருக்கு ஆறுதல் கூறி அவரது காதல் கல்யாணம் பற்றி கேட்டோம். ''என் ஃபிரண்டோட அண்ணன் சிவா. அவருக்கு நான் நடிக்கிறதே, நான் சொல்லித்தான் தெரியும். என்கிட்ட ரொம்ப அன்பா பழகுவார். என்னோட ஃபிரண்ட் சொல்லிதான், அவர் என்னை லவ் பண்ற விஷயமே தெரிஞ்சது. அவர் புரொப்போஸ் பண்ணி ரெண்டு மாசத்துக்கு அப்புறம் தான் ஓகே சொன்னேன். அவங்க வீட்டுல எல்லாருக்கும் என்னைப் பிடிச்சிருந்தது. ஆனா, என் அம்மாவுக்கு என் காதல் சுத்தமாப் பிடிக்கலை. வேற வழியில்லாம வீட்டை எதிர்த்துக்கிட்டு அவரை கல்யாணம் பண்ணா வேண்டிய சூழல் ஏற்பட்டுச்சு. இப்போ அம்மாவோட கோபம் கொஞ்சம் குறைஞ்சிருக்குனு நினைக்கிறேன். சீக்கிரமாவே என்னையும், என் வீட்டுக்காரரையும் அம்மா புரிஞ்சிப்பாங்கனு நினைக்கிறேன். ப்ளீஸ் எங்களை ஏத்துக்கோங்கம்மா'' என்று எமோஷனல் ஆனவர் சீரியல் குறித்து பேச்சை மாற்றினார். 

'' 'பிரியமானவள்' பூமிகாவை இப்ப நிறைய மக்களுக்குப் பிடிச்சிருக்கு. வெளியில எங்க பார்த்தாலும் 'வீட்டுக்கு வாம்மா..!! ஒரு வாய் சாப்டுட்டு போமா'னு ரொம்பவே பாசமா பழகுறாங்க. நான் நடிச்ச படம் இன்னும் வெளிவரல. ஆனா படங்கள்ல நடிக்கணும்னு ஆசை இருக்கு. நல்ல வாய்ப்பு கிடைச்சா நிச்சயம் நடிப்பேன். தொடர்ந்து எனக்கு சப்போர்ட்டா இருங்க'' என புன்னகையோடே முடித்துக் கொண்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!