Published:Updated:

''சினிமா நடிகையானதுக்கு அப்புறமாதான் வெப் சீரிஸில் நடிச்சேன்'' - 'ஆஃபாயில்' சுவதிஷ்டா

வெ.வித்யா காயத்ரி
''சினிமா நடிகையானதுக்கு அப்புறமாதான் வெப் சீரிஸில் நடிச்சேன்'' - 'ஆஃபாயில்' சுவதிஷ்டா
''சினிமா நடிகையானதுக்கு அப்புறமாதான் வெப் சீரிஸில் நடிச்சேன்'' - 'ஆஃபாயில்' சுவதிஷ்டா

மெட்ராஸ் சென்ட்ரலின் 'ஆஃபாயில்' வெப் சீரிஸில் நடித்து, மக்களிடம் அறிமுகமானவர், சுவதிஷ்டா கிருஷ்ணன். தொகுப்பாளர், புரொடியூசர், டான்சர், நடிகை எனப் பன்முகம்கொண்டவர். அவருடன் ஒரு ஜாலி சாட்! 

''நான் பிறந்து வளர்ந்தது சென்னையில். இன்ஜீனியரிங் படிச்சிருந்தாலும் மீடியா மேலேதான் ஆர்வம் இருந்துச்சு. அதனால், மீடியா கோர்ஸ் படிக்க ஆரம்பிச்சேன். அங்கே படிக்கும்போதே, நிறைய சேனல்களில் ஃப்ரீலான்ஸ் வீஜேவா வொர்க் பண்ணினேன். என் விருப்பத்துக்கு வீட்டிலும் கிரீன் சிக்னல் கொடுத்துட்டாங்க.'' 

''சினிமா டு வெப் சீரிஸ் எப்படி?'' 

''வீஜேவா நிறைய ஷோ பண்ணியிருக்கிறதைப் பார்த்து சில சினிமாவில் வாய்ப்பு கிடைச்சது. அப்போ நான் படிச்சுட்டிருந்ததால், சினிமா வேண்டாம்னு மைண்ட்செட்டில் இருந்தேன். மிஷ்கின் சாரின் 'சவரக்கத்தி' படத்தில் செகன்ட் லீட் ரோல் வந்ததால் மிஸ் பண்ண வேணாம்னு நடிச்சேன். அப்புறம் 'மதம்' என ஒரு படத்தில் ஹீரோயினா நடிச்சேன். அடுத்து, ஜீவா சாரின் 'கீ' படத்தில் முக்கிய கதாபாத்திரம். இந்த மூணு படங்களும் முடிஞ்சதுக்கு அப்புறமாகத்தான் 'ஆஃபாயில்' சீரிஸ் பண்றதுக்கு கேட்டாங்க. அது மக்களிடம் நல்ல பெயரை கொடுத்திருக்கு.'' 

'' 'சவரக்கத்தி' படம் பற்றி...'' 

''படம் அடுத்த வாரம் ரிலீஸ். மிஷ்கின் சார், டைரக்டர் ராம் சார் என ஒரு பெரிய படையில் நானும் இருக்கிறதே பயங்கர ஹேப்பி. அந்தப் படத்தில் நடிக்கும்போது நிறைய விஷயங்களை கத்துக்கிட்டேன். மிஷ்கின் சார்கூட நடிக்கும்போது, ஜூனியர் ஆர்ட்டிஸ்டா இருந்தாலும், சீனியரா இருந்தாலும், ஷாட் முடிஞ்சதும் கிளாப் பண்ணுவாங்க. அது நம்மை எனர்ஜடிக்கா மாற்றும். அதுதான் அவருடைய ஸ்பெஷல். நான் நடிச்சு முடிச்சதும், செட்ல எல்லோரும் கிளாப் பண்ணின தருணங்கள், வாழ்நாளில் மறக்கமுடியாத பாராட்டா நிச்சயம் இருக்கும்.'' 

''தொடர்ந்து வெப் சீரிஸ் பண்ணுவீங்களா?'' 

''பெரிய, பெரிய ஆர்ட்டிஸ்ட்டே வெப் சீரிஸ் பண்றாங்க. நிறைய ஆடியன்ஸ் வெப் சீரிஸைப் பார்க்கிறாங்க. நல்ல கேரக்டருக்கு பெரிய ரீச் கிடைக்குது. நல்ல கேரக்டர் வரும்போது கண்டிப்பா தொடர்ந்து பண்ணுவேன்.'' 

''சுவதிஷ்டா - ஸ்வாதி டான்ஸ் கூட்டணி பற்றி...'' 

''நான் முறையா டான்ஸ் கற்றவள். என் பெஸ்ட் ஃப்ரெண்ட் ஸ்வாதி, எனக்கு காஸ்டியூம் டிசைன் பண்ணி தர்றாங்க. அவங்களும் நல்லா டான்ஸ் ஆடுவாங்க. ரெண்டு பேரும் சேர்ந்து டான்ஸ் பண்ணி, யூடியூப்பில் அப்லோடு பண்ணுவோம். இதைப் பொழுதுபோக்கா ஆரம்பிச்சோம். எங்க ஃப்ரெண்ட்ஸே வீடியோ எடுத்து, எடிட் பண்ணிக் கொடுப்பாங்க. எந்தப் பாட்டுக்கு டான்ஸ் ஆடுறோமோ அதுக்கு ஏற்ற ஒரே மாதிரியான காஸ்டியூம் ரெடி பண்ணிப்போம். பாட்டுக்கு ஏற்ற மாதிரியான இடத்தையும் தேர்வுசெய்து ஆடுவோம்.'' 

''நீங்க அடிக்கடி வாங்கும் பொருள் எது?'' 

''வேறென்ன... டிரெஸ்தான். இப்போ கொஞ்ச நாளா ஆர்கானிக் தயாரிப்புகளில் இறங்கியிருக்கேன். கெமிக்கல் இல்லாத பொருள்களை வாங்குவதில் கவனம் செலுத்தறேன்.'' 

''நடிப்பில் உங்க ஃபேவரைட் யாரு?'' 

''பலரையும் பிடிக்கும். குறிப்பா சொல்லணும்னா, விஜய் சேதுபதி என் ஃபேவரைட். ஹீரோயினா என் ரோல் மாடல், ஷானிலி அஜித். அப்புறம் அனுஷ்கா மேமின் நடிப்பை அதிகம் உள்வாங்குவேன்.'' 

''எதிர்கால திட்டம்...'' 

''தொடர்ந்து படங்களில் நடிக்க ஆஃபர் வந்திருக்கு. 'சவரக்கத்தி', 'கீ' படங்கள் என்னுடைய கரியர்ல ஒரு திருப்புமுனையா இருக்கும்.''