Published:Updated:

'' 'தெய்வமகள்' பிரகாஷ் - சத்யா ஜோடி நல்லா இருக்கு!'' - கணவர் பற்றி மனம் திறக்கும் சாயா சிங் ⁠⁠⁠⁠

வே.கிருஷ்ணவேணி
'' 'தெய்வமகள்' பிரகாஷ் - சத்யா ஜோடி நல்லா இருக்கு!'' - கணவர் பற்றி மனம் திறக்கும் சாயா சிங்            ⁠⁠⁠⁠
'' 'தெய்வமகள்' பிரகாஷ் - சத்யா ஜோடி நல்லா இருக்கு!'' - கணவர் பற்றி மனம் திறக்கும் சாயா சிங் ⁠⁠⁠⁠

'மன்மத ராசா' பாட்டுமூலம் பட்டித்தொட்டி முழுக்க புகழ்பெற்றவர் நடிகை சாயா சிங். தற்போது, பல படங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார். இவருடைய கணவர்தான், 'தெய்வமகள்' சீரியலில் ஹீரோ பிரகாஷாக அசத்தும் கிருஷ்ணா. பக்கத்து வீட்டு பையனுக்கான பாந்தமான தோற்றத்தில் இருக்கும் இவருக்கு எக்கச்சக்க ஃபோலோயர்ஸ் உண்டு. கணவர் மற்றும் நடிப்பு பற்றி பேசினார் சாயா சிங். 

''திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கை எப்படி இருக்கு?'' 

''ரொம்ப ஹேப்பியா ஸ்மூத்தா போயிட்டிருக்கு. திருமணமாகி நான்கு வருடங்கள் ஆச்சு. நாள்கள் கடந்துபோனதே தெரியலை. ரெண்டுப் பேருமே ஷூட்டிங், குடும்பம் என தினமும் எதையாவது கத்துக்கிட்டே இருக்கோம்.'' 

'' 'திருடா திருடி' படத்தில் பார்த்த மாதிரியே இன்னமும் இருக்கீங்களே...'' 

''அப்படியா? இப்படிக் கேட்கறதுக்கே சந்தோஷமா இருக்கு. என்னை முதல்ல பார்க்கிறவங்க எல்லோரும், 'டெரரா இருக்கீங்க'னு சொல்வாங்க. கொஞ்ச நாள் பழகினதுக்குப் பிறகு, 'நீங்க உண்மையில் டெரர் இல்லீங்க. ரொம்ப சாஃப்ட் நேச்சர்'னு சொல்வாங்க. அதென்னவோ தெரியலை. முதல் முறை பார்க்கிறவங்க கண்ணுக்கு நான் டெரரா தெரியுறேன்போல.'' 

''உங்க கணவருக்கு வரும் பாராட்டுக்களை எப்படிப் பார்க்கிறீங்க?'' 

''ஒரு மனைவியா சந்தோஷப்படுவேன். எந்த விஷயமா இருந்தாலும் பகிர்ந்துக்குவோம். ரெண்டுப் பேருக்குள்ளும் நல்லப் புரிதல் இருக்கு. எங்களுக்குள்ள சில பிரச்னைகள் வரும்போது யாரிடம் தப்பு இருக்கோ அவங்கதான் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும். ஒரு கேம்ஸ் விஷயமா இருந்தாலும் அவருடன் டஃப் ஃபைட் கொடுப்பேன். அவரும் அப்படித்தான். ஏன் அவர்கிட்ட விட்டுக்கொடுக்கணும்னு நினைப்பேன். ஆனால், இதெல்லாம் ஆரோக்கியமான போட்டியாகவே இருக்கும். என்னை அவர் 'ஜானு'னு கூப்பிடுவார். அவரை நான் 'ஜி'னு கூப்பிடுவேன். கோபமோ, சந்தோஷமோ எந்தச் சூழலா இருந்தாலும் இந்தப் பெயர் மட்டும் மாறவே மாறாது.'' 

''நீங்க பெரிய பொக்கிஷமாக நினைக்கிறது எதை?'' 

''ரசிகர்களைத்தான். நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது மாடலிங் துறைக்கு வந்தேன். தொடர்ந்து மாடலிங், சினிமா என கிராஃப் ஏறிட்டே இருந்துச்சு. 'திருடா திருடி' படம் எனக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்துச்சு. அந்தப் படத்தில் திமிரான பொண்ணா நடிச்சிருந்தேன். அடுத்து வந்த அத்தனை புராஜெக்ட்டுமே அமைதியான கேரக்டர்தான். இத்தனை வருஷங்களுக்குப் பிறகும், 'பவர் பாண்டி' படத்தில் என் நடிப்புக்கு ரசிகர்கள் அங்கீகாரம் கொடுத்திருக்காங்க. இதைவிட பெரிய பொக்கிஷம் என்ன வேண்டியிருக்கு'' 

'' 'பவர் பாண்டி' படத்துக்குப் பிறகு என்ன படம் பண்றீங்க?'' 

''அருள் நிதி நடிக்கும் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', 'பட்டினப்பாக்கம்', 'உள்குத்து' போன்ற படங்களிலும், கன்னடத்தில் 'மஃப்டி' என்கிற படத்திலும் நடிச்சுட்டிருக்கேன்.'' 

''உங்கள் கணவர் சீரியலில் பிஸியானவர். உங்களுக்கும் சீரியல் நடிக்கும் எண்ணம் வரலையா?'' 

''அதுக்குள்ள சீரியல்ல நடிக்கணுமானு தோணுது. இன்னும் டைம் இருக்கிறதா நினைக்கிறேன். சினிமாவில் கத்துக்க நிறைய விஷயங்கள் இருக்கு. சீரியல் பற்றி பிறகு பார்க்கலாமே.'' 

'' 'தெய்வமகள்' வாணி போஜனுக்கும் உங்களுக்குமான நட்பு பற்றி...'' 

''நான் 'தெய்வமகள்' சீரியலைப் பார்ப்பேன். ஷூட்டிங் ஸ்பாட்ல நடக்கும் விஷயங்களை கிருஷ்ணா பகிர்ந்துப்பார். ஆனால், 'தெய்வமகள்' டீம்கூட அவ்வளவு பெட் இல்லே. ஒன்றிரண்டு தடவை வாணியிடம் பேசியிருக்கேன். குட்... ப்ரெண்ட்லி. 'தெய்வமகள்' சீரியலில் கிருஷ்ணா, வாணி போஜன் மட்டுமல்ல யாராக இருந்தாலும் இந்த கேரக்டர் செட் ஆகியிருக்கும். ஏனென்றால் இந்த கேரக்டரின் வெயிட் அப்படி. இருந்தாலும், இரண்டு பேருடைய கேரக்டரும் நன்றாக செட் ஆகியிருக்கு. '' 

''உங்களை 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு கூப்பிட்டாங்களா?'' 

''ஒரு தடவை இல்லே, மூன்று தடவை கூப்பிட்டாங்க. முதல் தடவை கூப்பிட்டப்போ படத்துக்கான புராஜெக்டில் பிஸியா இந்தேன். வைல்ட் கார்ட் என்ட்ரி சமயத்தில் கூப்பிட்டாங்க.. அப்பவும் போக முடியாத சூழல். கன்னடத்திலும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு கூப்பிட்டாங்க. மறுபடியும் புராஜெக்ட் கமிட் ஆனதால் போக முடியலை.'' 

''அப்போ, 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் போகும் ஆசை இருக்கா? அடுத்த சீசனுக்கு கூப்பிட்டால் போவீங்களா?'' 

''நான் இன்னும் குழந்தைத்தனமா இருக்கிறதா நினைக்கிறேன். இன்னும் மெச்சூரிட்டி வரலை. 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துக்க நமக்கே நம்ம மேல முழுமையாக நம்பிக்கை இருக்கணும். நான் எப்படிப்பட்ட கேரக்டர்னு என் வீட்டு நாய்க்குட்டியான 'ஃபீஃபீ' சொல்லும். ஏதாவது கோபம்னா உடனே கத்திடுவேன். ரியாலிட்டி ஷோவில் அப்படியெல்லாம் இருக்க முடியாது. 'பிக் பாஸ்' நிகழ்ச்சிகளில் கலந்துக்கிறவங்களுக்கு தைரியம் அதிகம்தான். தங்களை நல்லாப் புரிஞ்சு வெச்சுக்கிட்டு கலந்துக்கறாங்க. எனக்கு அதெல்ல்லாம் செட் ஆகாது. அவங்களுக்கு என் ஹேட்ஸ் ஆஃப்'' என்று தெத்துப்பல் தெரியச் சிரிக்கிறார் சாயா சிங்.