Published:Updated:

"அந்தச் சொதப்பலை மட்டும் என்னால மறக்கவே முடியலை!" - 'வணக்கம் தமிழா' பவித்ரா

வெ.வித்யா காயத்ரி
"அந்தச் சொதப்பலை மட்டும் என்னால மறக்கவே முடியலை!" - 'வணக்கம் தமிழா' பவித்ரா
"அந்தச் சொதப்பலை மட்டும் என்னால மறக்கவே முடியலை!" - 'வணக்கம் தமிழா' பவித்ரா

ன் டிவியில் ஒளிபரப்பாகும் 'வணக்கம் தமிழா' நிகழ்ச்சியின் ஐந்து தொகுப்பாளர்களில் ஒருவர், பவித்ரா. இவர், வீஜேவாக அறிமுகமாவதற்கு முன்பே மாடலிங் துறையில் முத்திரையைப் பதித்தவர். 'மிஸ் சவுத் இந்தியா 2017' பட்டத்தைக் கைப்பற்றியவர். மாடலிங், ஆங்கரிங் என ஆல்ரவுண்டராக வலம்வருபவரிடம் ஒரு ஜாலி சாட்! 

"உங்களைப் பற்றி...'' 

''என் சொந்த ஊர் சென்னை. ஸ்கூலிங்கிலிருந்து எம்.பி.ஏ வரை எல்லாமே சென்னையில்தான். அப்பா பிசினஸ் பண்றார். அம்மாவுக்குத் தனியார் நிறுவனத்தில் வேலை. எனக்கு ஒரு தம்பி. அவனும் படிச்சுட்டே வேலை பார்த்துட்டிருக்கான். 'அளவான குடும்பம் அளவில்லா ஆனந்தம்', இதுதான் எங்க ஃபேமிலி சீக்ரெட்.'' 

''மாடலிங் வாய்ப்பு எப்படி கிடைச்சது?'' 

''நான் காலேஜ் படிச்சுட்டிருக்கும்போதே சில நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிட்டு இருந்தேன். தொகுப்பாளராக ஒரு ஈவன்ட்டுக்குப் போயிருந்தப்போ, அதில் கலந்துக்க வேண்டிய ரெண்டு மாடல்களில் ஒருத்தர் வரலை. அவங்க வரும்வரை என்னை மாடலா நிற்க சொன்னாங்க. சரின்னு பிராக்டிஸ் பண்ணிட்டிருந்தேன். அதைப் பார்த்துட்டு, என்னையே மாடலிங் பண்ணச் சொல்லிட்டாங்க. அங்கே ஆரம்பிச்சது மாடலிங் பயணம். காம்பியரிங், மாடலிங் எனத் தொடர்ந்தேன்.'' 

''லைவ் ஷோவில் ஆங்கரிங் பண்ற அனுபவம் எப்படி இருக்கு?'' 

''அது புதுவிதமான எக்ஸ்பீரியன்ஸ். எனக்கு ஆங்கரிங் பண்றது பிடிச்ச வேலையா இருந்தாலும், பிராக்டிஸ் பண்ணாமல் பேசத் தெரியாது. லைவ்வில் பேசும்போது சரியா பண்ணனும். அதிலும், தினசரி செய்தியைச் சொல்லும்போது, தப்பில்லாமல் சொல்லணும். அதுக்காக, ஹார்டு ஒர்க் பண்ணுவேன். அதனால்தான் அந்த நிகழ்ச்சியைச் சொதப்பாமல் பண்ண முடியுது.'' 

''உங்களுடைய வாழ்க்கையில் மறக்கமுடியாத தருணம்...'' 

''மாடலிங் துறை எனக்கு புதுசு. ஆனாலும், என் ஃப்ரண்ட்ஸ் கொடுத்த ஊக்கத்தால், மிஸ் சவுத் இந்தியாவில் கலந்துக்க முடிவெடுத்தேன். என்னுடைய உயரம் மைனஸுன்னும், இந்தப் போட்டியில் ஜெயிக்க முடியாதுன்னும் சிலர் சொன்னாங்க. ஆனாலும், ஓர் ஆசைக்காகத்தான் அந்தப் போட்டியில் கலந்துகிட்டேன். எதையுமே எதிர்பார்க்காமல் இருந்தபோது, திடீர்னு நான் ஜெயிச்சதை அறிவிச்ச தருணம், வாழ்வில் மறக்கமுடியாதது.'' 

''ஷார்ட் ஃபிலிமில் நடிச்சிருக்கீங்க. சினிமாவில் நடிக்க விருப்பம் இருக்கா?'' 

''கொள்ளை ஆசை இருக்கு. நடிச்சா ஹீரோயின் ரோல்தான் என்று கிடையாது. படத்தில் பேசப்படும் கதாபாத்திரம் எதுவா இருந்தாலும் என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த ரெடி.'' 

''ஃப்ரீ டைமில் என்ன பண்ணுவீங்க?'' 

''எனக்கு லாங் டிரைவ் போறது ரொம்ப பிடிக்கும். எந்த டிரிப் போனாலும் நான்தான் டிரைவ் பண்ணுவேன். கார் டிரைவிங்னா உயிர். கடைசியா கனடாவுக்கு வேலைக்காகப் போயிருந்தேன். வேலை முடிஞ்சும் அங்கிருந்து திரும்பறதுக்கு மனசில்லாமல், ஒரு மாதம் டேரா போட்டேன்.'' 

''நீங்க பண்ணின லைவ் ஷோவில் சொதப்பல் மொமன்ட் ஏதாவது...'' 

''எனக்கு ஒரு பெரிய மைனஸ் இருக்கு. செட்டுல நண்பர்கள் ஏதாவது காமெடி பண்ணினா போச்சு. கொஞ்ச நேரத்துல அவங்க மறந்து அமைதி ஆகிடுவாங்க. நான் அந்த ஜோக்கையே நினைச்சு சிரிச்சுட்டு இருப்பேன். அப்படித்தான், ஒருநாள் சீரியசான நியூஸை சிரிச்சுட்டே வாசிச்சு, திட்டு வாங்கினேன். அதுதான் என்னுடைய மிகப்பெரிய சொதப்பல்.'' 

''காதல்... கல்யாணம்..?'' 

''அதைப் பற்றி எப்போ சொல்வேன், எப்படிச் சொல்வேன் எனத் தெரியாது. ஆனா, சொல்லவேண்டிய நேரத்துல கரெக்டா சொல்லிடுவேன். நிச்சயமா லவ் கம் அரேன்ஜ்டு மேரேஜ்தான். ஸோ, வெயிட்!''