Published:Updated:

''அந்த 3 லட்சம் பேருக்கு நன்றி!’’ - செம குஷி 'சூப்பர் சேலஞ்ச்' தியா மேனன்

வே.கிருஷ்ணவேணி
''அந்த 3 லட்சம் பேருக்கு நன்றி!’’ - செம குஷி 'சூப்பர் சேலஞ்ச்' தியா மேனன்
''அந்த 3 லட்சம் பேருக்கு நன்றி!’’ - செம குஷி 'சூப்பர் சேலஞ்ச்' தியா மேனன்

ன் மியூசிக் சேனலில் 'கிரேஸி கண்மணி'யாக வலம்வந்தவர் தியா மேனன். ஆதவனுடன் இணைந்து 'சூப்பர் சேலஞ்ச்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். தற்போது மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிவருகிறார். ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என எல்லாத் தளத்திலும் பிஸியாக இருக்கும் தியா மேனனுடன் ஒரு மினி சாட்டிங்... 

''உங்களை அடிக்கடி ஃபேஸ்புக்கில் பார்க்க முடியுதே..'' 

''இப்போ இருக்கிற சூழலில் சமூக வலைதளங்களின் மூலமாகத்தான் நிறையச் செய்திகளை தெரிஞ்சுக்கிறோம். ஆனாலும், நான் எதுக்கும் அடிக்‌ஷன் கிடையாது. நேரம் கிடைக்கும்போது லைவ் சாட்டுக்கு வருவேன். ஃபேஸ்புக்கைவிட இன்ஸ்டாகிராமில் அதிகம் இருப்பேன். பல விஷயங்களைப் பகிர்ந்துப்பேன். இன்ஸ்டாகிராமில் மூன்று லட்சத்துக்கும் மேலான ஃபாலோயர்ஸ் இருக்காங்க. அவங்களை ஃபாலோயர்ஸ் என்பதைவிட ஃப்ரெண்ட்ஸ் என்றுதான் சொல்வேன்.'' 

''ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் உங்க டிரெஸ்ஸிங் ஸ்டைல் யுனிக்கா தெரியுதே...'' 

''ஒவ்வொரு ஷோவுக்கும் ஸ்பெஷல் டிசைனர் இருப்பாங்க. அவங்க டிசைன் செய்றதில் எனக்கு எந்த டிரெஸ் பிடிச்சிருக்கோ, அதைத் தேர்ந்தெடுப்பேன். என் சிஸ்டர் டிசைனராக இருக்காங்க. அதனால், அவங்ககிட்ட கேட்டு அடிக்கடி டிரெஸ் டிசைன் பண்ணிப்பேன்.'' 

''படங்கள் அல்லது ஷார்ட் ஃபிலிம் பண்ணியிருக்கீங்களா?'' 

''நான் பிளஸ் டூ படிக்கும்போது, ஒரு படத்தில் நடிச்சேன். அதுக்கு அப்புறம் தொகுப்பாளராக களமிறங்கிட்டேன். ஒன்றிரண்டு ஷார்ட் ஃபிலிம் பண்ணியிருக்கேன். சினிமாவில் நடிக்க தொடந்து வாய்ப்புகள் வருது. இப்போ பார்க்கிற வேலைக்கே நேரம் போதலை. அதனால், புது ஆஃபர்ஸை ஓ.கே பண்ணாம இருக்கேன். தொகுப்பாளர், விளம்பர மாடல் என லைஃப் பிஸியாக இருக்கு. இதுக்கு அப்புறம் சினிமா வாய்ப்புகள் வந்தால், ஓ.கே சொல்லலாம்னு இருக்கேன்.'' 

''நிறைய வெளி நிகழ்ச்சிகளில் உங்களைப் பார்க்க முடியுதே..'' 

''கார்ப்பரேட், ஸ்டார் நைட் போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கறேன். சிங்கப்பூரில் நிறையத் தமிழ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கறேன். என்னதான் பல பெரிய இடங்களுக்குப் போனாலும், திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் என மக்களோடு பழகக்கூடிய, அவங்களோடு இருக்கும் நேரத்தையே பொன்னான நேரமாகப் பார்க்கிறேன். சாப்பாட்டிலிருந்து அவங்க செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் அன்பு இனிக்குது. ஐ லவ் யூ ஆல்.'' 

''பெரும்பாலும் சிங்கப்பூரில்தான் இருக்கீங்க, அங்கேயே செட்டில் ஆகியாச்சா?'' 

''அப்படியில்லை. என் கணவர் சிங்கப்பூரில்தான் கிரிக்கெட்டராக இருக்கிறார். எனக்கும் நிறைய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைக்குது. அதனால், சிங்கப்பூருக்கும் சென்னைக்குமாகப் பயணம் செய்துட்டிருக்கேன்.''

''சீரியலில் நடிச்சிருக்கீங்களா? அப்படி ஒரு பிளான் இருக்கா?'' 

''இதுவரை சீரியல் நடிச்சதில்லை. அதில் நடிக்க ஆரம்பித்தால், நிச்சயமாக டைம் இருக்காது. அந்தளவுக்கு பிஸியாக ஓடணும். வேறு எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. அதனால், சீரியலில் கமிட் ஆகாமல் இருக்கேன். நடிக்கலாமா வேணாமான்னு கொஞ்சம் பொருத்து முடிவு செய்வோம்.'' 

''உங்கள் கணவர், குடும்பம் பற்றி...'' 

''என் கணவர் கார்த்திக் சுப்ரமணியன், முழு நேர கிரிக்கெட்டராக ஆவதற்கு முன்னாடி ஐ.டியில் வேலைப் பார்த்துட்டிருந்தார். மனசுக்குப் பிடிச்ச வேலை எல்லோருக்குமே அமையறதில்லை. அவருக்கு கிடைச்சது. அதனால், கிரிக்கெட்டில் இறங்கிட்டார். என்னால் முடிந்தவரை அவருக்கு சப்போர்ட்டா இருக்கேன். அவர் விளையாடறதை எப்பவாவது நேரில் போய்ப் பார்ப்பேன்.'' 

''உங்களால் மறக்கமுடியாத செல்ஃபி என்றால், எதைச் சொல்வீங்க?'' 

''நான் வாழ்க்கையில் ஆசைப்பட்ட அந்த கனவு நிறைவேறிடுச்சு. ரஜினி சாருடன் ஒரு செல்ஃபி எடுத்துக்க ஆசைப்பட்டேன். அவரைச் சந்திக்கிற சந்திச்சபோது ஏற்பட்ட சந்தோஷத்தை அளவிடவே முடியாது. பொதுவா, எல்லா ஃபோட்டோக்களுக்கும் சரியாகப் போஸ் கொடுப்பேன். அன்றைக்கு அழகாகச் சிரித்து ரஜினி சார் போஸ் கொடுத்திருந்தார். அந்த செல்ஃபி எனக்கு ரொம்ப பிடிச்சது.''