Published:Updated:

தெலுங்கு சினிமாவின் புதிய நிபந்தனைகள் - ஷாக்காகும் டாப் நடிகர், நடிகைகள்; முடிவுக்கு வந்த ஸ்டிரைக்

'ஆர்.ஆர்.ஆர்.' படத்திலிருந்து..

நடிகர்கள், டெக்னீஷியன்கள், ஓடிடி ரிலீஸ் என பலவற்றுக்கும் புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

தெலுங்கு சினிமாவின் புதிய நிபந்தனைகள் - ஷாக்காகும் டாப் நடிகர், நடிகைகள்; முடிவுக்கு வந்த ஸ்டிரைக்

நடிகர்கள், டெக்னீஷியன்கள், ஓடிடி ரிலீஸ் என பலவற்றுக்கும் புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

Published:Updated:
'ஆர்.ஆர்.ஆர்.' படத்திலிருந்து..
தெலுங்குப் படவுலகின் தொடர் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்திருக்கிறது. தயாரிப்பாளர்களின் பேச்சு வார்த்தை பலனளித்திருக்கிறது. தெலுங்கு பிலிம் சேம்பர்ஸ் ஆஃப் காமெர்ஸ் பல நிபந்தனைகளையும் வழிமுறைகளையும் வகுத்திருக்கிறது.

தெலுங்குப் படவுலகின் புதிய நிபந்தனைகளைத் தமிழ்த் திரையுலகிலும் நடைமுறைப்படுத்துவது குறித்து, நம்மூர் திரையுலகினர் மத்தியிலும் பேச்சு எழுந்துள்ளது. விரைவில் இங்கும் `ஆரோக்கியமான திரையுலகம்' குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்கிறார்கள். இதுகுறித்துப் பார்க்கலாம்.

டோலிவுட்டில் 'பாகுபலி', `ஆர்.ஆர்.ஆர்' போன்ற ஒருசில படங்களைத் தவிர, பெரிய ஹீரோக்களின் படங்களுக்குக்கூட தியேட்டர்களில் கூட்டம் சேருவதில்லை. படங்களும் ஓடுவதில்லை. படத் தயாரிப்புச் செலவுகள் கன்னாபின்னாவென எகிறிப்போய் நிற்கிறது. தயாரிப்பாளர்களுக்குத் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டுவருகிறது. செலவுகள் ஏறிக்கொண்டே செல்கின்றன. அதனை முறைப்படுத்த வேண்டும். கட்டுப்படுத்த வேண்டும். ஹீரோ உட்பட நடிகர் நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள், தொழிலாளர்கள் என ஒட்டுமொத்தத் திரையுலகினரின் சம்பளத்தைக் குறைப்பது, படத்தின் பட்ஜெட்டைக் குறைப்பது குறித்து, கடந்த சில மாதங்களாகவே அங்குள்ள தயாரிப்பாளர்களிடையே பேச்சு வார்த்தை நடந்தன.

RRR (ஆர்.ஆர்.ஆர்) படம்
RRR (ஆர்.ஆர்.ஆர்) படம்

ஹீரோக்கள் தங்கள் சம்பளத்தை முதலிலேயே வாங்கிக் கொள்ளக்கூடாது. குறிப்பிட்ட சதவிகிதத்தை அட்வான்ஸாக வாங்கிக்கொள்ளலாம். அதன்பிறகு முழுப்படமும் முடிந்த பின்னரே சம்பளத்தை வாங்கிக்கொள்ள வேண்டும் என்பன உட்பட பல கோரிக்கைகளையும் வைத்திருந்தனர். அந்தப் பேச்சு வார்த்தையின் முடிவில் படவுலகில் அறிவிக்கப்படாத வேலை நிறுத்தம் ஆனது. கடந்த மாதம் முதல் தேதியில் தொடங்கப்பட்ட அந்தப் பேச்சு வார்த்தை, தீவிரம் ஆகும் முன்பே சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களின் நிலை கருதி, அவர்கள் படப்பிடிப்பு நடத்த விரும்பினால் நடத்தலாம் எனவும், வெப்சீரீஸ் படப்பிடிப்புகளுக்கு மட்டுமே பச்சைக்கொடி காட்டி, போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இதன்படி தெலுங்கு பிலிம் சேம்பர் நிபந்தனைகள் படி, ''ஒரு படம் திரைக்கு வந்து எட்டு வாரங்கள் ஆனபிறகே ஓ.டி.டி-க்குக் கொடுக்கப்பட வேண்டும். அதைப்போல, படத்தின் டைட்டில் மற்றும் பட போஸ்டர்களில் ஓ.டி.டி நிறுவனம் பற்றிக் குறிக்கப்பட மாட்டாது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

* நடிகர்கள், டெக்னீஷியன்கள் ஆகியோர் இனி தங்கள் உதவியாளர்களுக்குத் தாங்களே சம்பளம் கொடுத்துக்கொள்ள வேண்டும். அவர்களின் சம்பளத்தைத் தயாரிப்பாளர்கள் இனி பொறுப்பேற்க மாட்டார்கள்.

* கால்ஷீட் நேரம், நாள் குறித்த முறையிலும் ஒழுங்குமுறை கடைப்பிடிக்கப்படும். அதுகுறித்த ரிப்போர்ட் ஒன்றை தயாரிப்பாளர்களுக்கு தினமும் அனுப்ப வேண்டும் உட்பட பல நிபந்தனைகளை அங்குள்ள பிலிம் சேம்பர் வகுத்திருக்கிறது. இதில், தியேட்டர்களுக்கான வி.பி.எஃப் குறித்தும், பேச்சு வார்த்தையும் அடுத்து நடக்க உள்ளது.

ஜெயபிரகாஷ்
ஜெயபிரகாஷ்

இதுபற்றி நடிகரும் தயாரிப்பாளருமான ஜெயப்பிரகாஷிடம் கேட்டோம். தெலுங்கில் பிஸியாக உள்ள நடிகர் அவர். ''அவங்க (தெலுங்குப் படவுலகம்) ஸ்டிரைக்னு அறிவிக்கல. எல்லாமே பேச்சுவார்த்தை மூலம், வேலை நிறுத்தம் ஏற்பட்டுடுச்சு. சில விஷயங்களைப் பேசி சரி செய்துகிட்டுப் போகலாம்னுதான் முடிவு பண்ணினாங்க. அது ஒரு ஆரோக்கியமான படவுலகம். வளர்ந்து வரும் துறைனால, எல்லாத்தையும் பேசி சரி செய்த பிறகு வேலையைத் தொடரலாம்னு தயாரிப்பாளர்களிடையே பேச்சு நடத்தினாங்க. புரொடக்‌ஷன் செலவுகளைக் கட்டுப்படுத்துறது, ஓ.டி.டி ரிலீஸ்னு பல விஷயங்களைப் பேசினதா கேள்விப்பட்டேன். ரொம்ப சின்னப் படங்களின் படப்பிடிப்புகளை நடத்தலாம்னு சொன்னதாகவும் கேள்விப்பட்டேன். ஒரு படம் ரிலீஸ் ஆகி, எட்டு வாரங்களுக்குப் பிறகு ஓ.டி.டி-யில் கொடுக்கணும்னு அக்ரிமென்ட் போட்டிருக்காங்க. இதுக்கு முன்னாடி ரெண்டு வாரத்துல ஓ.டி.டி-க்குக் கொடுத்திடுவோம்னு ஏற்கெனவே ஒப்பந்தம் போட்டிருந்தவங்களுக்கு இந்த விதி பொருந்தாது. இப்படி ஆரோக்கியமான விஷயங்கள் பேசியிருக்காங்க'' என்கிறார்.