Published:Updated:

மலைவாழ் மக்களும், கார்ப்பரேட் அரசும்.... 'தேன்' ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தேன்- ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்
தேன்- ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்

மலையில் குறிஞ்சித்தேன் எடுப்பதைத் தொழிலாகக் கொண்ட வேலுவாக தருண்குமார். அவரை காதலித்து மணம் முடிக்கும் பூங்கொடியாக அபர்ணதி. இவர்களுக்குள் மலரும் காதலும், தொடரும் துயரங்களும்தான் 'தேன்'.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

குறிஞ்சிக்குடி... தேனி அருகில் ஒரு மலைக்கிராமம். நவீனத்துவங்கள் எதுவும் ஊடுருவாத எளிய வாழ்க்கை வாழும் மனிதர்கள். இயற்கைதான் அந்த ஊர் மக்களுக்கு எல்லாமே. அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி மலையை கார்ப்பரேட்டுக்கு தாரைவார்க்க நினைக்கிறது அரசு. இதற்கு அந்த ஊர் மக்கள் ஒத்துழைக்க மறுக்கின்றனர். அம்மக்கள் அரசால் எப்படிப் புறக்கணிக்கப்படுகின்றனர், அலைக்கழிக்கப்படுகின்றனர் என்ற கசப்பான யதார்த்தத்தைச் சொல்லும் படம் 'தேன்'.

தேன்- ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்
தேன்- ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்

மலையில் குறிஞ்சித்தேன் எடுப்பதைத் தொழிலாகக் கொண்ட வேலுவாக தருண்குமார். அவரை காதலித்து மணம் முடிக்கும் பூங்கொடியாக அபர்ணதி. இவர்களுக்குள் மலரும் காதலும் தொடரும் துயரங்களும்தான் 'தேன்'. பூங்கொடியை ஒரு கொடிய நோய் சுற்றிக்கொள்ள வேறு வழி இல்லாமல் கீழ் மலையிலுள்ள அரசு மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்கின்றனர். அங்கு அவர்களுக்கு நடக்கும் அவலங்கள், பூங்கொடி உயிர்பிழைக்கிறாரா என விரிகிறது படம்.

சாதாரண காட்சிகளில் மிகவும் சாதாரணமாக நடித்திருக்கும் தருண்குமார் இரண்டாம் பாதியில் மிகவும் அழுத்தமான காட்சிகளில் தன் சிறந்த நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். அரசு இயந்திரத்தால் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து உடைந்துபோவதாகட்டும், மனைவி நிலை கண்டு விம்மி அழுவதாகட்டும் ஏற்கெனவே சில படங்களில் நடித்த தருணுக்கு இந்த கதாபாத்திரம் வெகுசிறப்பு. முதல் பாதி முழுவதும் வெகுளித்தனமான காதல், இரண்டாம் பாதி மீள முடியாத வலி எனத் தேவையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் அபர்ணதி. இவர்களது வாய் பேச முடியாத மகளாக உண்மையில் அந்த ஊரைச் சேர்ந்த ஒரு சிறுமியை நடிக்கவைத்திருக்கிறார்கள். மிரள வைத்திருக்கிறார். மற்றபடி நடிப்பில் பெரிய அனுபவமில்லாத அந்த ஊர் மக்களையே படத்தில் நடிக்கவைத்திருக்கிறார்கள். அவர்கள் கதைக்களத்துக்குப் பொருந்திப் போகிறார்கள் என்றாலும் மிகையான நடிப்பு படத்தின் அழுத்தத்தைக் குறைகிறது. நகைச்சுவை நடிகர் பவா லக்ஷ்மணனுக்கு முக்கிய கதாபாத்திரம். அழுத்தமான படத்தில் ஆங்காங்கே சிரிக்க வைப்பது அவரது அரசியல் நையாண்டிகள்தான்.

தேன்- ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்
தேன்- ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்

'தகராறு', 'வீர சிவாஜி' படங்களை இயக்கிய கணேஷ் விநாயகன் ரூட் மாறி இப்படியான ஓர் ஆழமான படைப்பைத் தர முன்வந்திருப்பதற்கு வாழ்த்துகள். அந்த ஊர் வழக்கங்கள், வட்டார மொழி, வாழ்வியல் என மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். அதன் பலன் திரையில் தெரிகிறது. ஏற்கெனவே இரண்டு படங்கள் இயக்கியிருக்கும் அனுபவம் இப்படியான ஒரு படத்தை இயக்குவதற்கு அவருக்கு நிச்சயம் கைகொடுத்திருக்க வேண்டும். மலை சார்ந்த கதைக்களத்திற்கு அழகியலை அப்படியே பதிவுசெய்திருக்கிறது சுகுமாரனின் கேமரா. படத்திற்குத் தேவையான அழுத்தத்தைத் தருகிறது சன்னத் பரத்வாஜின் இசை!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இறுதிக்காட்சிகள் அவ்வளவு நீளமாக இருந்திருக்க வேண்டாம். குறைவான நேரத்திலேயே அந்த வலியை உணரவைத்திருக்க முடியும். இயற்கை மருத்துவத்தை அந்த ஊர் மக்கள் நம்புவது ஓகே. ஆனால், அதற்காக சில இடங்களில் தற்போதைய நவீன மருத்துவத்தை மொத்தமாக மட்டம் தட்டும் வசனங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். இறுதிக்காட்சிகளில் அந்த வசனத்தை மீண்டும் ஓட விடுவதால் ஒரு கதாபாத்திரம் சொல்லும் வசனமாக அதைக் கடந்துசெல்ல முடியவில்லை. மின்சாரம் வந்துவிட்ட ஊரில் யாரிடமும் அடிப்படை அடையாள அட்டை இருக்காதா, அந்த மலையில் என்ன மாதிரியான தொழிற்சாலை செயல்படுகிறது எனப் பல கேள்விகள் மனதில் தேங்கி நிற்கின்றன.

ஆனால், அரசு இயந்திரம் தொடர்ந்து நிகழ்த்தும் அடக்குமுறைகளுக்கும் அவலங்களுக்கும் எதிராக மிக முக்கிய கேள்விகளை அழுத்தமாக முன்வைத்த விதத்தில் 'தேன்' மனதுக்குள் நிற்கிறது!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு