Published:Updated:

''இயக்குநராகும் தம்பி ராமையா மகன்!"

எம்.குணா

'அதாகப்பட்டது மகாஜனங்களே', 'மணியார் குடும்பம்', 'திருமணம்' ஆகிய படங்களில் நடித்தவர், தம்பி ராமையாவின் மகன், உமாபதி ராமையா.

 உமாபதி ராமையா
உமாபதி ராமையா

'அதாகப்பட்டது மகாஜனங்களே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் தம்பி ராமையாவின் மகன், உமாபதி ராமையா. பிறகு, தம்பி ராமையா இயக்கிய 'மணியார் குடும்பம்', சேரன் இயக்கிய 'திருமணம்' ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார். தற்போது, தந்தை வழியில் இவருக்கும் இயக்குநராகும் ஆசை வந்திருக்கிறது.

உமாபதி ராமையா
உமாபதி ராமையா

தானே இயக்கி, நடிக்க முடிவெடுத்திருக்கும் உமாபதி ராமையா, தனது முதல் படத்திற்கு ஆக்‌ஷன் கதை ஒன்றைத் தேர்வு செய்திருக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடங்கவிருக்கிறது. ஆக்‌ஷன் படம் என்பதால், தனக்கு ஜோடியாக நடிக்க கராத்தேயில் பிளாக் பெல்ட் பெற்றிருக்கும் யாஷிகாவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார், உமாபதி ராமையா. யாஷிகா - உமாபதி இருவருக்குமான சண்டைக் காட்சிகள் படம் முழுக்க இருக்கிறதாம்.

அதேசமயம், 'மணியார் குடும்பம்' படத்திற்குப் பிறகு, நடிப்பில் தீவிரமாகக் கவனம் செலுத்திக்கொண்டிருந்த தம்பி ராமையாவும், மீண்டும் இயக்குநராகக் களமிறங்கவிருக்கிறார். விரைவில் தொடங்கவிருக்கும் இப்படத்திற்கு, பழம்பெரும் இயக்குநரரும், கதாசிரியருமான வி.சி.குகநாதன் கதை எழுதுகிறார். அப்பா தம்பி ராமையா, மகன் உமாபதி ராமையா இருவரும் இப்போது, 'இயக்குநர் - நடிகராக' பிஸி!