Published:Updated:

கடவுள் மறுப்பு, கம்யூனிஸம், சாதியம்... மூவர் பகிர்ந்த மூன்று பதில்கள்!

தமிழச்சி தங்கபாண்டியன்
தமிழச்சி தங்கபாண்டியன்

இன்று நேற்றல்ல, என்றைக்குமே, ‘எந்த மதத்தினரையும் புண்படுத்தக்கூடாது. அனைத்து மதத்தினரையும் ஏற்றுக்கொண்டு நடந்துகொள்ள வேண்டும்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

‘‘கருணாநிதி காலகட்டத்தில், கடவுள் மறுப்பு பேசிவந்த தி.மு.க., இன்றைக்கு ‘தி.மு.க-வில் 90 சதவிகிதத்தினர் இந்துக்கள்தான் இருக்கிறார்கள்’ என்று சொல்லுகிற இடத்துக்கு வந்துவிட்டதே?’’

தமிழச்சி தங்கபாண்டியன்: ‘‘இன்று நேற்றல்ல, என்றைக்குமே, ‘எந்த மதத்தினரையும் புண்படுத்தக்கூடாது. அனைத்து மதத்தினரையும் ஏற்றுக்கொண்டு நடந்துகொள்ள வேண்டும்’ என்பதுதான் தி.மு.க-வின் கொள்கை; நிலைப்பாடு. தி.மு.க தலைவர்களில் சிலர் ‘கடவுள் மறுப்பு’ கொள்கை கொண்டவர்களாக இருக்கலாம். ஆனால், அதற்காக கடவுளர்களை நிந்திப்பவர்களாக இருந்தது கிடையாது. ‘நாட்டார் வழிபாட்டில் நம்பிக்கைகொண்டவள் நான்’ என்று ஏற்கெனவே விகடன் பேட்டியிலும் கூறியிருக்கிறேன். ஆனாலும்கூட பா.ஜ.க., அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் அரசியலுக்காக ‘இந்துக்களுக்கு எதிரான கட்சி தி.மு.க’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டினால், இந்துக்கள் பயன்பெறும் வகையிலான முன்னெடுப்புகளை எடுத்தது தி.மு.க தான்.’’

கடவுள் மறுப்பு, கம்யூனிஸம், சாதியம்... மூவர் பகிர்ந்த மூன்று பதில்கள்!

- ஆனந்த விகடன் இதழில் விரிவான பேட்டியை வாசிக்க > “பிரசாந்த் கிஷோரை நம்பி மட்டும் தி.மு.க. இல்லை!” - தமிழச்சி தங்கபாண்டியன் சிறப்புப் பேட்டி https://www.vikatan.com/government-and-politics/politics/exclusive-interview-with-dmk-mp-thamizhachi-thangapandian

‘` ‘சங்கத்தலைவன்’... கம்யூனிஸ்ட் கதையில் கருணாஸ் எப்படி?’’

கடவுள் மறுப்பு, கம்யூனிஸம், சாதியம்... மூவர் பகிர்ந்த மூன்று பதில்கள்!

``நாயகன் ரங்கன் கேரக்டரும் அவர் நண்பரான கம்யூனிஸ்ட் தோழரின் கேரக்டரும்தான் நாவலில் பிரதானமா இருக்கும். நெசவாளரான ரங்கன் கேரக்டருக்கு, நெசவாளர்கள் சங்கத் தலைவரான அந்த கம்யூனிஸ்ட் தோழர் பண்ற போராட்டங்கள் மேல பெரிய நம்பிக்கையோ ஈடுபாடோ இருக்காது. ஆனால், ஒரு கட்டத்தில் முதலாளித் துவத்தைப் பற்றியும் கம்யூனிஸ்ட் போராட்டங்களைப் பற்றியும் ரங்கனுக்குச் சரியான புரிதல் கிடைக்கும். அதன்பிறகு இரண்டு பேரும் சேர்ந்து பயணிப்பாங்க. ரங்கன் கேரக்டர் கம்யூனிஸ்ட் தோழரோடு சேரும் வரைக்கும் சில நகைச்சுவைக் காட்சிகளும் இருக்கும். அதுக்கும் கருணாஸ் சரியா இருப்பார்னு தோணுச்சு. கதை கேட்டதில் இருந்தே ரொம்ப ஈடுபாட்டோடு இருந்தார். நிஜ வாழ்க்கையில் அவர் வேறமாதிரியான கட்சித் தலைவரா இருந்தாலும், இந்தக் கதைக்கு அடிப் படையான சித்தாந்தத்தைப் புரிஞ்சிக்கிட்டு, அதுக்கு எவ்வளவு உண்மை சேர்க்க முடியுமோ அதைப் பண்ணியிருக்கார். எந்த சீன்லயும் அவர் மாற்றங்களோ, அதுகுறித்து மறுப்போ எதுவுமே சொல்லாமல் நடிச்சுக்கொடுத்தார்.’’

- ஆனந்த விகடன் இதழில் விரிவான பேட்டியை வாசிக்க > "எதிர்க்குரல் இல்லாமல் எதுவும் நடக்காது!" - இயக்குநர் மணிமாறன் பேட்டி https://cinema.vikatan.com/tamil-cinema/exclusive-interview-with-actor-manimaran

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"சாதியத்தை வேரறுத்துத் தான் மனிதத்தை மீட்டெடுக்கணும்!" - இயக்குநர் போஸ் வெங்கட்

சிறுவயது தொடங்கி நான் பார்த்த சாதியத்தின் கோர முகத்திற்குத் தீர்வு தேடியபோது பெரியார், மார்க்ஸ், அம்பேத்கர் போன்றவர்களைத் தேடிப் படித்தேன். சென்னைக்கு வந்த புதிதில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் என் ஆட்டோவில் பயணித்தனர் ஒரு காதல் ஜோடி. வெளியூரிலிருந்து சென்னைக்குத் தஞ்சம் வந்த அந்தக் காதல் ஜோடியின் கதை என் மனதை ரணமாக்கியது. மனித சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள் உருவாக்கும் ஆதிக்க உளவியல் எனக்கு அதிர்ச்சியை அளித்தது. அப்போதிருந்து என் மனதில் நான் உருவாக்கிய கதைதான் ‘கன்னி மாடம்’...

கடவுள் மறுப்பு, கம்யூனிஸம், சாதியம்... மூவர் பகிர்ந்த மூன்று பதில்கள்!

...எங்க ஊரில் மதங்களைக் கடந்த, சாதியைக் கடந்த பல மனுஷங்களோட அன்பை மட்டுமே சுமந்து சென்னை வந்து வாழ்ந்துகிட்டிருக்கேன். அந்தச் சாதி, மதம் ரெண்டுக்காகவும் மனிதன்கிற தன் அடையாளத்தையே அழிச்சுக்கறப்போ அதைத் தாங்கிக்க முடியலை. சாதியை, மதத்தைக் கடந்த மனிதம் நிறைய பேர்கிட்ட இருக்கு. சாதியத்தை வேரறுத்துத் தான் அந்த மனிதத்தை மீட்டெடுக்கணும்” என்று போஸ் வெங்கட் குரல் அவ்வளவு அழுத்தம்!

- ஆணவக்கொலைகளின் சாதிய உளவியலை அதிர்ச்சியளிக்கும் வகையில் பேசிய ‘கன்னிமாட’த்தின் உறுப்பினர்களுடனான சந்திப்பை, ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > "இது 18 வருட கதை!" https://cinema.vikatan.com/tamil-cinema/discuss-with-kanni-maadam-movie-team

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு