Published:Updated:

``அந்தப் பாட்டுக்கு அப்புறம்தான் எனக்கும் சிம்புவுக்கும் பிரச்னை வந்தது!''- `தட்றோம் தூக்றோம்' அருள்

இயக்குநர் அருள்
இயக்குநர் அருள்

`Demonetization anthem' வெளியான சமயத்தில் பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்தது `தட்றோம் தூக்குறோம்.' படம், இந்த வருடம் வெளியாகும் நிலையில் அதன் இயக்குநரான அருளிடம் பேசினோம்.

பணமதிப்பிழப்பு சமயத்தில் மக்களுக்கு நடந்த பிரச்னைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்,`தட்றோம் தூக்றோம்.' இதில் கடந்த வருடம் கபிலன் வைரமுத்து வரிகள் எழுத, சிம்பு பாடிய பாடல் `Demonetization anthem'. வெளியான சமயத்தில் பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்தது அந்தப் பாடல். படம், இந்த வருடம் வெளியாகும் நிலையில் அதன் இயக்குநரான அருளிடம் பேசினோம்.

தட்றோம் தூக்றோம்
தட்றோம் தூக்றோம்

"ஐடில 20 வருஷமா வேலைபார்த்துவிட்டு, சினிமாவுக்குள்ள நுழைஞ்சவன் நான். அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ஃபிலிம் மேக்கிங் கத்துக்கிட்டு, `சபாஷ் நாயுடு' உள்ளிட்ட சில படங்கள்ல வேலைபார்த்திருக்கேன். அந்த அனுபவம் கொடுத்த தைரியத்துலதான் `தட்றோம் தூக்றோம்' படத்தை ஆரம்பிச்சேன். இது ஒரு பக்காவான கமர்ஷியல் யூத் சப்ஜெக்ட் படம். 2016 சமயத்துல வந்த டீமானிடைசேஷன் சம்பவத்தின்போது நடந்த சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையா வெச்சுதான் இந்தக் கதை நகரும்."

"18 வயசுப் பசங்க மூணு பேர், தங்களோட வாழ்க்கையில முன்னேறணும்னு நினைக்கும்போது அவங்க வாழ்க்கை டீமானிடைசேஷன்னால எந்தளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பதுதான் படத்தோட ஒன்லைன். அந்தச் சமயத்துல ஏர்போர்ட், ஹாஸ்பிட்டல்னு சாதாரண மக்கள் சந்திச்ச பாதிப்புகளை நான் நேரடியா பார்த்திருக்கேன்; நானும் பாதிக்கப்பட்டிருக்கேன். இந்த மாதிரி ஒரு படத்துக்குக் களத்தையும் கதையையும் புரிஞ்ச ஒரு ஆள்தான் வசனங்களும் பாடல்களும் எழுதணும்னு எதிர்பார்த்தோம்.

கபிலன் வைரமுத்து
கபிலன் வைரமுத்து

இந்தப் படத்தோட இசையமைப்பாளர் பாலமுரளி எனக்கு ஃபிரெண்ட்தான். அவர் மூலமாதான் எனக்கு கபிலன் வைரமுத்து அறிமுகமானார். இந்தப் படத்தோட கதையைக் கேட்டதும் கபிலனுக்கு ரொம்பப் பிடிச்சிடுச்சு. உடனே வசனங்களையும் பாடல்களையும் எழுத கால்ஷீட் ஒதுக்கினார். கபிலன் வைரமுத்து டாஸ்மாக் மாதிரியான விஷயங்களுக்கு எதிரானவர். படத்துல டாஸ்மாக் குறித்து விவாதம் நடக்கிற மாதிரியான சில காட்சிகள் இருக்கும். அதுக்கான வசனங்களை ரொம்பவே சூப்பரா பண்ணியிருக்கார்."

"ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே வெளியான பாடல்தான் டீமானிடைசேஷன் ஆன்தம். சிம்பு, கபிலன் வைரமுத்து, பாலமுரளி பாலு இவங்க எல்லாம் சேர்ந்ததால நடந்த மேஜிக் அது. பணமதிப்பிழப்பு சமயம் மக்கள் எதிர்கொண்ட பாதிப்புகள் மட்டும்தான் இந்தப் பாட்டுல இருக்குமே தவிர, தனிப்பட்ட நபரையோ, கட்சியையோ நாங்க குறிப்பிட்டிருக்க மாட்டோம். ஆனா, அந்தப் பாடல் வந்ததுக்கு அப்பறம்தான் எனக்கும் சிம்புவுக்கும் எதிரா நிறைய பிரச்னைகள் வந்தன. அவற்றையெல்லாம் கடந்துதான் படத்தோட ஷூட்டிங்கை முடிச்சோம்" என்று சொன்னவரிடம், படத்தில் `அசுரன்' படப் புகழ் டீஜே கமிட்டானது குறித்து கேட்டோம்.

டீஜே
டீஜே
``அப்புறம் எங்கிருந்து ட்ரீம் புராஜெக்ட் பண்றது?" - பிரச்னை பகிரும் சிம்பு #VikatanVintage

"'அசுரன்' படத்துல கமிட்டாகுறதுக்கு முன்னாடியே இந்தப் படத்துக்குள்ள வந்துட்டார் டீஜே. ஒரு நண்பர் மூலமா டீஜேவை எனக்கு ரொம்ப நாளைக்கு முன்னாடியே தெரியும். ஆனா, அவரை வெச்சுதான் படத்தை இயக்குவேன்னு நான் நினைக்கலை. `தட்றோம் தூக்றோம்' கதைக்கு 18 வயசுல பசங்களைத் தேடிக்கிட்டிருந்தோம். அந்தச் சமயம் எனக்கு டீஜேவுடைய ஞாபகம் வந்தது. தன்னுடைய ஆல்பம் மூலம் இளைஞர்கள் மத்தியில அவர் நல்ல பிரபலமாவும் இருந்தார். புதுசா ஒருவரைத் தேடிக் கண்டுபிடிக்கிறதுக்குப் பதில், இவரையே கமிட் பண்ணிடலாம்னு இவர்கிட்ட கதை சொன்னேன். கதை பிடிச்சு, உடனே ஓகே சொல்லிட்டார். இந்தப் படத்துல `நியூட்டன்'ங்கிற பாடலும் பாடியிருக்கார். படத்துல இருக்கிற மூணு பாடல்களுமே நல்லா வந்திருக்கு. பாடல்களைப் பிடித்த மாதிரியே படமும் மக்களுக்குப் பிடிக்கும்னு நம்புறேன்'' என தம்ஸ் அப் காட்டுகிறார் அருள்.

அடுத்த கட்டுரைக்கு