Published:Updated:

புக் பண்ணியாச்சு... புக் பண்ணியாச்சு... #Nesamani டைட்டில் புக் பண்ணியாச்சு!

சனா

Ace media நிறுவனம் 'நேசமணி' என்று படத்தின் பெயரை பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளனர்.

வடிவேலு
வடிவேலு

சமூகவலைதளங்கள் முழுக்க `ப்ரெண்ட்ஸ்' படத்தில் நடிகர் வடிவேலு நடித்த `நேசமணி' கேரக்டர் இரண்டு நாள்களாக வைரலானது. உலகளவில் நேசமணி பெயர் டிரெண்டிங்கில் இடம்பிடித்தும் இருந்தது. பெரிய பிரபலங்கள் பலரும்கூட இந்த #Nesamani ஹேஸ்டேக்கைப் பயன்படுத்தியிருந்தனர்.

வடிவேலு
வடிவேலு

பலவகையான மீம்ஸ், வீடியோக்கள் எல்லாம் #Nesamani ஹேஸ்டேக்குடன் வெளியாகின. குறிப்பாக இந்தப் படம் வெளியாகி கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு மேலாகி விட்டது. மலையாள ரீமேக்கான இப்படத்தை இயக்குநர் சித்திக் எடுத்திருந்தார்.

மேலும், ஊடகங்களில் நடிகர் ரமேஷ் கண்ணா இந்தப் படத்தில் தான் ஏற்று நடித்த கிருஷ்ணமூர்த்தி கேரக்டர் குறித்து பேசினார். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு Ace media நிறுவனம் `நேசமணி' என்று படத்தின் பெயரை பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளனர். படத்தை வேல்ஸ் என்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நேசமணி
நேசமணி