Election bannerElection banner
Published:Updated:

அமைச்சர்களை சந்தித்தார்களா அஜித்தின் `முன்னாள்' நண்பர்கள்... நடந்தது என்ன?!

அஜித்
அஜித்

அஜித் தரப்பு அறிக்கை வெளியிட காரணம் என்ன?

நடிகர் அஜித் தரப்பிடமிருந்து ஒரு அறிக்கை வருகிறது என்றால் நிச்சயம் அதுதான் அன்றைய நாளில் பேசு பொருளாக இருக்கும். அப்படி அவரது சட்ட ஆலோசகர் பரத்திடம் இருந்து நேற்று ஒரு அறிக்கை வந்தது.
அஜித்
அஜித்

அதில், "சமீப காலமாக ஒரு சில தனி நபர்கள் பொது வெளியில் எனது கட்சிக்காரர் சார்பாகவோ அல்லது அவர் பிரதிநிதிபோலவோ அனுமதியின்றி தங்களை முன்னிலைப்படுத்தி வருவதாக சில சம்பவங்கள் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளன. இதைத் தொடர்ந்து, தன்னுடன் பல வருடங்களாக பணியாற்றி வரும் சுரேஷ் சந்திரா மட்டுமே தன்னுடைய அனுமதி பெற்ற பிரதிநிதி என்று அறிவிக்கிறார்.

`எவனென்று நினைத்தாய்'... சைலன்ட் ரஜினி... லோகேஷுடன் களத்தில் கமல்! #VikatanExclusive

மேலும், தன்னுடைய பெயரைப் பயன்படுத்தி யாரேனும் அணுகினால் இவரிடம் தெரிவிக்க வேண்டும். இதை மீறி இத்தகைய நபர்களிடம் தன் சம்பந்தமாக யாரேனும் தொழில் மற்றும் வர்த்தக ரீதியாக தொடர்பில் இருந்து அதனால் அவர்களுக்கு பாதகம் ஏற்பட்டால் அதற்கு என் கட்சிக்காரர் எந்த விதத்திலும் பொறுப்பில்லை" என்று குறிப்பிட்டிருந்தது.

அஜித்
அஜித்

அஜித் பெயரை சொல்லி அமைச்சர்களிடம் சிலர் பேசியிருக்கிறார்கள். அதனால்தான் இந்த அறிக்கை வந்திருக்கிறது என்கிறார்கள் இந்த விவகாரம் பற்றி அறிந்தவர்கள். அவர்கள் தரப்பில் விசாரித்தபோது, "அஜித்துடன் இருந்த சிலர் இப்போது அவரிடம் இல்லை. அதேபோல் சிலர் அஜித்தின் நண்பர்கள் என வெளியே அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் முன்னாள் நண்பர்களே. இப்போது அவர்களுக்கும் அஜித்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் யாரேனும் அஜித் பெயரைப் பயன்படுத்தி, அது யாருக்கும் பாதகமாக மாறினால் அதற்குதான் பொறுப்பல்ல. தன்னுடைய அதிகாரபூர்வ பிரதிநிதிகள் இவர்கள்தான் என்பதை தெளிவுப்படுத்தியதோடு ஒரு முன்னெச்சரிக்கையாக இருக்கவுமே இந்த அறிக்கை" என்றார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு