Published:Updated:

அன்று விஜய் - தோனி, இன்று விக்ரம் - தோனி... திடீர் சந்திப்புகளின் பின்னணி என்ன?!

தோனி - விக்ரம் சந்திப்பு

'கோப்ரா' படத்தில் கிரிக்கெட்டர் இர்பான் பதான் நடிக்கும் விஷயத்தையும் தோனியிடம் விக்ரம் சொல்ல... ஆச்சர்யமான தோனி, இர்பான் நடிப்பு குறித்தும் கேட்டு அறிந்திருக்கிறார்.

அன்று விஜய் - தோனி, இன்று விக்ரம் - தோனி... திடீர் சந்திப்புகளின் பின்னணி என்ன?!

'கோப்ரா' படத்தில் கிரிக்கெட்டர் இர்பான் பதான் நடிக்கும் விஷயத்தையும் தோனியிடம் விக்ரம் சொல்ல... ஆச்சர்யமான தோனி, இர்பான் நடிப்பு குறித்தும் கேட்டு அறிந்திருக்கிறார்.

Published:Updated:
தோனி - விக்ரம் சந்திப்பு
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் விஜய்யின் 'பீஸ்ட்' ஸ்பாட்டில் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி - விஜய் இருவரும் சந்தித்தனர். அவர்களின் சர்ப்ரைஸ் சந்திப்பை அவரவர் ரசிகர்கள் இன்னமும் சமூக வலைதளங்களில் கொண்டாடி மகிழ்கின்றனர். அந்த தித்திப்பு கரைவதற்குள் அடுத்து சீயான் விக்ரமை நேற்று சந்தித்திருக்கிறார் தோனி.

விக்ரம் தன் கைவசம் இருந்த படங்களில் 'கோப்ரா', 'பொன்னியின் செல்வன்' படங்களை முடித்துக் கொடுத்துவிட்டார். 'மஹான்' ஒடிடியில் வெளியாகிறது. 'துருவநட்சத்திரம்' கௌதம்மேனனுக்கே தெரியாத வெளிச்சம். விக்ரமுக்கு கிரிக்கெட் பிடித்த விளையாட்டு. தோனியின் தீவிர ரசிகர். பல பேட்டிகளில் அவர் 'தோனி ஒரு சூப்பர் ஹீரோ' என அன்பு பொங்கச் சொல்லியிருக்கிறார்.

தோனி - விக்ரம் சந்திப்பு
தோனி - விக்ரம் சந்திப்பு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த சில வருடங்களுக்கு முன் கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றாலும், விளம்பர படங்களில் நடிப்பதை அதிகரித்து விட்டார். அவர் நடிக்கும் விளம்பரங்களின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் சென்னையில்தான் நடந்து வருகின்றன. விஜய்யுடனான சந்திப்பு நடந்தது கூட தோனி விளம்பர பட ஷூட்டிங் ஒன்றிற்காக சென்னை வந்தபோதுதான்.

நுங்கம்பாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில்தான் தோனி - விக்ரம் சந்திப்பு நடந்தேறியிருக்கிறது. ஏற்கெனவே அந்த ஹோட்டலில் இருந்த விக்ரம், தோனியை பார்த்துவிட, தோனியும் விக்ரமை பார்த்துவிட 'ஹாய்' பூரிப்புகள். ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துவிட்டு 15 நிமிடங்கள் பேசியிருக்கிறார்கள். 'கோப்ரா' படத்தில் கிரிக்கெட்டர் இர்பான் பதான் நடிக்கும் விஷயத்தையும் தோனியிடம் விக்ரம் சொல்ல... ஆச்சர்யமான தோனி, இர்பான் நடிப்பு குறித்தும் கேட்டு அறிந்திருக்கிறார்.

அப்பறம் என்ன தோனி விரைவில் கோலிவுட்டில் அறிமுகமாவாரா?

ஒருவேளை தோனி தமிழ் சினிமாவில் அறிமுகமானால், அவர் எந்தத் தமிழ் ஹீரோவுடன் இணைந்து நடிக்கலாம்? கமென்ட்டில் சொல்லுங்கள் மக்களே!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism