Published:Updated:

`வலிமை' அஜித்துக்கு 800 சிசி பைக், வில்லனுக்கோ 1300 சிசி பைக்! ஏன் இந்த `பவர்' வித்தியாசம்?

'வலிமை' படத்தில் எம்வி அகுஸ்ட்டா பைக்கைத்தான் அஜித் பயன்படுத்துகிறார். ஆனால், மோஷன் போஸ்டரில் இருப்பதோ வேறு பைக்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை அஜித் நடிக்கும் ‘வலிமை’க்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும், டீஸரையும் வெளியிட்டு விட்டு பரபரப்பாக்கிவிட்டது ‘வலிமை’ டீம்! அஜித் ஸ்டைலாக ‘ஸ்டாப்பி’ செய்யும் அந்த நேக்கட் ஸ்போர்ட்ஸ் பைக் பற்றித்தான் பைக் ஆர்வலர்களிடையே பரபரப்பான ஒரு பேச்சு போய்க் கொண்டிருக்கிறது.
Valimai Ajith
Valimai Ajith

பொதுவாக, அஜித்துக்கு எம்வி அகுஸ்ட்டா பைக்தான் ஃபேவரைட் என்பது அஜித் ரசிகர்கள் எல்லோருக்குமே தெரியும். ஆனால், அந்த ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்ட்டரில் இருப்பது அகுஸ்ட்டா இல்லை. கேடிஎம் டியூக் 390 பைக்கை மாடிஃபை செய்ததுபோல இருக்கிறது. இன்னொரு ஆங்கிளில் பார்க்கும்போது Husqvarna பைக் போலவும் இருக்கிறது. ஆனால், ‘வலிமை’ முழுவதும் அஜித் வரப்போவது எம்வி அகுஸ்ட்டா RR புரூட்டேல் 800 (பழைய மாடல்) பைக்கில்தான் என்கிறார்கள். இதற்கு ஏற்ப அவர் வீலிங் செய்வதுபோல் ஏற்கெனவே வந்த பைக், எம்வி அகுஸ்ட்டாதான்.

அஜித்துக்கு ஏன் அகுஸ்ட்டா பிடித்திருக்கிறது… பைக் பிரியர்களுக்காக எம்வி அகுஸ்ட்டா பற்றி ஒரு சின்ன ரிவ்யூ!
Power is a state of mind
Power is a state of mind
MV Agusta Brutale 800 ROSSO
MV Agusta Brutale 800 ROSSO

எம்வி அகுஸ்ட்டா, இத்தாலி நாட்டைச் சேர்ந்த பைக் நிறுவனம். உலகம் முழுதும் பைக்/கார் டிசைன் மற்றும் கட்டுமானத்துக்குப் பெயர் பெற்றவை இத்தாலி நிறுவனங்கள். பெயருக்கேற்ற வெறித்தனமான நேக்கட் டிசைனைக் கொண்டிருக்கும் புரூட்டேல் RR பைக்கில் 1,000 சிசி மற்றும் 800 சிசி என இரண்டு இன்ஜின் கொண்ட மாடல்கள் இருக்கின்றன. 800 சிசியிலும் Rosso, RR, RR SCS என 3 வேரியன்ட்கள் உண்டு. ஆனால், ‘வலிமை’ படத்தில் அஜித் தெறிக்கவிட்டிருப்பது RR 800 பைக்தானாம்.

அஜித்துக்கு பொதுவாக டுகாட்டி, பிஎம்டபிள்யூ போன்ற நேக்கட் பைக்குகள் அல்லது ஸ்போர்ட்ஸ் பைக்குகள் மீதுதான் விருப்பம் என்பதால், எம்ஜி அகுஸ்ட்டாவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்! இந்த இன்லைன் 3 சிலிண்டர், 798சிசி இன்ஜினில் இருப்பது 12 வால்வுகள். இதன் டார்க் 8.87kgm. பிக்–அப்பில் சும்மா தெறி காட்டும் இந்த புரூட்டேல். இந்த 6 ஸ்பீடு கியர்பாக்ஸில் ஒரு ஸ்பெஷல் – 20 கிமீ வேகத்தில் 6–வது கியரில் போனாலும் சரி; 100 கிமீ வேகத்தில் 2–வது கியரில் போனாலும் சரி – இன்ஜின் Knocking இருக்காது. இதன் டாப் ஸ்பீடு 244 கிமீ.

இந்த பைக்கைக் கையாள்வதற்குக் கொஞ்சம் கட்டுமஸ்த்தாக இருந்தால்தான் முடியும். காரணம், இதன் எடை அப்படி. புரூட்டேலின் எடை 175 கிலோ. இதை உயரம் குறைவானவர்கள் ஓட்டுவதும் கொஞ்சம் சிரமம். காரணம், இதன் சீட் உயரம் 830 மிமீ. இதிலுள்ள மோனோ ஷாக் சிங்கிள் அப்ஸார்பரின் சஸ்பென்ஷன் டிராவலும் அதிகம் என்பதால், முதுகுவலியும் இருக்காது. இந்த ஸ்ப்ரிங்குகளை நாமே நம் வசதிக்கு ஏற்ப அட்ஜஸ்ட்டும் செய்து கொள்ளலாம்.

Valimai Movie Updates
Valimai Movie Updates
Suzuki B-King
Suzuki B-King

‘வலிமை’ படத்தில் அஜித்குமாருக்கு அகுஸ்ட்டா நண்பன் என்றால், வில்லனுக்கும் ஒரு நண்பனாக வருகிறது இன்னொரு சூப்பர் பைக். அது சுஸூகி B-King. `RX100’ எனும் தெலுங்குப் படத்தில் வில்லனாக நடித்த கார்த்திகேயா கும்மகொண்டா என்பவர்தான் வலிமையில் அஜித்துக்கும் அகுஸ்ட்டாவுக்கும் வில்லனாக சுஸூகி B-King–ல் ஆக்ஸிலரேட்டர் முறுக்குகிறார்.

எல்லாம் ஓகே! ஹீரோவான அஜித்துக்கு 800 சிசி பைக், வில்லனுக்கோ 1,300 சிசி பைக் ஏன்? அஜித்கிட்ட இருந்து தப்பிக்கணும்ல… அதுக்காக இருக்கலாம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு