Published:Updated:

``நீ விளையாடுறது என்கிட்ட இல்ல... எமன்கிட்ட!'' - விக்ரம் ஆக்‌ஷனில் கலக்கும் `கடாரம் கொண்டான்' டிரெய்லர்!

விக்ரம், அக்‌ஷரா ஹாசன் நடித்த 'கடாரம் கொண்டான்' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

'சாமி ஸ்கொயர்' படத்தை அடுத்து விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `கடாரம் கொண்டான்’. இந்தப் படத்தில் விக்ரமுடன் நடிக்கிறார் அக்ஷரா ஹாசன். விக்ரமின் 56-வது படமான இந்தப் படத்தை ராஜேஷ் எம். செல்வா இயக்கி உள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷ்னல் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டரை கமல்ஹாசனின் பிறந்தநாளன்று வெளியிட்டிருந்தனர். இந்தப் படத்தில் விக்ரமின் லுக் அனைவராலும் பேசப்பட்டது.

விக்ரம்
விக்ரம்
கடாரம் கொண்டான்

இப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் மலேசியாவில் எடுத்துள்ளனர். ஜிப்ரான் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் விக்ரம் ஒரு பாடலும் ஸ்ருதிஹாசன் ஒரு பாடலும் பாடியுள்ளனர். ஶ்ரீனிவாஸ் குதா ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

முழுக்க முழுக்க ஆக்‌ஷன் நிறைந்த இதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
விக்ரம்
விக்ரம்

இந்நிலையில், இதன் டிரெய்லரை வெளியிட்டுள்ளது படக்குழு. டீசரை காட்டிலும் டிரெய்லரில் அதிகப்படியான ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்து இருக்கின்றன. 'என்னைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னா, இன்னும் கொஞ்சம் காத்திருக்கணும்!' என்று விக்ரம் மலாய் மொழியில் பேசுவது போல டிரெய்லர் முடிவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.