Published:Updated:

`` `அரங்கேற்றம்' சினிமா... அனுமதிக்கவைத்த அம்மா!'' - டேனியல் பாலாஜியின் `தியேட்டர்' அனுபவம்

டேனியல் பாலாஜி
டேனியல் பாலாஜி

தமிழ்நாட்டில் எப்போது தியேட்டர்கள் திறக்கப்படும் என்று தெரியவில்லை. அதனால் பிரபலங்களிடம் 'உங்கள் மறக்க முடியாத தியேட்டர் அனுபவங்களைச் சொல்லுங்கள்' என்று கேட்டபோது அவர்கள் பகிர்ந்துகொண்ட சுவாரஸ்யங்கள்.

பாக்கியம் சங்கர்

"தமிழ்நாடு, அகஸ்தியா, தங்கம்னு வடசென்னையில நான் படம் பார்த்த தியேட்டர்களெல்லாம் இன்னைக்கு இல்லை. சினிமா பார்க்கப் போன நாள்கள் கொண்டாட்டமான அனுபவமா இருந்தது. இடைவேளையில் சாப்பிட வீட்டுல இருந்து தின்பண்டங்களை எடுத்துட்டுப்போயிடுவோம்.

'தங்கம்' தியேட்டர்ல '7ஜி ரெயின்போ காலனி' பார்க்கப் போனப்ப அப்படியொரு கூட்டம். தியேட்டர் வாசல் குறுகியதா இருக்கும். அடிச்சுப் புடிச்சு உள்ளே நுழைஞ்சப்ப சட்டை கசங்கி, அங்கங்க கிழிஞ்சு அதுக்கு மேல அதைப்போட்டிருக்கிறதுல அர்த்தமில்லைன்னு கழட்டிட்டு சட்டை இல்லாத உடம்போட பார்த்தேன். கொஞ்ச நேரம் கூச்சமா இருந்தது. ஆனா அக்கம்பக்கம் என்னைப் போலவே நிறைய பேர் சட்டை இல்லாம இருந்ததால ஒண்ணும் தெரியலை!'"

டேனியல் பாலாஜி

லதாராவ்-ராஜ்கமல் -  டேனியல் பாலாஜி  
 - சிங்கப்பூர் சுகன்யா-
லதாராவ்-ராஜ்கமல் - டேனியல் பாலாஜி - சிங்கப்பூர் சுகன்யா-

"எங்க வீட்டுப் பக்கத்துல இருந்த 'மேகலா' தியேட்டர்ல 'அரங்கேற்றம்' ரிலீசாகியிருந்தது. எங்க அப்பா அம்மா பார்த்துட்டு வந்து, 'நல்ல படம்டா' நீயும் போய் பார்த்துட்டு வா'னு சொன்னாங்க. நான் தியேட்டருக்குப் போனா, 'இது அடல்ட் படம்; உனக்கெல்லாம் அனுமதி இல்லை'ன்னு டிக்கெட் கொடுக்க மறுக்கிறாங்க.

வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட சொன்னதும், 'வா எங்கூட'ன்னு என்னைக் கூட்டிட்டு தியேட்டருக்கே வந்துட்டாங்க. டிக்கெட் கவுன்டர்ல 'பெத்தவங்க எங்களுக்குத் தெரியாதா, எங்க பையன் எந்தப் படத்தைப் பார்க்கணும், பார்க்கக் கூடாதுன்னு. இந்தப் படத்தை அவன் பார்க்கணும்'னு சொல்லி டிக்கெட் வாங்கி உட்கார வச்சுட்டுத்தான் போனாங்க."

- இவர்களைப்போலவே சரவணன், பிரியா மணி, 'சூப்பர் சிங்கர்' மாளவிகா ராஜேஷ், லதாராவ்-ராஜ்கமல், சிங்கப்பூர் சுகன்யா, தம்பி ராமையா, ராதிகா சரத்குமார் மற்றும் யூகி சேது ஆகியோர் பகிர்ந்த மறக்க முடியாத தியேட்டர் அனுபவங்களை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > வெள்ளித்திரையில் காண்க! https://bit.ly/35niORt

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு