Published:Updated:

“சினிமா மூலம் முறையிடலாம்!”

தேன் - படம்
பிரீமியம் ஸ்டோரி
தேன் - படம்

எல்லாக் கலைஞர்களும் ஏங்குறதும் எதிர்பார்க்கிறதும் அங்கீகாரத்துக்குத்தானே.

“சினிமா மூலம் முறையிடலாம்!”

எல்லாக் கலைஞர்களும் ஏங்குறதும் எதிர்பார்க்கிறதும் அங்கீகாரத்துக்குத்தானே.

Published:Updated:
தேன் - படம்
பிரீமியம் ஸ்டோரி
தேன் - படம்

ஒரு படம் வெளியானபிறகு, அதைச் சிலாகித்துப் பேசுவது இயல்புதான்.வெளியாவதற்கு முன்பே, பேசப்படுவது சில படங்கள்தான். ‘தேன்’ அந்த ரகம். பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, 40-க்கும் மேற்பட்ட விருதுகளைக் குவித்திருக்கிறது ‘தேன்.’ “அப்படியென்ன ஸ்பெஷல் படத்தில்?” இயக்குநர் கணேஷ் விநாயகனைச் சந்தித்துக் கேட்டேன்.

“சினிமா மூலம் முறையிடலாம்!”

“ ‘தகராறு’, ‘வீரசிவாஜி’ படங்களுக்குப் பிறகு மறுபடியும் ஒரு கமர்ஷியல் படம் பண்ணலாம்னு யோசிச்சேன். அந்தத் தருணத்துல, ஆம்புலன்ஸ் கிடைக்காததால கைக்குழந்தையைத் தோளில் போட்டு, இறந்துபோன தன் மனைவியை 14 கி.மீ சுமந்துபோய் அடக்கம் செஞ்ச ஒரு கணவரைப் பற்றிய செய்தி பரபரப்பா ஓடிக்கிட்டிருந்துச்சு. அது எனக்குள்ள பெரிய தாக்கத்தை ஏற்படுத்துச்சு. அவருடைய வலியைத் தாண்டி, அவர் தோளில் இருந்த பெண் குழந்தையுடைய வலி எப்படி இருக்கும்ங்கிற சிந்தனையிலதான் இந்தக் கதை தொடங்குச்சு. இதேமாதிரி ஒரு சம்பவம், தேனி மாவட்டத்துல இருக்கிற ஒரு பழங்குடி இளைஞனுக்கும் நடந்தது. ஆதார் கார்டு இல்லை; இடம் தூரமா இருக்குன்னு பல காரணங்களைச் சொல்லி, ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால விறகுகள் கொண்டுபோற வண்டியில இறந்துபோன மனைவியை வெச்சுக் கொண்டுபோயிருக்கார் அவர். அந்தச் சம்பவமும் இந்தக் கதையை எழுதத் தூண்டுதலா இருந்துச்சு. நாட்டுல நடக்கிறதை சினிமா மூலம் அரசாங்கத்துக்கிட்ட முறையிடலாம்னு நினைச்சேன்.”

“சினிமா மூலம் முறையிடலாம்!”

“சம்பந்தப்பட்ட தேனி இளைஞரை சந்திச்சுப் பேசினீங்களா?”

“ஆமாம்... அவர் பேசின விஷயங்கள் அவ்வளவு உருக்கமா இருந்தது. அந்தப் பகுதிக்கே போய் அங்கே வாழும் மக்களின் நிலைமையை நேராப் பாத்தேன். ஆதார் கார்டு பத்திக் கேட்டா, ‘இந்தக் காடுதாங்க எங்களுக்கு ஆதாரம்’னு சொல்றாங்க. சிலருக்கு ரேஷன் கார்டு இருக்கு; சிலருக்கு இல்லை. அவங்க சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். பல விஷயங்கள் ரொம்ப ஆச்சர்யமா இருந்தது. எல்லாத்தையும் படத்துக்குள்ள வெச்சிருக்கேன்.”

“அந்த ஊர் மக்களையே நடிக்க வெச்ச அனுபவம் எப்படியிருந்துச்சு?”

“வேலு-பூங்கொடி கேரக்டர்களில் தருணும் அபர்ணதியும் நடிச்சிருக்காங்க. ரெண்டு பேரையும் ஷூட்டிங்குக்கு முன்னாடியே அந்த ஊருக்குக் கூட்டிப்போய் அந்த மக்களோட பழகவிட்டேன். அவங்க மகளா அந்த ஊர்லயே இருந்த நாலு வயதுக் குழந்தையை நடிக்க வெச்சேன். அந்தக் குழந்தையின் நடிப்பு அபாரமா இருந்தது. காமெடி நடிகர் லட்சுமணனுக்கும் நல்ல கேரக்டர். மத்தபடி, எல்லாமே அந்த ஊர்ல இருக்கிற மக்கள்தான். அந்த மக்கள் எங்களை அணுகின விதமே ரொம்ப ஆச்சர்யமா இருந்தது. நிறைய சீனுக்கு அவங்ககிட்ட இருந்து டிரஸெல்லாம்கூட வாங்கிப் பயன்படுத்தினோம். நம்ம கஷ்டங்களைத்தான் படமா எடுக்கிறாங்கன்னு புரிஞ்சுக்கிட்டு ரொம்ப உறுதுணையா இருந்தாங்க.”

கணேஷ் விநாயகன்
கணேஷ் விநாயகன்

“40க்கும் மேற்பட்ட விருதுகள் கிடைச்சிருக்கு... இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும்னு எதிர்பார்த்தீங்களா?”

“எல்லாக் கலைஞர்களும் ஏங்குறதும் எதிர்பார்க்கிறதும் அங்கீகாரத்துக்குத்தானே. இந்தப் படம் எனக்கு அளவுக்கு அதிகமான சந்தோஷத்தைக் கொடுத்திருக்கு.”

“சினிமா மூலம் முறையிடலாம்!”
“சினிமா மூலம் முறையிடலாம்!”

“கமர்ஷியல் படங்களைப் பண்ணிட்டு, இந்தமாதிரி ஒரு படம் பண்றது சவாலா இல்லையா?”

“இந்தப் படம் உங்களைச் சிரிக்க வைக்கும், அழ வைக்கும், பிரச்னைகளைப் பேசும், சமூகத்திடம் முறையிடும் அப்படின்னா இதுவும் கமர்ஷியல் படம்தான். நிறைய விருதுகள் வாங்கியிருக்கிறதனால இது கமர்ஷியல் படம் இல்லைன்னு நினைக்காதீங்க. எவ்வளவு பெரிய கல் நெஞ்சக்காரரா இருந்தாலும் இந்தப்படம் கண்கலங்க வைக்கும்.”