Published:Updated:

`நீதிமன்றம் சொன்னாலும்.. அங்கு பணம் இல்லை!'- நடிகர் சங்கத் தேர்தல் குறித்து கருணாஸ்

நடிகர் கருணாஸ்
நடிகர் கருணாஸ்

நடிகர் சங்கம் முடங்கிப்போய் உள்ளது. நீதிமன்றம் மறுபடியும் நடிகர் சங்கத் தேர்தலை நடத்த வேண்டும் என்று சொன்னாலும் கூட தேர்தலை நடத்துவதற்கு நடிகர் சங்கத்தில் பணம் இல்லை.

புதுக்கோட்டை வந்த நடிகர் கருணாஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``நடிகர் சங்கப் பிரச்னையில் ஜசரி கணேசன் எங்கள் அணியை விமர்சனம் செய்து வருகிறார். ஆனால், அவருக்குத்தான் நீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்திருக்கிறது. வாக்களிப்பதற்காகச் சங்கத்து உறுப்பினர்களைப் பணம் கொடுத்து விலைக்கு வாங்கியது யார் என்று அனைவருக்கும் தெரியும்.

நடிகர் கருணாஸ்
நடிகர் கருணாஸ்

அதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. ஐசரி கணேசன் தன்னைத்தானே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நடிகர் சங்க சொத்து என்பது தனி நபருடைய சொத்தல்ல. தனி நபர்கள் யாரும் சொந்தம்கொள்ள முடியாது. எங்களின் சட்ட ரீதியான போராட்டம் தொடரும். நீதி கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம். தற்போது, நடிகர் சங்கம் முடங்கிப்போய் உள்ளது.

நீதிமன்றம் மறுபடியும் நடிகர் சங்கத் தேர்தலை நடத்த வேண்டும் என்று சொன்னாலும் கூட தேர்தலை நடத்துவதற்கு நடிகர் சங்கத்தில் பணம் இல்லை. மீண்டும் சங்கத் தேர்தல் அறிவிக்கும் போதுதான், எங்கள் அணியில் ஏற்கெனவே போட்டியிட்டவர்களே மீண்டும் போட்டியிடுவார்களா இல்லை புதியவர்கள் போட்டியிடுவார்களா என்பது அப்போதுதான் தெரியவரும்.

நடிகர் கருணாஸ்
நடிகர் கருணாஸ்

சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்ததும், அ.தி.மு.க-வில் மாற்றம் ஏற்படும். மக்களின் மன நிலை அதுதான். நான் எம்.எல்.ஏ ஆவதற்கு காரணமாக இருந்தவர் சசிகலா. சிறையிலிருந்து வெளியே வந்ததும் அவர் என்னை அழைத்தால், கண்டிப்பாகச் சென்று சந்திப்பேன். மத்திய பட்ஜெட் விவசாயிகள், சாமானியர்கள் என அனைவருக்கும் ஏமாற்றம் அளிக்கக் கூடிய வகையிலேயே அமைந்துள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு