Published:Updated:

ஜானகியை சந்தித்தது எப்படி..? அன்று எம்.ஜி.ஆர் எழுதியது..! #AppExclusive

This is how I met Janaki - From MGR's Auto Biography
News
This is how I met Janaki - From MGR's Auto Biography
Vikatan

காதலுக்காக, நிஜ வாழ்க்கையிலும் ஹீரோயிசம் காட்டியிருக்கார் எம்.ஜி.ஆர்..!

(ஆனந்த விகடனில் 1972-ல் எம்.ஜி.ஆர். எழுதிய ‘நான் ஏன் பிறந்தேன்?’ கட்டுரையிலிருந்து)‘

ருதநாட்டு இளவரசி’ படத்தின்போதுதான் எனது மூன்றாவது மனைவியை (ஜானகியை) நான் மனைவியாக்கிக் கொள்ளும் உரிமை எனக்குக் கிடைத்தது. உள்ளத்தால் எனக்கு அந்த உரிமை தரப்படடது. ஆனால், சட்டப்படி அந்த உரிமையை நான் பெற இயலவில்லை எனினும், பல ஆண்டுகள் நாங்கள் கணவன்-மனைவியாகவே வாழ்ந்து வந்தோம். அண்மையில் சில ஆண்டுக்கு முன்புதான் அந்த உரிமையைப் பெற்றோம்...

நான் ஜானகியை மணந்து கொள்ளப் பிடிவாதமாக இருந்த நேரம், அதை எதிர்த்த ஜானகியின் உறவினர் (ஜானகிக்கு அப்போது கார்டியனாக இருந்தவர்) நான் ஜானகியை மணக்க விரும்பியதற்கு அப்போது அவளிடமிருந்த பணத்துக்கும், அவள் எதிர்காலத்தில் சினிமாவில் நடித்துச் சம்பாதிக்கப் போகிற பணத்துக்கும் வேண்டித்தானே தவிர, உண்மை அன்போ ஆசையோ எனக்கு இல்லை என்று நம்பினார் போலும், அதனால் ஒரு நிபந்தனை போடுவதற்காக என்னைப் பேச அழைத்திருந்தார்.

இப்போதென்றால் என்னால் முடிந்தவரையில் விவாதித்துப் பார்ப்பதுண்டு. அன்று எனக்கு அந்த அளவுக்குப்  பொறுமை கிடையாது. நினைத்ததை, நான் நம்புவதைத் களங்கமின்றிச் சொல்வேன். அதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது முடியாது என்று சொல்ல வேண்டும். அவர்கள் கூடாது, முடியாது, இல்லை என்று சொல்லுவதில் எனக்குக் கோபம் வராது. ஆனால், என்னுடைய நோக்கத்துக்கு மாசு கற்பித்துப் பேசினார்களானால், உடனே குமுறும் எரிமலை ஆகிவிடுவேன்.

இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!

நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் கீழே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.

முதல்முறையாக ஆப் ரிஜிஸ்டர் செய்பவர்கள் அனைத்து விகடன் இதழ்களையும் விளம்பரங்களின்றி இலவசமாக வாசிக்கலாம்.

READ IN APP