Published:Updated:

4 தனுஷ், 5 அனிருத்... யூடியூப்பைக் கலக்கும் தமிழின் டாப் 10 பாடல்கள்!

DnA
DnA

இதுவரையிலும் அதிக பார்வையாளர்களைப் பெற்றிருக்கும் தமிழ்ப் பாடல்களின் பட்டியல்...

சமீபத்தில், 2019-ம் ஆண்டில் வெளியாகி அதிக பார்வைகளை அள்ளிய பாடல் வீடியோக்களின் பட்டியலை வெளியிட்டது யூடியூப். உலகளவிலான அந்தப் பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பிடித்து ஆச்சர்யம் அளித்திருக்கிறது `ரெளடி பேபி'. அதேபோல், இதுவரையிலும் அதிக பார்வையாளர்களைப் பெற்றிருக்கும் தமிழ்ப் பாடல்கள் எனத் தனியாய் ஒரு பட்டியல் எடுக்கப்பட்டது. இதோ `டாப் 10' தமிழ்ப் பாடல் வீடியோக்கள்!

ரெளடி பேபி - 635 மில்லியன்

பேபி முதல் பாட்டி வரை ரௌடி முதல் போலீஸ் வரை `ரௌடி பேபி' எல்லோருக்கும் ஃபேவரைட். யுவனின் இசையா, தனுஷின் வரிகளா, சாய் பல்லவியின் நடனமா, பிரபுதேவாவின் நடன அமைப்பா, தீயின் குரலா, இப்பாடல் பட்டித்தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்ப என்ன காரணம்? எல்லாமேதான் காரணம்.

Rowdy Baby
Rowdy Baby

ஒய் திஸ் கொலைவெறி (மேக்கிங் வீடியோ ) - 194 மில்லியன்

தமிழின் முதல் யூ-டியூப் டிரெண்டிங் பாடல் `ஒய் திஸ் கொலைவெறி'. ராக்ஸ்டார் அனிருத்தையும், பொயட்டு தனுஷையும் உலகம் முழுக்கச் சென்று சேர்த்த பாடல். இந்தியா `டிஜிட்டல் இந்தியா' ஆவதற்கு முன்பே 100 மில்லியன் பார்வைகளை அள்ளியதென்பது, சாதாரண விஷயம் அல்ல. சூப்பர் மாமா...

Y This Kolaveri
Y This Kolaveri

வாயாடி பெத்த புள்ள (லிரிக் வீடியோ) - 134 மில்லியன்

நம்ம வீட்டுப் பிள்ளை சிவகார்த்திகேயனும் அவர் வீட்டுப் பிள்ளை ஆராதானா சிவகார்த்திகேயனும் இணைந்து பாடிய க்யூட்டான பாடல். போதாதற்கு வைக்கம் விஜயலட்சுமி வேறு. மூவரின் குரலையும் கோத்து, மாய வித்தை நிகழ்த்தியிருப்பார் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ்!

Vayadi Petha pulla
Vayadi Petha pulla

குலேபா - 124 மில்லியன்

விவேக் - மெர்வினின் பெப்பியான ட்யூன், அனிருத்தின் ஹைவோல்டேஜ் குரல், வண்ணமயமான காட்சியமைப்புகள், பிரபுதேவாவின் நளினமும் நையாண்டியும் கூடிய அசத்தலான நடனம் எல்லாம் சேர்ந்து கேட்டவர் எல்லோரையும் குத்தாட்டம் போடவைத்ததில் இருக்கிறது `ஹிட்'டானதற்கான சூட்சமம். டகுலு டகுலு ப்ளாக் பஸ்டர் சாங்குமா...

Gulaebaghavali | Guleba
Gulaebaghavali | Guleba

சின்ன மச்சான் ( லிரிக் வீடியோ ) - 111 மில்லியன்

`சின்ன மச்சான்' பாடல் லிரிக் வீடியோ, மியூசிக் வீடியோவை விட ஹிட்! அம்ஷின் இசையில் செந்தில்கணேஷ் மற்றும் ராஜலெக்ஷ்மியின் மண்வாசனை வீசும் குரல்கள் எல்லோரையும் வசப்படுத்தியது. 111 மில்லியன்றது சின்ன மேட்டரில்ல சின்ன மச்சான்!

Chinna Machan | Lyrical | Charlie Chaplin2
Chinna Machan | Lyrical | Charlie Chaplin2

ஆளப்போறான் தமிழன் - 106  மில்லியன்

தமிழையும் காதலையும் ஒருசேர கொண்டாடிய பாடல்! அவ்வளவு அழகான, பிரமாண்டமான விஷுவல். அதற்கு மேலும் பிரமாண்டம் கூட்டிய விஜய், அழகூட்டிய நித்யா மேனன். ஆஸ்கர் நாயகனின் இசையும் விவேக்கின் வரிகளுமாக, இப்பாடல் எப்போது கேட்டாலும் மயிர்க்கூச்செரியும்...

Mersal - Aalaporan Thamizhan
Mersal - Aalaporan Thamizhan

மரண மாஸ் - 93 மில்லியன்

பாடலின் மேக்கிங் டீசர் வந்தபோதே, பலரின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் அதுதான். டீசர் வந்தபோது எப்போது முழு ஆடியோவும் வரும் எனக் காத்திருந்தார்கள். ஆடியோ வந்தபின் எப்போது வீடியோ வருமெனக் காத்திருந்தார்கள். அப்படி எத்தனை பேர் காத்திருந்தார்கள் என்பதற்கு, இந்த 93 மில்லியன் பார்வைகள் ஒரு சின்ன சாட்சி! பாடல் முடியுமிடம், இடியும் மின்னலுமாய்ப் பெருமழை அடித்து ஓய்ந்தாற்போல் இருக்கும். மழையை யாருக்குத்தான் பிடிக்காது!

Petta - Marana Mass
Petta - Marana Mass

டானு டானு - 92 மில்லியன்

`மாரி -2'வுக்கு `ரௌடி பேபி' என்றால், `மாரி'க்கு `டானு டானு'. லட்சோப லட்ச பேரின் ரிங்டோனாக மாறிய பாடல். அனிருத் மற்றும் அலிஷா தாமஸ் பாடிய இப்பாடலின் வரிகள், பொயட்டு தனுஷ். "குண்டான கண்ணால குத்தாம குத்தாத" எனும் வரிகளுக்கு முன்னால் இசையில் வரும் சின்னஞ்சிறு நிசப்தம்தான் ஒட்டுமொத்த பாடலையும் ஏனோ அவ்வளவு அழகாக்கியது! 

Don'u Don'u Don'u from Maari
Don'u Don'u Don'u from Maari

மறுவார்த்தை - 80 மில்லியன்

இசையமைப்பாளர் யாரென தெரியாதபோதே ஹிட்டடித்த பாடல். அந்த மிஸ்டர் எக்ஸ், தர்புகா சிவாதான் என்றதும் ஆச்சர்யத்தில் மூழ்கினர் இசை ரசிகர்கள். சித் ஶ்ரீராமின் குரல், சோலோவாக நின்று விளையாடியிருக்கும். தாமரையும் தன் பங்குக்கு வார்த்தைகளில் விளையாடியிருப்பார். 

Maruvaarthai -  Enai Noki Paayum Thotta
Maruvaarthai - Enai Noki Paayum Thotta

ஒத்தையடிப் பாதையில - 79 மில்லியன்

`கனா' படத்தின் இரண்டாவது மெகா ஹிட் பாடல் இது. திபு நினன் தாமஸின் இசையில், அனிருத் பாடிய இப்பாடல் எல்லோரையும் கிறங்கடித்தது. இப்பாடலை அனிருத்தை தவிர வேறு யார் பாடியிருந்தாலும் செவியும் உள்ளமும் இந்தளவு  உற்சாகமடைந்திருக்குமா என்பது சந்தேகமே. செம அனி!

Kanaa - Othaiyadi Pathayila
Kanaa - Othaiyadi Pathayila

இந்த வரிசையில், `இமைக்கா நொடிகள்' படத்தில் வரும் `நீயும் நானும் அன்பே', `மீசையை முறுக்கு' படத்தின் `வாடி புள்ள வாடி', `ரஜினி முருகன்' படத்தின் `உன் மேல ஒரு கண்ணு', `வேதாளம்' படத்தின் `ஆலுமா டோலுமா', மற்றும் `லட்சுமி' படத்தில் வரும் `மொராக்கா' ஆகிய பாடல்கள் முறையே 11-15 இடங்களைப் பிடித்திருக்கின்றன. அதேபோல், இந்த டாப் 10 பட்டியலில், இசையமைப்பாளர்/பாடகர் என அனிருத் பங்காற்றிய பாடல்களின் எண்ணிக்கை ஐந்து. பாடகர்/பாடலாசிரியர்/நடிகர் என தனுஷ் பங்காற்றிய பாடல்களின் எண்ணிக்கை நான்கு.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு