Published:Updated:

தனுஷ், விஜய் சேதுபதி டு த்ரிஷா... ரிலீஸுக்குக் காத்திருக்கும் முன்னணி நட்சத்திரங்களின் படங்கள்!

விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, த்ரிஷா
News
விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, த்ரிஷா

ஜி.வி.பிரகாஷ்தான் அதிக படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார். த்ரிஷாவிற்கு மூன்று படங்கள் ரிலீஸுக்கு வெயிட்டிங்.

தமிழ் சினிமாவில் முழுவதும் ரெடியாகி சென்ஸார் முடிந்து ரிலீஸ் தேதி தெரியாமல் தவிக்கும் படங்களின் பட்டியலை எடுத்தால், குத்து மதிப்பாக 400-ஐ தாண்டும். அதில் பெரிய நடிகர், நடிகைகளின் படங்களும் அடங்கும். அத்தகைய படங்கள் என்னென்ன? இதோ ஒரு லிஸ்ட்.

தனுஷுக்கு 'மாறன்', 'திருச்சிற்றம்பலம்' எப்போதோ முடிந்து விட்டாலும் இன்னும் ரிலீஸ் தேதி முடிவாகாமல் இருக்கிறது. இதில் 'மாறன்' ஒடிடி ரிலிஸுக்குத் தயாராகி வருகிறது. இந்தக் கட்டுரையில் தனுஷின் படங்கள் மட்டுமே சமீபத்தில் முடிந்து, ரிலீஸுக்காகக் காத்திருப்பவை.

யாதும் ஊரே யாவரும் கேளிர்
யாதும் ஊரே யாவரும் கேளிர்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

விஜய் சேதுபதியின் பட்டியலைப் பார்த்தால், மலையாளத்தில் நித்யாமேனனுடன் நடித்த '19(1a)', சீனுராமசாமியின் 'மாமனிதன்', மணிகண்டனின் 'கடைசி விவசாயி', ஜனநாதன் உதவியாளர் இயக்கிய 'யாதும் ஊரே யாவரும் கேளிர்', ஆகிய படங்கள் வெயிட்டிங்கில் உள்ளன.

அரவிந்த் சாமிக்கு கார்த்திக் நரேனின் 'நரகாசூரன்', செல்வா இயக்கிய 'வணங்காமுடி', த்ரிஷாவுடன் நடித்த 'சதுரங்க வேட்டை 2', ராஜபாண்டி இயக்கிய 'கள்ளபார்ட்' ஆகியவை உள்ளன.

பிரபுதேவாவிற்கு லட்சுமிமேனனுடன் நடித்த 'யங்மங்சங்', தனஞ்செயன் தயாரிப்பில் 'ஊமை விழிகள்' ஆகியவை நிறைய மாதங்களாக ரிலீஸ்தேதி அறிவிக்கப்படாமல் இருக்கிறது. இது தவிர 'தேள்', 'பஹிரா', 'ஃப்ளாஷ்பேக்' ஆகிய படங்களையும் அவர் நடித்து முடித்துக் கொடுத்துவிட்டார்.

சர்வர் சுந்தரம்
சர்வர் சுந்தரம்

விஷ்ணு விஷாலுக்கு 'எஃப்.ஐ.ஆர்.', 'மோகன்தாஸ்' என இரண்டு படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகி பல மாதங்கள் ஆகின்றன.

விஜய் ஆண்டனிக்கும் 'தமிழரசன்', 'ஆக்னி சிறகுகள்' என இரண்டு படங்கள் இந்த வரிசையில் உள்ளன.

சந்தானத்திற்கு 'சர்வர் சுந்தரம்' முழுமையாக முடிந்து கடந்த சில வருடங்களாக ரிலீஸாகாமல் தவிக்கிறது. இது தவிர செல்வராகவன் இயக்கியத்தில் 'மன்னவன் வந்தானடி' படம் தொடங்கப்பட்டு சில நாள்கள் படமாக்கப்பட்டு, பின்னர் அதுவும் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஜி.வி.பிரகாஷ்தான் அதிக படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார். '4ஜி', 'ஆயிரம் ஜென்மங்கள்', 'ஐங்கரன்'. 'காதலை தேடி நித்யா நந்தா' ஆகியவை இருக்கின்றன. நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு இப்போது 'அடங்காதே' படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

த்ரிஷாவிற்கு மூன்று படங்கள் ரிலீஸுக்கு வெயிட்டிங். ஹீரோயின் சென்ட்ரிக்கான 'கர்ஜனை', 'இவன் வேற மாதிரி' சரவணன் இயக்கிய 'ராங்கி', மனோபாலா தயாரிப்பில் அரவிந்த் சாமியுடன் நடித்த 'சதுரங்க வேட்டை 2' என வரிசைகட்டி நிற்கின்றன.

ராங்கி
ராங்கி

அமலா பாலிற்கு 'அதோ அந்தப் பறவை போல', 'காடவர்' இரண்டும் உள்ளன.

காஜல் அகர்வால் தன் திருமணத்திற்கு முன்பே தன் கைவசம் இருந்த தமிழ்ப் படங்களை முடித்துக் கொடுத்துவிட்டார். 'கருங்காப்பியம்', 'பாரீஸ் பாரீஸ்', 'கோஷ்டி', ஹே சினாமிகா' தவிர, 'இந்தியன் 2'விலும் நடித்துள்ளார்.

இயக்குநர் கௌதம் மேனன் தரப்பில் விக்ரம் நடிப்பில் அவர் இயக்கிய 'துருவநட்சத்திரம்' எப்போது வெளியாகும் என்றே தெரியவில்லை. அவரின் மற்றொரு படமான 'ஜோஷ்வா' தற்போது ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது. இது தவிர கௌதம் தயாரிப்பில் உருவான 'நரகாசூரன்' இன்னும் சிக்கலில் தவித்து வருகிறது.

தற்போது இசையமைப்பாளராகவும் பரிணமித்திருக்கும் ஜெய் பல்வேறு படங்களில் நடித்துவந்தாலும், வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்த 'பார்ட்டி' படம் இன்னமும் வெளியாகாமல் இருக்கிறது.

பார்ட்டி
பார்ட்டி
மேற்கண்டவற்றில் சில படங்கள் ரிலீஸாவதில் தாமதம் ஏற்படுவதற்கு நிதிப் பிரச்னைத் தவிர வேறு பல காரணங்களும் இருக்கவே செய்கின்றன. அதில் முக்கியமான ஒன்று கொரோனா பரவல் மற்றும் லாக்டௌன். சீக்கிரமே இந்தப் புதிய அலைக் கட்டுப்படுத்தப்பட்டு மீண்டும் திரையரங்கில் பல படங்கள் வெளியாகும் என்று நம்புவோம்.

இதில் எந்தப் படத்துக்காக நீங்கள் காத்திருக்கிறீர்கள்? கமென்ட்டில் சொல்லுங்கள் மக்களே!