Published:Updated:

கடன் பிரச்னையில் டாப் ஹீரோக்கள்!

Sivakarthikeyan
பிரீமியம் ஸ்டோரி
Sivakarthikeyan

தத்தளிக்கும் தமிழ் சினிமா

கடன் பிரச்னையில் டாப் ஹீரோக்கள்!

தத்தளிக்கும் தமிழ் சினிமா

Published:Updated:
Sivakarthikeyan
பிரீமியம் ஸ்டோரி
Sivakarthikeyan

கோடிகளில் கடன்களோடு தள்ளாடிக்கொண்டி ருக்கிறார்கள் கோலிவுட் நடிகர்கள். சொந்தத்தயாரிப்பில் இறங்கிய தனுஷ், விஜய்சேதுபதி, விஷால் எனப் பல நடிகர்களும் கடன் பிரச்னையில் சிக்கித்தவிக்கிறார்கள். தொடர் தோல்விகளால் கடன் பிரச்னை ஒருபுறம், பேசப்பட்ட சம்பளம் சரியாக வராத நிலை இன்னொருபுறம் எனக் கடுமையான நெருக்கடிகளில் நடிகர்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சமீபத்தில் ‘அசுரன்’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில் “சில தயாரிப்பாளர்கள் சம்பளம் தராமல் ஏமாற்றுகிறார்கள்’’ என்று வெளிப்படையாகவே பேசினார் தனுஷ்.

Vijay Sethupathi
Vijay Sethupathi

‘மரியான்’ தொடங்கி ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ வரை பல படங்களுக்கு அவருக்குப் பேசப்பட்ட சம்பளம் வரவில்லை என்கிறார்கள். அதேபோல் அவரது தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் ஃபிலிம்ஸ் கடுமையான நஷ்டத்தில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். இதனால் பெரியளவு கடனில் இருக்கும் தனுஷ், கடனை முழுமையாக அடைப்பதற்காகத் வெளித்தயாரிப்புகளில் தொடர்ந்து நடிக்கக் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“தனுஷ் ஒரு நடிகர் மட்டுமல்ல. 12 படங்கள் சொந்தமாகத் தயாரித்தவர். யாருக்கு என்ன சம்பளம் பேசப்பட்டதோ அது மிகச்சரியாக அந்த நபருக்குப் போய்விடும். ஆனால், இப்படிப்பட்ட தனுஷுக்குத்தான், பேசிய சம்பளத்தை சரியாகக் கொடுக்காமல் தவிக்க விடுகிறார்கள் சில தயாரிப்பாளர்கள். `மரியான்’ படத்தின் சம்பள பாக்கியை தனுஷ் சார் இன்னும் கேட்கவே இல்லை. `மாரி’ படத்தின் சம்பளமும் இன்னும் முழுமையாக வந்துசேரவில்லை.

Dhanush, Vishal
Dhanush, Vishal

`கொடி’ படத்துக்கான சம்பளம் இன்னும் 10 கோடி மிச்சம் இருக்கு. `எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் இருந்து கிட்டத்தட்ட 4 கோடி ரூபாய் வரவேண்டியது இருக்கு. ஆனால், அதையெல்லாம் பார்க்காமல்தான் தனுஷ் டப்பிங் பேசிக்கொடுத்திருக்கிறார். இதுதான் உண்மை’’ என்கிறார் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார்’ நிர்வாக இயக்குநர் வினோத்.

தனுஷின் சொந்தத் தயாரிப்பு நிறுவனம் கடனில் சிக்கியதுபோலவே விஜய் சேதுபதியும் மிகப்பெரிய கடனில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

சிவகார்த்திகேயனுக்கு மிக நெருக்கமான ஆர்.டி.ராஜா. ஏ.ஆர்.ரஹ்மான் இசை, நீரவ் ஷா கேமரா எனப் பெரிய பட்ஜெட்டில் தொடங்கிய இந்தப் படம் கடன் பிரச்னையால் பலகாலம் இழுத்து, இப்போதுதான் மீண்டும் டேக்-ஆஃப் ஆகியிருக்கிறது.

“ஒவ்வொரு படமும் ரிலீஸூக்கு வரும்போது பஞ்சாயத்து வரும். உடனே தன் சம்பளத்தைக் குறைத்துக்கொண்டு அல்லது பாதி சம்பளத்துக்கு நடித்துக்கொடுத்துவிட்டு படம் ரிலீஸாக உதவுவது விஜய் சேதுபதியின் வழக்கம். இதனாலேயே பல கோடிகளை அவர் இழந்திருக்கிறார். சினிமாவில் மிகப்பெரிய குடும்பப் பின்னணி கொண்ட ஒருவர் தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதி கிட்டத்தட்ட நடித்து முடித்துவிட்டார். ஆனால் சம்பளம் இன்னும் வரவில்லை. பேசப்பட்ட சம்பளம் சரியாக வராதது, தன் தயாரிப்பில் ஏற்பட்ட நஷ்டம் என இதைச் சமாளிக்க நடிகர்கள் கடன் வாங்குகிறார்கள். ஆனால், திட்டமிட்டபடி சில விஷயங்கள் நடக்காததால் நடிகர்களின் கடன் சுமை ஏறிக்கொண்டேயிருக்கிறது’’ என்கிறார் விஜய் சேதுபதியின் நெருங்கிய நண்பர்.

‘கனா’, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ என இந்த இரண்டு படங்களின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன். இரண்டு படங்களுமே விமர்சனரீதியாக தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனுக்கு ஓரளவு பெயரை சம்பாதித்துத் தந்தாலும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு சம்பாதித்துத் தரவில்லை. இதனால் தயாரிப்பு நிறுவன வேலைகளை நிறுத்திவிட்டு வெளித்தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பதில் மும்முரமாக இறங்கிவிட்டார் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyan, Sasikumar
Sivakarthikeyan, Sasikumar

‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமாரின் இரண்டாவது படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன்தான். இந்தப் படத்தின் தயாரிப்பாளர், சிவகார்த்திகேயனுக்கு மிக நெருக்கமான ஆர்.டி.ராஜா. ஏ.ஆர்.ரஹ்மான் இசை, நீரவ் ஷா கேமரா எனப் பெரிய பட்ஜெட்டில் தொடங்கிய இந்தப் படம் கடன் பிரச்னையால் பலகாலம் இழுத்து, இப்போதுதான் மீண்டும் டேக்-ஆஃப் ஆகியிருக்கிறது.

“ரஜினி, விஜய், அஜித்தே பயப்படும் ஒரு தொழில் தயாரிப்பு. நம்மால்தான் தயாரிப்பாளர்கள் லாபம் சம்பா திப்பதாக ஹீரோக்கள் எண்ணுவதன் விளைவே சொந்தத் தயாரிப்பு.

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் தயாரிப்பாளர் மற்றும் நடிகராக கோலிவுட்டுக்குள் என்ட்ரி கொடுத்தார் சந்தானம். முதல் படம் செம ஹிட். அந்த உற்சாகத்தில் சொந்தப் படத்தில் தானே ஹீரோவாக நடிக்கத்தொடங்கிய சந்தானம் ‘இங்க என்ன சொல்லுது’ படத்தின் மூலம் கடன் வலைக்குள் சிக்க ஆரம்பித்தார். இதற்கு அடுத்தபடியாக நடித்துத் தயாரித்த பல படங்களும் வியாபாரத்தில் சுணங்க மிகப்பெரிய கடன் பிரச்னையில் சிக்கியிருக்கிறார் சந்தானம்.

‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘அமரகாவியம்’ படங்கள் மூலம் சொந்தத் தயாரிப்பில் இறங்கிய ஆர்யாவின் நிலைமையும் இதேதான். நடிகர் சங்கச் செயலாளர் விஷாலும் விதிவிலக்கல்ல. விஷால் ஆரம்பத்திலிருந்தே சொந்தத் தயாரிப்பில்தான் நடித்து வந்தார். அப்பாவின் ஜி.கே ஃபிலிம்ஸ் கம்பெனியை விட்டு, விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்ற நிறுவனத்தின் சார்பில் எடுத்த படங்களில் சில, சொல்லுமளவுக்கு வெற்றி பெறவில்லை. இதனால் பெரும் கடன் சிக்கலுக்குள் சிக்கித்தவிக்கிறார் விஷால். தற்போது தொடர்ந்து வெளிநிறுவனத் தயாரிப்புகளில் நடித்துவருகிறார் அவர்.

Santhanam, Gautham Menon
Santhanam, Gautham Menon

நடிகர்களின் கடன் பிரச்னை தொடர்பாக சீனியர் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியத்திடம் பேசினோம்.

“ரஜினி, விஜய், அஜித்தே பயப்படும் ஒரு தொழில் தயாரிப்பு. நம்மால்தான் தயாரிப்பாளர்கள் லாபம் சம்பா திப்பதாக ஹீரோக்கள் எண்ணுவதன் விளைவே சொந்தத் தயாரிப்பு. ஒருமுறை தன் படத்துக்குக் கிடைக்கும் வசூலை பார்த்ததும், ‘நம்மை வைத்து தயாரிப் பாளர்களே லாபம் சம்பாதிக் கிறார்கள். இந்த லாபத்தை நாமே ஏன் சம்பாதிக்கக் கூடாது’ என்று நினைத்து, அடுத் தடுத்துப் படம் தயாரிக்க முடிவெடுக் கிறார்கள். ஆனால் அடுத்தடுத்துப் படங்கள் தோல்வி யடையும் போது வெளித் தயாரிப்பு நிறுவனங் களுக்குப் படம் பண்ண வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. விஷால், தனுஷ் அளவுக்குத் தொடர்ந்து படம் எடுத்த நாயகர்கள் குறைவுதான். நம்மை வைத்து தயாரிப் பாளர்கள் லாபம் பார்க்கவில்லை என ஹீரோக்கள் தெரிந்து கொள்ள அதிக நேரம் ஆகாது’’ என்கிறார்.

நடிகர்கள் மட்டு மல்லாமல் பல இயக்குநர்களும் இந்தக் கடன் பிரச்னையில் சிக்கித்தவிப்பதுதான் கோலிவுட்டின் அவலம்.

லிங்குசாமி, கெளதம் மேனன், சசிகுமார் என இயக்குநர்கள் பலரும் சொந்தத் தயாரிப்பில் இறங்கியதால் கடனில் தத்தளிக்கிறார்கள். இதனால் இவர்கள் தயாரித்து, இயக்கிய பல படங்கள் திரைக்கு வரமுடியாமல் சிக்கித்தவிக்கின்றன. படங்கள் முடங்கியிருப்பதால் இதில் நடித்த நடிகர், நடிகைகள் பலருக்கும் சம்பளம் சரியாகப் போகாத நிலை என இப்பிரச்னை பல வடிவங்களிலும் சுழற்றியடிக்கிறது.

Lingusamy
Lingusamy

ஒரு படைப்பு வெற்றிபெற்றுவிடும் என்கிற முயற்சியில் பெரும் பணத்தை வெளியே வாங்கி தயாரிப்பில் இறங்குகிறார்கள் நடிகர்கள். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடியும்போது பெரும் சிக்கலுக்குள் மாட்டுகிறார்கள். நடிகர்கள் கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்கள் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதேபோல பல கோடி கடன்களிலும் சிக்கியிருக்கிறார்கள் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

லிங்குசாமி, கெளதம் மேனன், சசிகுமார் என இயக்குநர்கள் பலரும் சொந்தத் தயாரிப்பில் இறங்கியதால் கடனில் தத்தளிக்கிறார்கள். இதனால் இவர்கள் தயாரித்து, இயக்கிய பல படங்கள் திரைக்கு வரமுடியாமல் சிக்கித்தவிக்கின்றன.

சொந்தத் தயாரிப்போ வேறு தயாரிப்போ வெற்றிபெறும் படங்கள் தொடர்ந்து அமையும்போதுதான் கதாநாயகர்களால் இந்தக் கடன் தொல்லையிலிருந்து மீளமுடியலாம்.

சினிமாவில் இந்த நாயகர்கள் பல வில்லன்களைச் சந்திக்கலாம். நிஜ வாழ்க்கையில் இவர்களுக்கு வில்லாதி வில்லன், இந்தக் கடன் பிரச்னைதான்.