Published:Updated:

த்ரில்லிங், மேக்கிங் சூப்பர்... ஆனால், குழந்தைகளைக் காட்டிய விதம்?! - எப்படியிருக்கிறது #Forensic?

`ஃபாரன்ஸிக்'

இத்தனை கொடூரமான காட்சிகளை உள்ளடக்கிய இப்படத்தை, குழந்தைகள் பார்த்தால் நிச்சயம் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவார்கள். அதை கருத்தில்கொண்டாவது படத்தின் சில காட்சிகளை வெட்டியிருக்கலாம். `ஃபாரன்ஸிக்' பட விமர்சனம்!

த்ரில்லிங், மேக்கிங் சூப்பர்... ஆனால், குழந்தைகளைக் காட்டிய விதம்?! - எப்படியிருக்கிறது #Forensic?

இத்தனை கொடூரமான காட்சிகளை உள்ளடக்கிய இப்படத்தை, குழந்தைகள் பார்த்தால் நிச்சயம் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவார்கள். அதை கருத்தில்கொண்டாவது படத்தின் சில காட்சிகளை வெட்டியிருக்கலாம். `ஃபாரன்ஸிக்' பட விமர்சனம்!

Published:Updated:
`ஃபாரன்ஸிக்'
அடுத்தடுத்து கொலைகள் செய்யும் சீரியல் கொலையாளியைத் தீவிரமாகத் தேடும் வழக்கமான போலீஸ் கதைதான், `ஃபாரன்ஸிக்'. #Forensic

இறுதியில் எப்படியும் அந்த சீரியல் கில்லரைக் கண்டுபிடித்துவிடுவர்கள்தான். இருந்தும், எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள்... அதற்குள் என்னென்ன ட்விஸ்ட் வருகிறது என்ற சுவாரஸ்யமும் ஆர்வமும்தான் த்ரில்லர் பட ரசிகர்களுக்கான ட்ரீட். அந்த வகையில், டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான `ஃபாரன்ஸிக்' படம் எப்படியிருக்கிறது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சீரியல் கில்லரைக் கண்டுபிடிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி, ரித்திகா சேவியர் (மம்தா மோகன்தாஸ்). அவருக்கு உதவியாக நியமிக்கப்படுகிறார், மருத்துவ சட்ட அலோசகரும் தடயவியல் நிபுணருமான சாமுவேல் ஜான் கூட்டக்காரன் (டொவினோ தாமஸ்). தனியாக இருக்கும் குழந்தைகளைக் கடத்திக் கொலை செய்து, ஓர் இடத்தில் பிணமாக வீசி, காவல்துறையினருக்கு டார்ச்சர் கொடுக்கிறான் ஒரு சைக்கோ கொலையாளி. அவன் யாரென்று தெரியாமல் குழம்பி நிற்கும் மம்தாவுக்கு, டொவினோ சில ஆலோசனைகள் கொடுக்க, அதைப் பழைய விரோதம் காரணமாக ஏற்க மறுக்கிறார், மம்தா.

`ஃபாரன்ஸிக்'
`ஃபாரன்ஸிக்'

கொலை செய்யப்பட்ட ஒரு குழந்தையின் உடையில் படிந்திருக்கும் கரைகளை வைத்து, கொலையாளி ஐந்தடிக்கும் குறைவானவர் என்றும், பத்திலிருந்து பதினொரு வயது உடையவராக இருக்கலாம் என்பதையும் கண்டுபிடிக்கிறார் டொவினோ. ஒரு கட்டத்தில், யூகித்ததுபோலவே ஒவ்வொன்றும் நடக்க, அங்கிருந்து விரிவடைகிறது கதை. உண்மையிலேயே அந்த வயதுடைய ஒருவர்தான் கொலை செய்கிறாரா இல்லை அதற்குப் பின்னால் வேறொருவர் அவரை இயக்குகிறரா என்பதை த்ரில்லர் கலந்து கலக்கியடிக்கிறது, `ஃபாரன்ஸிக்'.

கிடைக்கும் சில துப்புகளையும், கை ரேகைகளையும் வைத்து கண்டுபிடித்த சில ஜித்து வேலைகள் சூப்பர். கொலை செய்யப்பட்டதில் ஆரம்பித்து, படம் நகர நகர நமக்குள் எழும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் படத்தியின் இறுதியில் திகட்டாமல் பதிலளித்திருக்கிறார்கள். த்ரில்லர் படங்களில், சில டெம்ப்ளேட்டான கண்டுபிடிப்பு முறைகள் இருக்கும். ஆனால் இந்தப் படத்தில், ஹீரோ பணியாற்றும் துறையைப் பயன்படுத்தி, திரையில் மட்டுமல்லாது திரைக்கதையிலும் சில புது முயற்சிகளைக் கையாண்டிருக்கிறார்கள்.

Forensic
Forensic

த்ரில்லர் படங்களில், திரைக்கதைதான் ஹீரோ என்றாலும் அதற்கு உறுதுணையாக இருப்பதுதான் ஹீரோவின் வேலை. அதைத் தடயவியல் நிபுணராக வரும் டொவினோ தாமஸ் சிறப்பாகவே செய்திருக்கிறார். மிடுக்கான ஐபிஎஸ் அதிகாரியாக வரும் மம்தா மோகன்தாஸ், தனது பணியில் டிஸ்டிங்ஷன் பெறுகிறார். படத்தில் வரும் அந்தச் சிறுவனின் தோற்றமும், கண்களுமே நம்மை பயமுறுத்துகின்றன.

த்ரில்லர் படங்களுக்கே உரித்தான சுவாரஸ்ய திரைக்கதையை பின்னியிருப்பதும், அதைப் போகிற போக்கில் டிவிஸ்ட்டாக அவிழ்ப்பதிலும்தான் `ஃபாரன்ஸிக்' தனித்துத் தெரிகிறது. அகில் பால் - அனாஸ் கான் என இந்த இருவர் எழுதி, இயக்கியிருக்கும் இப்படத்தின் பலம், அவர்களின் திரைக்கதை. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார், ஜேக்ஸ் பிஜோய். குழந்தைகள் கொல்லப்படும்போது, மழலைக்குரலில் ஒலிக்கும் ரீங்காரம் அச்சுறுத்துகிறது. அகில் ஜார்ஜின் ஒளிப்பதிவு, சமீர் முகமதுவின் எடிட்டிங் என அனைத்தும் படத்திற்கு த்ரில் ஊட்டியிருக்கின்றன.

`ஃபாரன்ஸிக்'
`ஃபாரன்ஸிக்'

சைக்கோ கொலையாளியும், அவன் கொலை செய்யும் இடமும் `ராட்சசன்' படத்தை கண்முன் நிறுத்துகிறது. குழந்தைகளை `அந்த' சைக்கோ கொன்ற விதத்தைக் காட்டிய விதம் கொடூரம், அத்தனை ஆக்ரோஷம், அத்தனை மிருகத்தனம்! என்னதான் த்ரில்லர் படமாக இருந்தாலும், இப்படியெல்லாம் காட்ட வேண்டுமா என்பதை இரு இயக்குநர்களும் கருத்தில் கொண்டிருக்கலாம். தவிர, என்னதான் நிஜ சம்பவமாக இருந்திருந்தாலும், குழந்தைகளை சீரியல் கில்லராகக் காட்டியிருப்பது, படத்திற்கு U/A சென்சார் கொடுத்திருப்பது எந்த அளவிற்கு சரியென்பது தெரியவில்லை. U/A படங்கள் பார்க்க 13 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி. அதிலும் இந்தக் கலாசாரம் நம்மூரில் பெரிதளவில் பின்பற்றப்படாமல், குழந்தைகளும் இந்த சென்சார் கொண்ட படங்களைப் பார்க்க வருகிறார்கள்.

இந்நிலையில், இத்தனை கொடூரமான காட்சிகளை உள்ளடக்கிய இப்படத்தை, குழந்தைகள் பார்த்தால் நிச்சயம் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவார்கள். அதை கருத்தில்கொண்டாவது படத்தின் சில காட்சிகளை வெட்டியிருக்கலாம். த்ரில்லிங், மேக்கிங் என தொழில்நுட்பம் சார்ந்து `ஃபாரன்ஸிக்' சிக்ஸர் அடித்திருந்தாலும், இம்மாதிரியான விஷயங்களில் கோட்டை விட்டிருக்கிறது.

மற்றபடி, 18 வயதைக் கடந்த த்ரில்லர் விரும்பிகளுக்கு `ஃபாரன்ஸிக்' கட்டாயம் திகிலூட்டும்!