Published:Updated:

'இந்தியன் 2'வில் இணைந்த இரண்டு ஹீரோயின்கள்!

ஆகஸ்ட் 15 சுதந்தர தின நாளில், 'இந்தியன் 2' படப்பிடிப்பைத் தொடங்கவிருக்கிறது, படக்குழு. 

இந்தியன் 2
இந்தியன் 2

தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட படம், 'இந்தியன் 2'. கடந்த ஆண்டு இப்படத்தை அறிவித்தார், இயக்குநர் ஷங்கர். இதற்காக செட் அமைக்கும் பணிகள் தொடங்கின. அதன் பின்னர், எந்த அப்டேட்டும் இல்லை. அறிவிக்கப்பட்ட பின்னர் கட்சி, அரசியல், பிக் பாஸ் என மீண்டும் பிஸியானார், கமல். இதனால், படத்தின் ஷூட்டிங் எப்போது நடக்கும் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுவந்தனர், கமல் ரசிகர்கள். கமல், ஷங்கர், லைக்காவுக்குள் நடந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துவிட்டது.

ப்ரியா பவானி சங்கர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்
ப்ரியா பவானி சங்கர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்

ஷங்கர் இயக்கும் `இந்தியன் 2' படத்தை லைக்கா நிறுவனம் நேரடியாகத் தயாரிக்கிறது. தனது அரசியல் பயணத்துக்கு `இந்தியன் 2' திரைப்படம் பெரும் பலமாக அமையும் என்கிற நம்பிக்கையோடு இருக்கிறார், கமல்.

இந்தப் படத்தில், புதிதாக நடிகை ப்ரியா பவானி சங்கர் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்திருக்கிறார்கள். 'இந்தியன் 2' உறுதியான செய்தி கேட்டு உற்சாகமடைந்திருக்கிறார்கள், கமல் ரசிகர்கள்.

ஆகஸ்ட் 15 சுதந்தரதின நாளில், 'இந்தியன் 2' படப்பிடிப்பைத் தொடங்கவிருக்கிறது, படக்குழு.