Published:Updated:

Vikram: ``அரசியல் கட்சி தொடங்கி சிறப்பா செயல்படுறீங்க ஆனால்..." - இசை வெளியீட்டில் உதயநிதி ஸ்டாலின்!

இசை வெளியீட்டில் உதயநிதி ஸ்டாலின்

விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீடு நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்டு உதயநிதி பேசியுள்ளார்.

Vikram: ``அரசியல் கட்சி தொடங்கி சிறப்பா செயல்படுறீங்க ஆனால்..." - இசை வெளியீட்டில் உதயநிதி ஸ்டாலின்!

விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீடு நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்டு உதயநிதி பேசியுள்ளார்.

Published:Updated:
இசை வெளியீட்டில் உதயநிதி ஸ்டாலின்

கமல்ஹாசன் விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கமல்ஹாசன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிற படம் 'விக்ரம்'. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீடு சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் 6 மணிக்கு தொடங்கியது. கமல்ஹாசன், அக்ஷரா ஹாசன், விஜய்சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன், இயக்குநர் ரவிக்குமார், நரேன், காளிதாஸ் ஜெயராம், இயக்குநர் பா.ரஞ்சித் எனப் பலர் கலந்துகொண்டனர். யாரும் எதிர்பார்க்காத விதமாக சிம்பு கலந்து கொண்டார்.

இசை வெளியீட்டில் உதயநிதி ஸ்டாலின்
இசை வெளியீட்டில் உதயநிதி ஸ்டாலின்

விக்ரம் படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விழாவில் நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு பேசி வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் பேசும் போது "அரசியல் கட்சி தொடங்கி சிறப்பாக செயல்பட்டு வரீங்க கமல் சார். ஆனா ஒரு ரெக்வஸ்ட், வருசத்துக்கு ஒரு படமாச்சு பண்ணுங்க சார் . ரெட் ஜெயன்ட்ல பல சின்ன படங்கள் தயாரிக்கும் போது பெரிய பலமா கமல் சார் இருப்பாரு. நானும் அவரோட பெரிய ரசிகன்.. இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கு " என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism