கடந்த வாரம் `கேப்மாரி’, `சாம்பியன்’, `காளிதாஸ்’ மற்றும் `மெரினா புரட்சி’ எனப் பல படங்கள் ரிலீஸாகின. இந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸாக இருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.

1. ஹீரோ
Summary : கல்வித்துறையின் மோசடிகளை எதிர்க்கும் சாமானியன், எப்படி சூப்பர் ஹீரோ ஆகிறார் என்பதே இந்த `ஹீரோ’.
Director: மித்ரன்
Lead Role: சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன்
Release Date: 20 Dec 2019
2. தம்பி
Summary : வீட்டைவிட்டு ஓடிப்போன ஹீரோ 15 வருடங்களுக்குப் பிறகு தன் வீட்டுக்கு வருகிறார். உண்மையாகவே வீட்டுக்கு வந்திருப்பவர், ஓடிப்போனவர்தானா; அவர் வந்த பிறகு நடக்கும் பிரச்னைகள் என்ன என்பதே `தம்பி’.
Director: ஜீத்து ஜோசப்
Lead Role: ஜோதிகா, கார்த்தி, சத்யராஜ்
Release Date: 20 Dec 2019
இந்த இரு படங்கள் தவிர்த்து சல்மான் கான் நடிப்பில், பிரபுதேவா இயக்கியிருக்கும் `தபங்’ படத்தின் மூன்றாவது பாகம் தமிழ் டப்பிங்கில் ரிலீஸாகிறது.