Published:Updated:

`வாரிசு', `துணிவு' சிங்கிள் ரிலீஸ் எப்போது? - காத்திருக்கும் ஆச்சரிய அப்டேட்

வாரிசு vs துணிவு

'' `மியூசிக்கைப் பொறுத்தவரை உங்களுக்கு என்ன விருப்பமோ அதைப் பண்ணுங்க' என அஜித் சொல்லியிருக்கிறார் ''

`வாரிசு', `துணிவு' சிங்கிள் ரிலீஸ் எப்போது? - காத்திருக்கும் ஆச்சரிய அப்டேட்

'' `மியூசிக்கைப் பொறுத்தவரை உங்களுக்கு என்ன விருப்பமோ அதைப் பண்ணுங்க' என அஜித் சொல்லியிருக்கிறார் ''

Published:Updated:
வாரிசு vs துணிவு
விஜய்யின் `வாரிசு', அஜித்தின் `துணிவு' இரண்டுமே பொங்கல் விருந்தாக வெளிவருகிறது என்பதால், அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் படுவேகமாக நடந்து வருகின்றன.

'வாரிசு' படத்திற்கு தமனும், 'துணிவு' படத்திற்கு ஜிப்ரானும் இசையமைத்து வருகிறார்கள். இதனிடையே 'வாரிசு' படத்தின் சிங்கிள் ட்ராக் கடந்த தீபாவளி அன்று வெளியாகும் என பேச்சு கிளம்பியது. விஜய்யின் ரசிகர்களும் அதனை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். இந்நிலையில் இந்த இரண்டு படங்களின் சிங்கிள் எப்போது வெளிவருகிறது என விசாரித்தோம்.

துணிவு அஜித்
துணிவு அஜித்

'வாரிசு' படத்தின் ஆடியோ ரைட்ஸை டி.சீரீஸ் நிறுவனம் ரூ.5 கோடிக்கு வாங்கியிருக்கிறது. இந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளிலும் பாடல்கள் வருகின்றன. படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜூம்- டி.சிரீஸும் முதன் முறையாக 'வாரிசு' க்காக தான் இணைந்துள்ளனர் என்கிறார்கள். கடந்த தீபாவளிக்கு முதல் நாள் வரை படப்பிடிப்பு வேலைகள் இருந்ததால், சிங்கிளைக் கொண்டு வர முடியவில்லை. இப்போது நவம்பர் முதல் வாரத்தில் சிங்கிளை வெளியிட திட்டமிட்டுள்ளனர். தமன் இசையில் விஜய் பாடியுள்ள அந்தப் பாடல், செம துள்ளல் ரகம் என்கிறாரகள்.

வாரிசு விஜய்
வாரிசு விஜய்

அஜித் - விக்னேஷ்சிவனின் 'அஜித் - 61' படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பதால் `துணிவு' படத்தில் அனிருத்தை ஒரு பாடல் பாட வைத்தால் நன்றாக இருக்கும் ஜிப்ரானும் நினைத்திருக்கிறார். இது குறித்து அஜித்திடம் அவர் அனிருத்தை பாட வைக்கும் விருப்பத்தை தெரிவிக்க, 'மியூசிக்கைப் பொறுத்தவரை உங்களுக்கு என்ன விருப்பமோ அதைப் பண்ணுங்க' என அஜித்தும் சொல்லியிருக்கிறாராம். ஏற்கெனவே 'வேதாளம்' படத்தில் அவர் பாடிய 'ஆலுமா டோலுமா' அதிரி புதிரி ஹிட் அடித்தது. இப்போது நீண்ட இடைவெளிக்கு பின் அஜித்திற்கு அனிருத் பாடியுள்ளார். அஜித்தின் முதல் சிங்கள் பாடலும் நவம்பர் முதல் வாரத்தில் வரக் காத்திருக்கிறது. ஆக, நவம்பர் முதல் வாரத்தில் விஜய்- அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டங்கள் காத்திருக்கிறது.