Published:Updated:

பாலா - சூர்யா பட அப்டேட்: தொடங்கியது கதாநாயகி ஆடிஷன்; ஷூட்டிங் எப்போது?

''சூர்யா இணையும் படத்திற்கான வேலைகள் ஆரம்பித்துவிட்டன. கதாநாயகி தவிர, மற்ற கதாபாத்திரங்களுக்கான ஆடிஷன்கள் பாலாவின் அலுவலகத்தில் நடந்து வருகிறது. கதாநாயகி முடிவானதும் இதற்கான போட்டோஷூட் நடக்க உள்ளதாம்...''

சூர்யாவின் 'ஜெய்பீம்' படத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. அவர்களுக்கு 'பணிவான', 'கனிவான' பதில்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார் சூர்யா. இன்னொரு புறம், சத்தமே இல்லாமல் அடுத்த படத்திற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டார்.

'நந்தா' பிதாமகன்', 'மாயாவி' படத்திற்கு பிறகு நீண்ட வருட இடைவெளிக்குப் பின் பாலாவுடன் சூர்யா மீண்டும் இணைகிறார். கடந்த தீபாவளிக்கு முன்னதாக ஒரு நல்ல நாளில் சூர்யா, இதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். அதில்

பாலா - சூர்யா
பாலா - சூர்யா

''என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்… ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்.. 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்… அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்... அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்…'' என நெகிழ்ந்து தெரிவித்திருந்தார். பாலா, சூர்யா இணையும் படத்திற்கான வேலைகள் ஆரம்பித்துவிட்டன. கதாநாயகி தவிர, மற்ற கதாபாத்திரங்களுக்கான ஆடிஷன்கள் பாலாவின் அலுவலகத்தில் நடந்து வருகிறது. கதாநாயகி முடிவானதும் இதற்கான போட்டோஷூட் நடக்க உள்ளதாம். வருகிற டிசம்பரில் படப்பிடிப்பு கிளம்புகிறார்கள் எனத் தகவல்.

'சிறுத்தை' சிவா, சூர்யாவின் இணையும் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்குகிறதாம். இதனை அடுத்தே வெற்றிமாறனின் 'வாடிவாசலு'க்கு செல்கிறார் சூர்யா. இதற்கிடையே மாதவன் இயக்கத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த 'ராக்கெட்ரி' அடுத்தாண்டு ஏப்ரலில் வெளியாகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு