Published:Updated:

"கெளதம் கார்த்திக் எல்லோர் கண்ணுலயும் `வெரலு' விட்டு ஆட்டுவார்... ஏன்னா?!" - புதுப்பட அப்டேட்

கெளதம் கார்த்திக்
கெளதம் கார்த்திக்

"கெளதம் கார்த்திக்கை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரை வெச்சு ஒரு படம் பண்ணணும்னு நினைச்சுட்டு இருந்தேன். அது இப்போ நடந்திருக்கு. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதை இது." கெளதம் கார்த்திக்கின் அடுத்தப் படம்!

'பாணா காத்தாடி' , 'செம போத ஆகாத' என இரண்டு படங்களை இயக்கியவர், இயக்குநர் பத்ரி வெங்கடேஷ். தற்போது ரியோ, ரம்யா நம்பீசன் ஆகியோரை வைத்து 'பிளான் பண்ணி பண்ணணும்' என்ற காமெடி படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த வருடம் மார்ச் இறுதியில் வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், லாக்டெளன் காரணமாக படம் வெளியாகாமல் இருக்கிறது. இந்நிலையில், தன்னுடைய அடுத்தப் படத்தை ஆரம்பித்திருக்கிறார், இயக்குநர் பத்ரி வெங்கடேஷ். அந்தப் படத்தில் கெளதம் கார்த்திக் நாயகனாக நடிக்க இருக்கிறார்.

கெளதம் கார்த்திக்
கெளதம் கார்த்திக்

'''பிளான் பண்ணி பண்ண்ணும்' படத்தை தயாரிச்ச பாசிட்டிவ் பிரின்ட் மீடியா நிறுவனம் மூலம் ராஜேஷ், சிந்தன் இவங்க ரெண்டு பேரும்தான் சேர்ந்து தயாரிக்கிறாங்க. இந்தப் படத்தை முடிச்சவுடனே இன்னொரு படம் ஆரம்பிக்கலாம்னு பேசிட்டு இருந்தோம். ஆனா, அதுக்குள்ள லாக்டெளன் வந்துடுச்சு.

எம்ஜிஆரின் குரலும், கலையரசனின் வாலும், அரசியல் மாயாஜாலமும்... என்ன சொல்கிறது `குதிரைவால்' சினிமா?!

கெளதம் கார்த்திக்கை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரை வெச்சு ஒரு படம் பண்ணணும்னு நினைச்சுட்டு இருந்தேன். அது இப்போ நடந்திருக்கு. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதை இது. கெளதமுக்கும் கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. சென்னை திருவல்லிக்கேணியில நடக்குற கதை. என் முதல் படம் லவ், ரெண்டாவது படம் த்ரில்லர், மூணாவது படம் காமெடி. எனக்கு முழு நீள ஆக்‌ஷன் படம் புதுசு.

இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் - கெளதம் கார்த்திக்
இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் - கெளதம் கார்த்திக்

நிறைய ரன்னிங், சேஸிங் இருக்கும். இதுவரைக்கும் நான் பண்ணதைவிட பெரிய பட்ஜெட். 'வெரலு'ங்கிறது ஹீரோ கேரக்டர் பெயர். எல்லாருடைய கண்ணுலயும் விரலைவிட்டு ஆட்டுறவன். சில பேர் இவன் கண்ணுல விரலைவிட்டு ஆட்டுறாங்க. அதுக்கு இவர் எப்படி ரிவெஞ்ச் எடுக்கிறார் அப்படிங்கிறதுதான் கதை. சில படங்கள்ல கெளதம் ஆக்‌ஷன் காட்சிகள் நடிச்சிருந்தாலும் இதுல வழக்கத்தை விட அதிகமாவே இருக்கும். அதுக்குனு நிறைய பன்ச் டயலாக் எல்லாம் இருக்காது. ரியலிஸ்டிக் ஆக்‌ஷனாதான் இருக்கும். ஹீரோயின் ஒரு சிலர்கிட்ட பேசிக்கிட்டிருக்கோம். கிட்டத்தட்ட ஃபைனல் ஆகிடுச்சு. சீக்கிரமாவே சொல்றேன். டிசம்பர் ரெண்டாவது வாரம் ஷூட்டிங் ஆரம்பிச்சு 2021 சம்மருக்கு ரிலீஸ்னு பிளான் பண்ணியிருக்கோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு