Published:Updated:

#Vijay65 இயக்குநர் நெல்சன் கன்ஃபார்ம்?! அறிவிப்பு எப்போது?

விஜய் | மாஸ்டர்
News
விஜய் | மாஸ்டர்

#Vijay65 பற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும்? `மாஸ்டர்' ரிலீஸ் தேதி என்ன?

விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படத்தின் டீசருக்கான அறிவிப்பு எப்போது வரும் என காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு தீபாவளியன்று வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்தது விஜய் தரப்பு. அடுத்து, படம் எப்போது வெளியாகும் என்பது விஜய் ரசிகர்களின் ஆவல் மட்டுமல்லாது திரையரங்கு உரிமையாளர்களின் ஆவலாகவும் இருக்கின்றது.

தியேட்டர்கள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்த நிலையில், அடுத்தடுத்த படங்கள் வெளியாகின. ஆனால், எந்தப் படத்திற்கும் சொல்லும்படியான கூட்டம் இல்லை. அதை ஒப்பிடும்போது கிறிஸ்டோஃபர் நோலனின் 'டெனெட்' படத்தைக் காண வந்த கூட்டம் அதிகம். அந்தப் படம்தான் அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. 50% இருக்கை வசதிகள் எப்போது அதிகரிக்கிறதோ அப்போதுதான் தங்களின் படங்களை வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர் பெரிய பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள்.

மாஸ்டர்
மாஸ்டர்

விஜய்யின் 'மாஸ்டர்' திரையரங்குகளில் வெளியானால் அதிகபடியான மக்கள் திரையரங்குகள் நோக்கி வருவார்கள் என்ற நம்பிக்கையில் திரையரங்கு உரிமையாளர்கள் காத்திருக்கின்றனர். படம் ஜனவரி 13ம் தேதி வெளியாக அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். அதற்குள், தியேட்டர்களில் இருக்கும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும் கூறுகின்றனர். 'மாஸ்டர்' வெளியானால் அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்கள், சின்ன பட்ஜெட் படங்கள் என ஒவ்வொன்றாக வெளியாகும் என்பதில் சந்தேகமில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சரி, விஜய்யின் 65வது படத்திற்கு வருவோம். பாண்டிராஜ், சுதா கொங்கரா, முருகதாஸ் என இயக்குநர்கள் மாறிய கதை எல்லாம் நமக்கு நன்கு தெரியும். கடைசிக்கட்டமாக இயக்குநர் நெல்சன், அந்த ரேஸில் முன்னிலையில் இருக்கிறார் என்பதும் தெரியும். அந்தப் படத்தை நெல்சன் இயக்கப்போவது உறுதியாகிவிட்டது. அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31ம் தேதி சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து வெளியாக இருக்கிறது.

இயக்குநர் நெல்சன்
இயக்குநர் நெல்சன்

இதற்காக, சமீபமாக கலாநிதி மாறனைச் சந்தித்திருக்கிறார் விஜய். 'மாஸ்டர்' படத்தின் சேட்டிலைட் உரிமையும் சன் டிவியிடம்தான் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் யார் என்பதில் சின்ன சந்தேகம் இருக்கிறது. நெல்சன் என்பதால் அனிருத் அந்தப் படத்திற்கு இசையமைக்க அதிக வாய்ப்பிருக்கிறது. அதே சமயம், முருகதாஸ் இயக்குவதாக இருந்த சமயத்தில், தமன் இசையமைக்கிறார் என்பதும் வெளியே வந்த செய்தி. அதனால், தமனே இசைமைக்கவும் வாய்ப்பிருக்கிறது.