Published:Updated:

Surya: `வணங்கான்' படத்தில் இணைந்த இயக்குநர் இவர்தானா? - உண்மை என்ன?

பாலா - சூர்யா

``இதற்கிடையே இயக்குநர் சிவா - சூர்யாவின் படத்தின் மூன்றாவது கட்டப் படப்பிடிப்பு அதாவது சென்னை, கோவாவைத் தொடர்ந்து நேற்று மீண்டும் சென்னையில் தொடங்கியிருக்கிறது. ''

Published:Updated:

Surya: `வணங்கான்' படத்தில் இணைந்த இயக்குநர் இவர்தானா? - உண்மை என்ன?

``இதற்கிடையே இயக்குநர் சிவா - சூர்யாவின் படத்தின் மூன்றாவது கட்டப் படப்பிடிப்பு அதாவது சென்னை, கோவாவைத் தொடர்ந்து நேற்று மீண்டும் சென்னையில் தொடங்கியிருக்கிறது. ''

பாலா - சூர்யா

`நந்தா', `பிதாமகன்' படங்களுக்குப் பாலாவின் `வணங்கான்' அதிக எதிர்பார்ப்புடன் படப்பிடிப்பு ஆரம்பித்தது. கன்னியாகுமரி, ராமேஸ்வரம் ஆகிய கடலோரப் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் பாலாவுக்கும் சூர்யாவிற்கும் படப்பிடிப்பில் வாக்குவாதம், படப்பிடிப்பு பாதியில் நின்றது என்ற தகவல் பரவியது. உடனே தயாரிப்பாளரான சூர்யா தரப்பில் ``ஜூன் மாதத்தில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு கோவாவில் துவங்க உள்ளது" என அறிவித்தனர். அதுவரை 'சூர்யா41' படமாக இருந்தது, பாலாவின் பிறந்தநாளன்று `வணங்கான்' ஆக மாறியது. படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை, கீர்த்தி ஷெட்டி ஹீரோயின் என நல்ல டீமும் இருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சிவா - சூர்யா கூட்டணியில் துவங்கப்பட்டது. அதன் முதல்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடந்து முடிந்தது.

வணங்கான்
வணங்கான்

இந்நிலையில் இப்போது `வணங்கான்' படத்தின் ஸ்கிரிப்ட் முழுவதையும் பாலா மாற்றி வருகிறார், அதன் கதை விவாதத்தில் 'அருவி' இயக்குநர் அருண் புருஷோத்தமன் பங்கேற்று வருகிறார் என்றும் தகவல் பரவியுள்ளது. இதுகுறித்து சூர்யா வட்டாரத்தில் விசாரித்தோம்.

''பாலா- சூர்யாவின் 'வணங்கான்' ஸ்கிரிப்ட் வேலைகளில் இப்போது 'அருவி' இயக்குநர் பெயர் வெளிவந்திருக்கிறது. இதற்கு முன் பாலாவின் இதே கதையில் சுதா கொங்கரா பங்கெடுத்தார் என்றும் சொன்னார்கள். பின்னர் 'தெய்வத்திருமகள்' ஏ.எல்.விஜய்யும் பாலாவின் ஸ்கிரிப்டில் உதவியிருக்கிறார் என்ற பேச்சும் வந்தது. சிவகார்த்திகேயனின் டீமில் உள்ள அருண் புருஷோத்தமனை, பாலா அழைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அதில் உண்மை இருக்காது என்றும் சொல்கிறார்கள். இன்னொரு பக்கம், பாலா புதுப்பொலிவுடன் வேறொரு கதையை தயார் செய்து சூர்யாவிடம் கொடுத்துவிட்டதாகவும், சூர்யாவிடம் இருந்து இன்னும் பதில் எதுவும் வரவில்லை" என்றும் சொல்கிறார்கள். மேலும், அதிகாரப்பூர்வ தகவல்கள் வந்தால் மட்டுமே வணங்கான் படத்தின் அப்டேட் தெரியும் என்கின்றனர்.

சிவா, சூர்யா, டி.எஸ்.பி.
சிவா, சூர்யா, டி.எஸ்.பி.

இதற்கிடையே இயக்குநர் சிவா - சூர்யாவின் படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு அதாவது சென்னை, கோவாவைத் தொடர்ந்து நேற்று மீண்டும் சென்னையில் துவங்கியிருக்கிறது. நாளையும் சென்னையில்தான் படப்பிடிப்பு நடக்கிறது. சிவா படத்தின் படப்பிடிப்பே மார்ச் வரை இருக்கிறது என்கிறார்கள்.