Published:Updated:

`கே.ஜி.எஃப் 2' படத்தில் இணைந்த `வடசென்னை' பிரபலம்!

`கே.ஜி.எஃப்' முதல் பாகத்தைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வருகிறது `கே.ஜி.எஃப் 2'.

கே.ஜி.எஃப்
கே.ஜி.எஃப்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21-ம் தேதி வெளியான `கே.ஜி.எஃப் படம், கன்னட ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. கோலார் தங்கச் சுரங்கத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை, பிரஷாந்த் நீல் இயக்கினார். இந்தப் படத்துக்குப் பிறகு, நாயகன் யஷ் மக்களிடையே பரவலாகப் பேசப்பட்டார். சிலர் அவரது ஹேர் ஸ்டைலை வைக்கத் தொடங்கினர். பிரமாண்ட பொருள் செலவில் உருவான இந்த கேங்ஸ்டர் படத்தின் தமிழ் வெர்ஷன் வசனங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதன் முதல் பாகம் கருடனைக் கொன்றதோடு முடியும். அதைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கான தொடர்ச்சியையும் வைத்திருப்பார்கள்.

சரண்
சரண்

இந்நிலையில், `கே.ஜி.எஃப் 2' படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கி தற்போது நடைபெற்றுவருகிறது. இந்தப் படத்தின் வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார். தவிர, `வடசென்னை', `சகா' உள்ளிட்ட படங்களில் நடித்த சரண் இந்தப் படத்தில் தற்போது இணைந்துள்ளார். `வடசென்னை' படத்தில் தனுஷின் மைத்துனராக இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும் இந்தப் படத்தில் இவர் இணைந்துள்ளதை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார், சரண்.