Published:Updated:

"எனக்காக 'வட சென்னை' பார்த்தார் யஷ்!" - கே.ஜி.எஃப்-2 அனுபவம் சொல்லும் சரண்

"தமிழ் சினிமாவில் நான் எதிர்பார்க்காத இடம் எனக்குக் கிடைச்சிருக்குன்னு நினைக்கிறேன். சினிமா பின்னணி இல்லாத என்ன மாதிரி பையனை எல்லோரும் ரசிக்கிறது எனக்கு பயத்தையும் பொறுப்பையும் கொடுத்திருக்கு!" என்கிறார் 'வடசென்னை' சரண்.

சரண்
சரண்

" 'கே.ஜி.எஃப் 2' படத்துல நடிச்சிட்டிருக்கீங்கன்னு கேள்விப்பட்டோமே?"

"ஆமாம். நான் இந்தப் படத்தோட மிகப்பெரிய ரசிகன். பார்ட்-1 பெரிய ஹிட். அப்படி இருக்கும்போது, 'கே.ஜி.எஃப் 2' படத்துல நான் கமிட்டானது எதிர்பாரத ஒண்ணுதான். திடீர்னு ஒருநாள் ஒரு போன் கால் வந்தது. 'படத்தோட ஷூட்டிங் ஆரம்பிக்கப்போறோம். 5 நாள் உங்களுக்கான போர்ஷன் இருக்கும். நீங்க ஃப்ரீயா'ன்னு கேட்டாங்க. எனக்கு இந்த போன் வந்ததே ஆச்சர்யமா இருந்தது. கன்னடத்துல ஹிட்டான ஒரு படத்துல நடிக்க, தமிழ் சினிமாவுல என்னைப் பார்த்துட்டு கூப்பிடுறாங்களேன்னு சந்தோஷப்பட்டேன். படத்தோட கதை, என்னோட கேரக்டர் எல்லாத்தையும் போன்ல சொன்னாங்க, உடனே ஓகே சொல்லிட்டேன். நேரா ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போய் நடிச்சுக் கொடுத்தேன்!"

"யஷ்கூட நடிச்ச அனுபவம் எப்படி இருந்தது?"

சரண்
சரண்

"யஷ்கூட நடிச்ச அனுபவம் ரொம்ப சூப்பர். அவர் ஆளைப் பார்க்கும்போது ரொம்ப ஆட்டிட்யூடா இருப்பார்னு நினைச்சேன். ஆனா, நேர்ல அதுக்கு எதிர்மாறா இருந்தார். 'வட சென்னை' படம் பார்த்துட்டுத்தான் என்னை இந்தப் படத்தில் நடிக்கக் கூப்பிட்டிருந்தாங்க. முதல்நாள் என்கிட்ட பேசும்போது 'நீங்க நடிச்ச 'வட சென்னை' படம்பத்தி எல்லோரும் சொல்றாங்க. நான் இன்னும் படம் பார்க்கல. பார்த்துட்டு சொல்றேன்'னு சொன்னார். 2 நாள் கழிச்சு 'படம் பார்த்துட்டேன். ரொம்ப சூப்பரா நடிச்சிருக்கீங்க''னு பாராட்டினார். என்கிட்ட பேசுறதுக்காகவே 'வட சென்னை' படம் பார்த்திருக்கார்ன்றது எனக்கு ரொம்பப் பெருமையா இருந்துச்சு. அப்புறம் ஒரு அவார்டு ஃபங்ஷன்ல தனுஷ் சார்கிட்ட 'உங்கக்கூட நடிச்ச சரண் இப்ப கே.ஜி.எஃப்-2ல என்கூட நடிக்கிறார்'னு சொல்லியிருக்கிறார். யஷ் ரொம்ப ஜென்டில்மேன்."

"ஐந்து மொழிகளில் இந்தப் படம் ரிலீஸாகுது. மற்ற மொழிகளில் நடிக்க ஈஸியா இருந்ததா?"

சரண்
சரண்

"எனக்கும் கமிட்டானப்போ இந்தச் சந்தேகம் இருந்தது. எப்படிப் பண்ணப்போறோம்னு யோசிச்சுக்கிட்டிருந்தேன். இருந்தாலும் நடிச்சிடலாம்னு நம்பிக்கை இருந்தது. கன்னடத்துல பேசி நடிக்க ஆரம்பிச்சேன். இயக்குநரும் சொல்லிக் கொடுத்தார். இருந்தும் கஷ்டமா இருந்தது. அப்புறம், 'தம்பி நீ தமிழ்லேயே பேசி நடிப்பா; பிரச்னை இல்லை'ன்னு சொல்லிட்டாங்க. என் போர்ஷன் முழுக்க தமிழில் பேசித்தான் நடிச்சேன். தெலுங்கு பேசி நடிக்கிறப்போகூட கஷ்டப்படல. ஆனா, கன்னட உச்சரிப்பைப் புரிஞ்சுக்கிட்டுப் பேச சிரமமா இருந்தது. படத்துல முக்கியமான ரோல்ல நான் நடிக்கிறேன். அது என்னன்னு இப்போதைக்குச் சொல்ல முடியாது."

"நயன்தாராவுடன் 'நெற்றிக்கண்' பட வாய்ப்பு எப்படி வந்தது?"

`` 'கே.ஜி.எஃப் 2' படத்தோட ஷூட்டிங்கில் இருந்தப்போ மிலிந்த் சார் போன் பண்ணி, 'படத்துல ஒரு ரோல் இருக்கு, நீங்கதான் எங்க மைண்டில் வந்தீங்க. உங்களைத்தான் முதலில் ஆடிஷன் பண்ண இருக்கோம்'னு சொன்னார். இந்த வார்த்தையே எனக்கு எனர்ஜியா இருந்தது. அதுமட்டுமல்லாம மிலிந்த் சார் மணி சாரோட உதவி இயக்குநர் வேற. கதை சொன்னார். ரொம்ப மேஜரான ரோல் எனக்குக் கொடுத்திருக்கார். ஷூட்டிங் இப்போதான் ஆரம்பிச்சு போயிட்டிருக்கு."

Saran
Saran

"வெற்றிமாறன் - தனுஷ் காம்போல மீண்டும் ஒரு படம். அசுரன் எப்ப்படியிருக்கும்னு நினைக்கிறீங்க?"

"வெற்றிமாறன் சார் பயங்கர பர்ஃபக்‌ஷனிஸ்ட். அவர் எல்லோர்கிட்ட இருந்தும் பெஸ்ட்டை வாங்கிடுவார். தனுஷ் சார் சூப்பர் நடிகர். இவங்ககிட்ட இருந்து இன்னொரு பெஸ்ட் வரப்போகுது. 'அசுரன்'க்கா நானும் வெயிட்டிங்."