Published:Updated:

வடிவேலு குறித்து சிங்கமுத்துவின் கமென்ட்... முடக்கப்பட்ட நடிகர் சங்க வாட்ஸ்அப் குரூப்!

வடிவேலு
வடிவேலு

வடிவேலு நல்ல திறமைசாலி. ஆனால், கேட்பார் பேச்சைக் கேட்டு கெட்டுப் போய் விட்டதாகச் சொல்லியிருந்த சிங்கமுத்து, அவருக்கும் வடிவேலுக்கும் இடையில் நடக்கிற வழக்கு பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

சில தினங்களுக்கு முன், நடிகர் மனோபாலா தனது யூடியூப் சேனலுக்காக நகைச்சுவை நடிகர் சிங்கமுத்துவை பேட்டி எடுத்திருந்தார்.

அதில் தனது வாழ்க்கை அனுபவங்களைப் பேசியிருந்த சிங்கமுத்து, இடையிடையே நடிகர் வடிவேலு குறித்தும் சில கருத்துகளைப் பதிவுசெய்திருந்தார்.

''வடிவேலு நல்ல திறமைசாலி. ஆனால், கேட்பார் பேச்சைக் கேட்டு கெட்டுப் போய்விட்டார்'' எனச் சொல்லியிருந்த சிங்கமுத்து, அவருக்கும் வடிவேலுக்கும் இடையில் நடக்கும் வழக்கு பற்றியும் குறிப்பிட்டிருந்தார். அப்போது, ''அந்த வழக்கு முடிய 10 வருஷம் ஆகலாம்’' என்று குறிப்பிட்டதுடன், வடிவேலு குறித்து அச்சிலேற்ற முடியாத சில வார்த்தைகளையும் பயன்படுத்தியிருந்தார்.

சிங்கமுத்து
சிங்கமுத்து

நான்கு பாகங்களாக வெளிவந்த இந்த பேட்டியின் லிங்க்கை மனோபாலா, ‘SIAA லைஃப்’ என்ற நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர்களின் வாட்ஸ் அப் குழுவிலும் பகிர, அங்குதான் பிரச்னை தொடங்கியிருக்கிறது.

''அவர்பாட்டுக்கு தனியா இருக்கார்... ஏன் அவரை இதுபோல அசிங்கப்படுத்தறீங்க'’ என குரூப்பில் சிலர் கமென்ட் போடத் தொடங்க, அதற்குள் வீடியோவைப் பார்த்த நடிகர் வடிவேலு, நடிகர் சங்கத்துக்கு தமிழக அரசு நியமித்திருக்கும் சிறப்பு அதிகாரி கீதா வடிவேலுவிடம் ஒரு புகாரைப் பதிவுசெய்துவிட்டார். அந்தப் புகாரில்... மனோபாலா, சிங்கமுத்து இருவர் மீதும் சங்க விதிப்படி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

மனோபாலா
மனோபாலா

வடிவேலு புகார் அளித்த அடுத்த சில மணிநேரத்தில், ’குழுவில் அட்மின் தவிர எவரும் எந்தப் பதிவையும் போடக் கூடாது’ என குழு முடக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தப் பிரச்னை குறித்து காவல்துறையிலும் நடிகர் வடிவேலு புகார் அளிக்க இருக்கிறாராம்.

அடுத்த கட்டுரைக்கு