Published:Updated:

வைபவ்-வெங்கட் பிரபு போலீஸாக நடிக்கும் படத்துக்கு டைட்டில் ரெடி!

தார்மிக் லீ

சாச்சி இயக்கத்தில் வைபவ் நடித்திருக்கும் படம், `சிக்ஸர்'. காமெடி ஜானரில் உருவாகியிருக்கும் இப்படம், வரும் வெள்ளிக்கிழமை (30 ஆகஸ்ட் 2019) வெளியாகிறது.

Nithin Sathya - Vaibhav - Vani Bhojan
Nithin Sathya - Vaibhav - Vani Bhojan ( Kallam Karka )

இதைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் வைபவ் நடிக்க இருக்கும் படத்துக்கு `கள்ளம் கற்க' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. `மேயாத மான்' படத்தைத் தொடர்ந்து வைபவ் நடித்திருக்கும் படமான `சிக்ஸர்', வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இதைத் தொடர்ந்து வைபவ் முதல் முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாயின.

மேலும், வெங்கட் பிரபுவும் இப்படத்தில் போலீஸாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டுவந்தது. `தெய்வமகள்' சீரியல் பிரபலமான வாணி போஜன் இப்படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடிக்கிறார். நித்தின் சத்யா தயாரிக்கும் இப்படத்துக்கு அரோல் கரோலி இசையமைக்கிறார்.

Vaibhav
Vaibhav

மேலும், படத்தின் இசையமைப்பாளரான அரோல் கரோலி, சமீபத்தில் ட்விட்டர் லைவ் வந்துள்ளார். அப்போது ஆக்‌ஷன் - த்ரில்லர் ஜானரில் உருவாக இருக்கும் இப்படத்துக்கு `கள்ளம் கற்க' என்ற டைட்டிலை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். `ஜருகண்டி' படத்தைத் தொடர்ந்து நித்தின் சத்யா இப்படத்தை தயாரிக்கிறார். எஸ்.ஜி.சார்லஸ் என்பவர் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.