Published:Updated:

அஜித்தின் `வலிமை' ஷூட்டிங் மாஸ்கோவில் முடிந்தது... நாளை சென்னை திரும்புகிறார்!

வலிமை அஜித்
வலிமை அஜித்

கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி அஜித் உள்ளிட்ட 'வலிமை' குழுவினர் மாஸ்கோவுக்குப்போய் இறங்கினர். கிட்டத்தட்ட 10 நாள்கள் நடந்த பைக் சேஸிங் காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்திருக்கிறது. போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கி வரும் படம் 'வலிமை'. வரும் தீபாவளிக்கு தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்துக்கு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடந்தது. ஆனால், கடந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா பரவியதால் இதன் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது.

லாக்டெளன் முடிந்தப்பிறகு இந்தாண்டு தொடக்கத்தில் மீண்டும் ஹைதராபாத்தில் சில காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டில் பைக் ஸ்டன்ட் காட்சி மட்டும் படமாக்கப்படவேண்டியிருந்தது. இதற்காக ஸ்பெயினைத் தேர்ந்தெடுத்திருந்தது படக்குழு. ஆனால், ஸ்பெயினில் இந்த லாக்டெளன் காலத்தில் படப்பிடிப்பு நடத்துவது சிரமம் என்பதால் மாஸ்கோவுக்கு ஷூட்டிங்கை மாற்றினார்கள்.

அஜித் - வலிமை
அஜித் - வலிமை

கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி அஜித் உள்ளிட்ட 'வலிமை' குழுவினர் மாஸ்கோவுக்குப்போய் இறங்கினர். கிட்டத்தட்ட 10 நாள்கள் நடந்த பைக் சேஸிங் காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. திட்டமிட்டப்படி பைக் சேஸிங் மற்றும் ஸ்டன்ட் காட்சிகள் அமைந்திருப்பதால் படக்குழு செம ஹேப்பியாம்! அதனால், இன்று இரவு மாஸ்கோவில் இருந்து அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்புகிறார்கள்.

இதற்கிடையே 'வலிமை' படத்தின் மற்றொரு பாடல் வரும் செப்டம்பர் 9-ம் தேதியன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகும் எனத் தெரிகிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு