Published:Updated:

வலிமை - சினிமா விமர்சனம்

வலிமை - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
வலிமை - சினிமா விமர்சனம்

வலிமைக்கு சந்தேகமே இல்லாமல் வலிமை சேர்ப்பது ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவும், சண்டைப் பயிற்சியாளர் திலீப் சுப்பராயனும்தான்.

வலிமை - சினிமா விமர்சனம்

வலிமைக்கு சந்தேகமே இல்லாமல் வலிமை சேர்ப்பது ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவும், சண்டைப் பயிற்சியாளர் திலீப் சுப்பராயனும்தான்.

Published:Updated:
வலிமை - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
வலிமை - சினிமா விமர்சனம்

பாசத்திற்கும் கடமைக்கும் இடையே தன் சமநிலை தவறிடாமல் இருக்கப் போராடும் ஒரு போலீஸ் அதிகாரியின் போராட்டமே இந்த வலிமை.

கொலை, கொள்ளை, போதை மருந்து கடத்தல் என சென்னை மாநகரின் அமைதியைக் குலைக்கிறது ஒரு பைக்கர்ஸ் கும்பல். ‘சாத்தானின் அடிமைகள்’ எனத் தங்களை அழைத்துக்கொள்ளும் அந்தக் கூட்டத்தின் வெறியாட்டத்தை அடக்க சென்னைக்கு மாற்றலாகி வருகிறார் அஜித். டெக்னாலஜி உதவியோடு ரகசியமாய்ச் செயல்படும் அந்த நெட்வொர்க்கை மெல்ல நூல் பிடித்து முன்னேறி நெருங்குகிறார். அதேசமயம் அவர் சொந்த வாழ்க்கையில் ஒரு பிரச்னை நேர, அது அவரின் போலீஸ் வேலைக்கும் சிக்கல் உண்டாக்குகிறது. இரண்டையும் சமாளித்து எப்படி அந்தக் கொடூர கும்பலின் தலைவனை வெல்கிறார் என்பதுதான் கதை.

இது அஜித்தின் ஒன் மேன் ஷோ. துப்பறியும் காட்சிகளில் ஸ்டைலாக, ஆக்‌ஷன் காட்சிகளில் மாஸாக, சென்டிமென்ட் காட்சிகளில் பாந்தமாகப் பல பரிமாணங்களில் மிளிர்கிறார் அஜித். ‘ரிஸ்க் எதுக்கு’ என்றெல்லாம் யோசிக்காமல் ஸ்டன்ட் காட்சிகளுக்காக அவர் கொட்டியிருக்கும் உழைப்பு பாராட்டுதலுக்குரியது.

வலிமை - சினிமா விமர்சனம்

ஏ.கேவின் ஏவலை அப்படியே பின்பற்றும் கதாபாத்திரம் ஹுமா குரேஷிக்கு. இடைவேளைக்கு முன்னான அந்த சேஸிங் காட்சியில் கெத்து காட்டுகிறார். பலமும் தந்திரமும் கொண்ட வில்லன் நரேன் வேடத்திற்குப் பக்காவான பொருத்தம் கார்த்திகேயா. முதல்பாதியில் மிரட்டுகிறார் என்றாலும், அடுத்தபாதியில் அவர் வெற்றுக்கூச்சலாகிவிடுவதுதான் சோகம். வில்லனின் அடியாள் அமித்தாக நடித்திருக்கும் துருவன் தொடங்கி அச்சுயுத் குமார், செல்வா, ஜி.எம் சுந்தர், பாவல் நவகீதன் என ஏகப்பட்ட நடிகர்கள். ஆனால் யாருடைய கதாபாத்திர வரைவிலும் தெளிவில்லாததால் வெறுமனே வந்துபோகிறார்கள். அம்மா சென்டிமென்ட் படத்தில் அம்மாவான சுமித்ராவின் நடிப்பும் ஓகே ரகம்தான் என்பதால் இரண்டாம்பாதி தத்தளிக்கிறது.

வலிமைக்கு சந்தேகமே இல்லாமல் வலிமை சேர்ப்பது ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவும், சண்டைப் பயிற்சியாளர் திலீப் சுப்பராயனும்தான். ‘உலகத்தரத்தில் ஸ்டன்ட்’ எனும் தமிழ்சினிமா ரசிகர்களின் கனவுக்கு திலீப் உயிர் கொடுக்க, ஒளியூட்டி அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறார் நீரவ். யுவன் - ஜிப்ரான் உழைப்பு பின்னணி இசையில் மட்டுமே தெரிகிறது.

வலிமை - சினிமா விமர்சனம்

மேக்கிங்கை சிரத்தையுடனும் திரைக்கதையை மெத்தனமாகவும் அணுகியிருக்கிறார் இயக்குநர் ஹெச். வினோத். அதனாலேயே முதல்பாதியும் இரண்டாம்பாதியும் தனித்தனிப் படங்களாகத் தெரிகின்றன. என்கவுன்ட்டருக்கு எதிரான அதிகாரி கடைசியில் குண்டு போடுவது என்ன வகை நியாயம்? உடன்படித்தவர்கள் எல்லாருக்கும் வேலைகிடைத்துவிட, ஒருவனுக்கு மட்டும் கிடைக்காவிட்டால் அது எப்படி சிஸ்டத்தின் பிரச்னையாகும்? கிரிமினல் குற்றவாளியை தண்டிக்காமல் பாசத்தில் குளிப்பாட்டினால் படம் பார்ப்பவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என எப்படி இயக்குநர் நினைத்தார் என ஏகப்பட்ட கேள்விகள். வலிந்து திணிக்கப்பட்ட வசனங்களும் செயற்கைத்தனத்தைக் கூட்டுகின்றன.

இயக்குநருக்கு தான் பேசவந்த விஷயத்தில் தெளிவிருந்திருந்தால் படமும் இன்னும் பேசப்பட்டிருக்கும்.