Published:Updated:

உருக்குலைக்கும் உருவகேலி... ‘வலிமை’காட்டும் சரண்யா

சரண்யா
பிரீமியம் ஸ்டோரி
சரண்யா

என் தம்பிகளைப் படிக்க வைக்கவும், படிப்புக்காக வாங்குன கடனை அடைக்கவும் வேலை தேட ஆரம்பிச்சேன்.

உருக்குலைக்கும் உருவகேலி... ‘வலிமை’காட்டும் சரண்யா

என் தம்பிகளைப் படிக்க வைக்கவும், படிப்புக்காக வாங்குன கடனை அடைக்கவும் வேலை தேட ஆரம்பிச்சேன்.

Published:Updated:
சரண்யா
பிரீமியம் ஸ்டோரி
சரண்யா

விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பில் ‘வல்லமை தாராயோ’ தொடரில் நடித்த சரண்யா ரவிச்சந்திரன், இப்போது ‘வலிமை’ படம்வரை வளர்ந்திருக்கிறார். வாய்ப்பு தேடி கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்தவர் சந்தித்த அவமானங்களும் பரிகாசங்களும் கொஞ்சமல்ல. அவரது அசாத்திய தன்னம்பிக்கைதான் இன்று அவரை பெரியதிரை வரை கைப்பிடித்துக் கூட்டிவந்திருக்கிறது. வலிகளைக் கடந்த வெற்றிக்கதையைப் பேசுகிறார் சரண்யா ரவிச்சந்திரன்.

“எனக்கு சொந்த ஊர் திருச்சி பக்கத்துல கே.கள்ளிக்குடிங்கிற கிராமம். அப்பா விவசாயி, அம்மா சித்தாள் வேலை பார்க்கிறாங்க. ரெண்டு தம்பிங்க இருக்காங்க. எங்க மூணு பேரையும் படிக்க வைக்க அம்மாவும் அப்பாவும் ரொம்ப கஷ்டப்பட்டாங்க.

உருக்குலைக்கும் உருவகேலி... ‘வலிமை’காட்டும் சரண்யா

அம்மாவோட தாலியை அடமானம் வெச்சு காலேஜ் ஃபீஸ் கட்டி, படிப்பை முடிச்சேன். என் தம்பிகளைப் படிக்க வைக்கவும், படிப்புக்காக வாங்குன கடனை அடைக்கவும் வேலை தேட ஆரம்பிச்சேன். வேலை கிடைச்சுருச்சுனு வீட்டுல பொய் சொல்லிட்டு சென்னைக்கு வந்தேன். தெருத்தெருவா அலைஞ்சு பொருள்கள் வித்துருக்கேன். புது கம்பெனியில் சேரும்போது, ஏற்கெனவே வாங்குன சம்பளத்தைவிட, 500 ரூபாய் அதிகமா தருவாங்க. அதனால அடிக்கடி புது கம்பெனி மாறுவேன்.

பூ, மூக்குத்தி, செருப்பு, டிரஸ்னு என் கிராமத்து தோற்றத்தைப் பார்த்துட்டு பலரும் கிண்டல் பண்ணிருக்காங்க. எதையும் வெளிய காட்டிக்காம எப்பவும் சிரிச்சுகிட்டே கடந்து போயிருவேன். ‘கலகலன்னு பேசுறியே... பேசாம வி.ஜே-க்கு முயற்சி பண்ணு’ன்னு என் ஃபிரெண்ட்ஸ் சொன்னதால வாய்ப்பு தேட ஆரம்பிச்சேன். வி.ஜே இன்டர்வியூக்கு வந்திருக்கேன்னு சொன்னதும் ‘மூஞ்சில பல்லு மட்டும்தான் தெரியுது. நீயெல்லாம் வி.ஜேவா’னு கேலி பண்ணிருக்காங்க...” கண்கள் கலங்க அமைதியாகிறார் சரண்யா.

“நான் இன்டர்வியூ எடுக்குற இடத்துல இருக்கிறதாலதானே என் தோற்றத்தைப் பார்த்துட்டு வாய்ப்பு கொடுக்க மாட் டேங்கிறீங்க... அதுவே இன்டர்வியூ கொடுக்குற இடத்துக்கு வந்துட்டா என் நிறம் உங்களுக்குப் பிரச்னையா இருக்காதுல்ல... அந்த இடத்துக்கு நான் வந்து காட்டுறேன்னு சபதம் எடுத்தேன். சினிமா வாய்ப்பு தேட ஆரம்பிச்சேன். அங்கேயும் உருவ கேலி தொடர்ந்துச்சு. தாழ்வு மனப்பான்மை அதிகமாகி, இந்த வாழ்க்கையே வேணாம்னு நினைக்கும்போது, அப்பாகிட்ட இருந்து போன் வரும், ‘என்ன சாமி பண்றே’ங்கிற அந்தக் குரல் மனசை என்னவோ செய்யும்.

 ‘வல்லமை தாராயோ’  தொடரில்
‘வல்லமை தாராயோ’ தொடரில்

ஜெயிக்கணும்ங்கிற வெறியோடு குறும் படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன். எங்கெல்லாம் சினிமா ஆடிஷன் நடக்குதோ அங்கெல்லாம் போவேன். கிடைக்கிற எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்க ஆரம்பிச்சேன். மெள்ள மெள்ள எனக்குனு ஓர் அங்கீகாரம் கிடைக்க ஆரம்பிச்சது. என் தம்பிகளைப் படிக்க வெச்சுருக்கேன். அம்மா, அப்பாவை சந்தோஷமா வெச்சிருக் கேன். உருவ கேலிக்கு ஆளாகிறவங்களைவிட, உருவ கேலி செய்யறவங்க தான் கூனிக் குறுகணும்னு இப்ப என் அனுபவத்துல கத்துக்கிட்டேன்...’’ வலிமையாகச் சொல்லும் சரண்யாவிடம், அவர் நடித் துள்ள ‘வலிமை’ படம் பற்றிக் கேட்டோம்.

“அஜித் சார் எல்லாருக்கும் மரியாதை கொடுத்து நடத்துவாரு. அவ்வளவு பெரிய ஹீரோ படத்துல நானும் நடிச்சிருக்கேன்றதே பெருமையான விஷயம்தான்... பட ரிலீஸுக்காக உங்களைப் போலவே நானும் வெயிட்டிங்” என்று விடைபெறுகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism