சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

“அஜித்துக்கு மார்க்கெட் இல்லைன்னு அப்போ சொன்னாங்க!”

அரவிந்த்சாமி
பிரீமியம் ஸ்டோரி
News
அரவிந்த்சாமி

ஆறு வழக்குகள். அவர் அந்த வழக்குகளைக் கையாண்ட விதம்னு படம் போகும்.

”நிஜமாகவே ஒவ்வொரு படம் ஆரம்பிக்கும்போதும் ‘மக்களுக்கு என்ன பிடிக்கும், எப்படிச் சொல்லணும்’னு ஒரு சின்ன தயக்கத்திற்குப் பிறகுதான் தொடங்குவோம். இதிலே அந்தப் பிரச்னை கிடையாது. ‘வணங்காமுடி’ நல்ல வேகம் பிடிக்கிற சினிமா. நிஜமா சந்தோஷமா இருக்கேன். நிறைய அவகாசம் எடுத்துச் செய்த ஸ்கிரிப்ட். ம்... ‘வணங்காமுடி’ போலீஸ் கதை. எனக்கு அரவிந்த்சாமியை ரொம்பப் பிடிக்கும். இதில் அவர் வழக்கமா பண்ற படங்களிலிருந்து விலகி வேறமாதிரி பண்ணியிருக்கார்” வெளிவரக் காத்திருக்கும் ’வணங்காமுடி’ பற்றிப் பேசத் தொடங்கினார் இயக்குநர் செல்வா. தமிழ் சினிமாவில் நீண்டகால அனுபவம் உள்ளவர். அஜித்தின் ஆரம்பக்காலப் படமான ‘அமராவதி’யின் இயக்குநர்.

“எனக்கு அரவிந்த்சாமியை ‘புதையல்’ படத்திலிருந்து தெரியும். அரவிந்த்சாமி நடுவில் சினிமால இருந்து விலகிட்டார். ஆனாலும் எங்களுக்குள் நட்பு இருந்தது. எப்போ நேரம் கிடைச்சாலும் அலைபேசியில் பேசிக்குவோம். பார்த்தால் திடீர்னு ‘தனி ஒருவன்’ படத்தில் நடிக்க வந்திட்டார்.

“அஜித்துக்கு மார்க்கெட் இல்லைன்னு அப்போ சொன்னாங்க!”
“அஜித்துக்கு மார்க்கெட் இல்லைன்னு அப்போ சொன்னாங்க!”

அடுத்தடுத்து நடிக்க ஆரம்பிச்ச அரவிந்த்சாமியை வெச்சே ‘வணங்காமுடி’யைத் தொடங்கினேன். ஆறு வழக்குகள். அவர் அந்த வழக்குகளைக் கையாண்ட விதம்னு படம் போகும். குற்றவாளிகளை முதலில் மக்கள் முன்னாடி வைத்து அம்பலப்படுத்துவார். அவங்க எவ்வளவு தூரம் கெட்டவங்கன்னு புரிய வைப்பார். அதற்கான தண்டனையை இவராகவே கொடுப்பார். மக்கள் மேடையில் இது சரியாகக்கூட இருக்கலாம். ஆனால் சட்டப்படி நிச்சயம் தவறு. இதுலகூட ஒரு வசனம் வரும். ரித்திகா சிங் தன் கணவர் கிட்ட ‘நீங்க சிங்கமா, சிறுத்தையா’ன்னு கேட்பாங்க. அவர் ‘மனுஷன்’னு சொல்வார். வன்முறையில் இறங்காமல், அடிச்சுத் துவைச்சு குற்றவாளிகளைத் தண்டிக்காமல் தன் அறிவால் வெல்வார். அவர்களை மீண்டும் எழவிடாமல் அமுக்கிவிடுவார். சுவாரஸ்யமான இடங்களுக்குப் படத்தில் நிறைய வாய்ப்பு இருக்கு.”

“அஜித்துக்கு மார்க்கெட் இல்லைன்னு அப்போ சொன்னாங்க!”
“அஜித்துக்கு மார்க்கெட் இல்லைன்னு அப்போ சொன்னாங்க!”

``ரித்திகா சிங், சிம்ரன், நந்திதான்னு நிறைய பேரைக் கொண்டு வந்திருக்கீங்க?’’

“ரித்திகா அரவிந்த்சாமியின் மனைவியா வர்றாங்க. சிம்ரனுக்கு அரவிந்த்சாமியோட கிளாஸ்மேட் ரோல். ஐ.பி.எஸ்-ஆக வர்றாங்க. நந்திதா, அரவிந்த்சாமியோடு பணிபுரிகிற இன்ஸ்பெக்டர். அத்தனை பேருக்கும் உரிய இடங்கள் இருக்கு. படம் ஆரம்பிச்சதிலிருந்தே க்ளைமாக்ஸ் ஆரம்பிக்கிற மாதிரி இருக்கும். சினிமாவில் மட்டும் உயரங்களைத் தாண்டணும்னா, வேகமும் தாகமுமா உழைச்சாதான் முடியும். அதனால்தான் முப்பது வருஷத்தில் இருபத்தொன்பது படங்கள்னு போக முடியுது. என் படங்களில் இமான் எப்போதும் இருப்பார். நல்ல இசையை மெல்லிசையாகக் கொடுத்திருக்கிறார்.”

“அஜித்துக்கு மார்க்கெட் இல்லைன்னு அப்போ சொன்னாங்க!”
“அஜித்துக்கு மார்க்கெட் இல்லைன்னு அப்போ சொன்னாங்க!”


``சினிமா மாறியிருக்கிறதை கவனிக்கிறீர்களா?’’

“டெக்னிக்கல் அம்சங்களில் உச்சம் தொடுறாங்க. இன்னும் எமோஷன் மாறவே இல்லை. இளைஞர்களுக்கு சென்டிமென்ட் பிடிக்காதுன்னு சொல்றாங்க. அதெல்லாம் கல்யாணம் ஆகிற வரைக்கும்தான். அப்புறம் வருகிற பிரச்னைகள், 1-ம் தேதி 30-ம் தேதின்னு வருகிற மாற்றங்கள்னு அவங்களுக்கும் சென்டிமென்ட் வந்திடும். பெருசா வெற்றியடைந்த ‘பாகுபலி’ வரைக்கும் பாருங்க, இங்கே சென்டிமென்ட் இல்லாமல் சினிமா இல்லை. அப்புறம் ‘உயிரைக் கொடுத்து நடிச்சிருக்கிறார்’னு சொல்வாங்களே, அதற்கு ரசிகர்கள் விடைகொடுத்திருக்காங்க. சமீபத்தில் புகழ்பெற்றிருக்கிற விஜய் சேதுபதிகூட அண்டர்ப்ளே செய்வதால் ரொம்பவும் ரசிக்கப்படுகிறார். காமெடி வடிவேலுவிற்குப் பிறகு வெற்றிடமாக இருக்கு. விவேக்கும் இறந்துபோய்ட்டார். வடிவேலுவும் தொடர்ந்து நடிக்க முடியாத சூழ்நிலை. அந்த இடம் நிரப்ப முடியாமல் இருக்கு. ஸ்கிரிப்டில் வெற்றிமாறன் ஆச்சரியப்படுத்துகிறார். அவர் அடுத்து என்ன செய்யப்போகிறார்னு ஆர்வத்தைத் தூண்டுகிறார். ஆனால் இப்போது இருக்கிற இயக்குநர்கள் ரொம்ப நாளைக்கு நிக்க முடியலை. என்னால முப்பது வருஷங்களில் 29 படம் செய்ய முடிஞ்சது. இனிமேல் வருகிறவர்களுக்கு அப்படி சாத்தியம் உண்டான்னு தெரியலை.”

செல்வா
செல்வா
“அஜித்துக்கு மார்க்கெட் இல்லைன்னு அப்போ சொன்னாங்க!”

``அஜித்தை நீங்கள் அறிமுகம் செய்தீங்க. இப்போதும் அவருடன் தொடர்பிருக்கிறதா?’’

“அறிமுகம் செய்தேன். நெருங்கி நட்பாகத்தான் இருந்தோம். ‘அமராவதி’க்குப் பிறகு நான் மார்க்கெட் உள்ள கமர்ஷியல் டைரக்டராக மாறுறேன். அந்தச் சமயத்தில் முன்னணியில் இருந்த கார்த்திக், அர்ஜுன் போன்றவர்கள் என்னை அவர்கள் படத்திற்கு சிபாரிசு பண்றாங்க. அப்போது அஜித்திற்கு மார்க்கெட் இல்லை. அஜித்திற்கு என்ன வருத்தம்னா... ‘ஸ்டார் டைரக்டரா இருக்கார், என்னை வைத்துப் படம் பண்ணியிருக்கலாமே’ன்னு நினைச்சார். அது இயற்கைதான். நான் அஜித்தை வைத்துப் படம் பண்ணலாம்னு தயாரிப்பாளர்கள்கிட்டே சொன்னா, அவங்க அஜித்துக்கு அட்வான்ஸ் தருவாங்க. பத்து மாதம் கழிச்சு அவருக்கு மார்க்கெட் இல்லைன்னு ‘அட்வான்ஸைத் திருப்பிக் கொடுங்க’ன்னு நிப்பாங்க. ஒரு சமயம் அவர் ஸ்டார் ஆகிறார். எனக்கு மார்க்கெட் இறங்குது. அவர் என்னை சிபாரிசு செய்யலாமேன்னு சொல்ல முடியாது. ஏன்னா, எனக்கு மார்க்கெட் வேல்யூ இல்லை. நானும் அப்படித்தான் முன்னாடி இருந்திருப்பேன்னு அவருக்குப் புரிந்திருக்கலாம். அப்புறம் ‘கிரீடம்’ படம் பண்ண வாய்ப்பு வருது. அவர் கடைசி நேரத்தில் அதில் ரௌடி மாதிரி ஆகிற க்ளைமாக்ஸ் எனக்குப் பிடிக்கலை. வேற கதை பண்ணலாம்னு வந்திட்டேன். அவர் இப்போ மேலேறிப் போயிட்டார். கேஷுவலாக அவர்கிட்டே இருந்துட்டு, இனிமேல் ஸ்டார்கிட்டே பழகிற மாதிரி படம் பண்ண முடியாது. தள்ளி இருக்கிறது நல்லது. கடைசியா என் மனைவி இறந்தபோது ஒரு மெசேஜ் பண்ணினார். அவ்வளவுதான்.”