Published:Updated:

``பையன் யார்கூடயும் பேசுறதில்லை... அவனோட சோஷியல் சர்க்கிள்..?!''- வனிதா சர்ச்சையால் வருந்தும் ஆகாஷ்

ஆகாஷ்
ஆகாஷ்

டிவி நடிகரான ஆகாஷ் தற்போது டிவி, சினிமாக்களில் நடிப்பதில்லை. ரியல் எஸ்டேட் தொழில்செய்துவருகிறார் தீவிர சாய்பாபா பக்தராகி சேவைகள் செய்கிறார்.

நாளொரு பரபரப்பும் பொழுதொரு புகாருமாக வனிதா விஜயகுமார் பற்றிய செய்தி ஓய்வே இல்லாமல் தொடர்ந்துகொண்டிருக்கிறது. தன்னையும் தன் திருமணத்தையும் விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி தந்து தன் தரப்பு நியாயத்தை தினந்தோறும் தன்னுடைய யூடியூப் சேனலில் வனிதா பேசிவருகிறார்.

வனிதா சமீபத்தில், சினிமாவில் தொழில்நுட்பக் கலைஞராகப் பணிபுரியும் பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்துகொள்வதாக அறிவித்து திருமணமும் நடைபெற்றது. ஆனால், பீட்டர் பாலின் மனைவி, ``என்னை விவாகரத்து செய்யாமலேயே செய்த இந்தத் திருமணம் செல்லாது'' எனப் போலீஸில் புகார் அளிக்க இப்போது, ``அது முறையான திருமணமே இல்லை, லவ் எக்ஸ்செஞ்ச்" என்கிற பேச்சுகள் ஒருபக்கமும் சமாதானப் பேச்சுகள் மறுபக்கமும் நடந்துவருகிறது. இதனால் வனிதா விஜயகுமார் குறித்த செய்திகள் தினந்தோறும் மீடியாக்களில் வந்துகொண்டேயிருக்கின்றன.

வனிதா விஜயகுமார்
வனிதா விஜயகுமார்

ஆனால், தொடர்ச்சியாக வனிதாவைத் தொடர்புப்படுத்தி வரும் செய்திகள், இரண்டு பேரை மிகவும் கவலைக்கு உள்ளாக்கியிருப்பதோடு, அவர்களை மன அழுத்தத்துக்கும் தள்ளியிருக்கிறது. அந்த இருவர் வனிதாவின் முதல் கணவர் ஆகாஷ், அவரின் மகன் விஜய் ஸ்ரீஹரி. வனிதாவுக்கும் ஆகாஷுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு அவர்கள் இருவரும் பிரிந்தனர். மகன் ஶ்ரீஹரி ஆகாஷோடு இருக்க, மகள் வனிதாவோடு இருக்கிறார்.

டிவி நடிகரான ஆகாஷ் தற்போது டிவி, சினிமாக்களில் நடிப்பதில்லை. ரியல் எஸ்டேட் தொழில்செய்துவருகிறார், தீவிர சாய்பாபா பக்தராகி சேவைகளும் செய்கிறார். ஆகாஷுக்கு நெருக்கமான நண்பர்கள் சிலரிடம் பேசினேன். அப்போது அவர்கள் ஆகாஷ் தங்களிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்களைப் பற்றிச் சொன்னார்கள்.

`` `மகள் அம்மாவுடனும் மகன் அப்பாவுடனும் இருக்கணும்னு கோர்ட் சொல்லி டைவர்ஸ் கிடைச்சதுக்குப் பிறகு, அவங்க யாரோ நாங்க யாரோன்னுதான் நானும் என் மகனும் ஒதுங்கிட்டோம். ஶ்ரீஹரிக்கு இப்போ 23 வயசாகுது. அவனோட ஃபிரெண்ட்ஸ் சர்க்கிள்ல எல்லோருக்கும் எங்க விஷயம் தெரியும்கிறதால, ஃபிரண்ட்ஸ்களோட பழகுறதையே இப்பல்லாம் குறைச்சுட்டான். ஒரு சிலர் டீசன்ட்டா இவன் இருக்கிறப்ப அவங்க தொடர்பான விஷயத்தைப் பேசறதில்லை. ஆனாலும் இவன் கில்ட்டியா ஃபீல் பண்ணிட்டு வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கிறான். ரொம்பவே மன அழுத்தத்துல இருக்கான். சோஷியல் மீடியால ஒரு போட்டோ போட்டாலே அடையாளம் கண்டுபிடிச்சு ஏதாவது கேக்குறாங்கன்னு அந்தப்பக்கமே வர்றதில்லை.

வளர்ந்த பையனுடைய ஒரு அப்பாவா இந்த விஷயத்துல நான் என்ன சொல்லி அவனை திசைதிருப்பறதுனு தெரியலை. ரொம்ப கஷ்டமாயிருக்கு. முதல்ல நானே இந்த மாதிரிச் சூழலைக் கடக்க ரொம்பவே சிரமப்பட்டேன்’ என மிகவும் வருத்தப்பட்டார்'' என்றார்கள்.

நடிகை வனிதா, பீட்டர்பால்
நடிகை வனிதா, பீட்டர்பால்

``இன்றைக்கும் நடிக்க விரும்பினா ஆகாஷ்க்கு சினிமா வாய்ப்பு கிடைக்காமப் போகாது. வனிதாவுடன் கசந்த திருமணத்தைக் கூட அவர் பெரிசா எடுத்துக்கலை. சினிமா உலகத்துல கல்யாணம் பண்ணிக்கிறதும் பிரியறதும் சகஜம்னு நல்லா புரிஞ்சவர் அவர். ஆனா, அந்தப் பிரிவுக்குப் பின்னாடி நடந்த நிகழ்வுகள் அவரை ரொம்பவே பாதிச்சிருச்சு. சின்ன வயசு மகனையும் கூட்டிக்கிட்டு, கோர்ட், மீடியான்னு செய்திகள்ல அடிபட்டதுல ரொம்பவே நொந்துட்டார். பையன் வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாதுன்னுதான் திரும்பவும் அவர் கல்யாணமே பண்ணிக்கல.சினிமா, டிவியே வேண்டாம்னு அப்ப முடிவு பண்ணவர்தான், இப்ப வரைக்கும் நடிக்கலை. இப்ப ரியல் எஸ்டேட் பண்ணிக்கிட்டிருக்கார். மன ரிலாக்ஸ்க்கு ஆன்மீகத்துல ஈடுபடுறார்'' என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு