Published:Updated:

'இதிலிருந்தே விஷால் வளர்ந்த விதம் புரிகிறது!' - வரலட்சுமி 😠😠😠 காட்டம்

தார்மிக் லீ

நடிகர் சங்கத் தேர்தல் வேலைகள் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் நேரத்தில், விஷாலை விமர்சித்து வரலட்சுமி பதிவிட்டிருக்கும் டிவீட் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வரலட்சுமி
வரலட்சுமி

தென்னிய நடிகர் சங்கத்தின் வேலைகள் பரபரக்காக போய்க்கொண்டிருக்கிறது. நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் நடிகர் சங்கத் தேர்தலில் இம்முறை போட்டியிடுகிறது. தேர்தல் வருகின்ற ஜூன் 23-ஆம் தேதி எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற இருக்கிறது.

வரலட்சுமி
வரலட்சுமி
டிவிட்டர்

இருதரப்பிலும் தங்களுக்கு ஆதரவு தர வேண்டி பல சீனியர் நடிகர்களைச் சந்தித்து வருகின்றனர். கே.பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணி தங்களது அணி உறுப்பினர்களோடு நேற்று விஜயகாந்தைச் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த சமயத்தில், விஷால் தலைமையிலான பாண்வர் அணி வெளியிட்ட பிரசார வீடியோ பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் சரத்குமாரையும், ராதாரவியையும் கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார், விஷாலை விமர்சித்து டிவீட் பகிர்ந்துள்ளார்.

அதில், "சமீபத்தில் வெளியான பிரசார வீடியோவைப் பார்த்தபின் விஷால் எவ்வளவு கீழே இறங்கி வேலை பார்ப்பவர் என்பது தெரிகிறது. இவர் மீது இருந்த கொஞ்சநஞ்ச மரியாதையும் போய்விட்டது. எந்தவித ஆதாரமும் இல்லாமல் என் அப்பா மீது குற்றம் சுமத்துவது சரியானதல்ல. இத்தனைக்கும் நீதிதான் எல்லாமே என்று சொல்வீர்கள். அவர் குற்றவாளி என்றால் இந்நேரம் அவருக்கு தண்டனை கிடைத்திருக்கும். இம்முறை உங்களைத் தவறு சொல்ல மாட்டேன், இதிலிருந்தே நீங்கள் வளர்ந்த விதம் புரிகிறது. இந்த வீடியோவைப் பார்த்தபின் நீங்கள் எவ்வளவு கீழ்த்தனமானவர் என்பதும் தெரிகிறது. உங்களது இரட்டை மனநிலையும் பொய்களும் எங்களுக்குத் தெரியும்.

நீங்கள் ஒரு மாமனிதராக இருந்திருந்தால் பாண்டவரணி என்று சொல்லும் உங்களது அணியினரே உங்களை ஒதுக்கியிருப்பார்களா?. என் அப்பா இதில் தலையிடாமல் இருக்கும் நிலையில், அவரைப் பற்றி அவதூறு பரப்புவது முறையானதல்ல. பல முறை உங்கள் மீது குற்றம் சுமத்தியபோதெல்லாம் ஒரு தோழியாக உங்களுடன் நின்றேன். இந்த முறை அதை நீங்களே கெடுத்துக்கொண்டீர்கள். நீங்கள் செய்த சாதனைகள் பற்றி பிரசாரம் செய்யமால் இவ்வளவு மோசமான வீடியோ பதிவிட என்ன காரணம். திரைக்கு வெளியிலும் நீங்கள் நல்ல நடிகர்தான். நீங்கள் எப்போது சொல்வதுபோல் நீதி கட்டாயம் வெல்லும்."