Published:Updated:

Varisu: ``கோடி இதயங்களைக் காந்தமாக ஈர்க்கும் மந்திரச்சொல் `விஜய்' - வாரிசு படக்குழு ஷேரிங்ஸ்!

விஜய்

வாரிசு இசை வெளியீட்டு விழா மேடையில் பிரபலங்கள் விஜய் குறித்து பகிர்ந்தவை

Varisu: ``கோடி இதயங்களைக் காந்தமாக ஈர்க்கும் மந்திரச்சொல் `விஜய்' - வாரிசு படக்குழு ஷேரிங்ஸ்!

வாரிசு இசை வெளியீட்டு விழா மேடையில் பிரபலங்கள் விஜய் குறித்து பகிர்ந்தவை

Published:Updated:
விஜய்
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று நேற்று வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. நடிகர் விஜய், நடிகை ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழுவினரும் திரையுலகப் பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய பாடலாசிரியர் விவேக், "கோடி இதயங்களை காந்தமாக ஈர்க்கும் மந்திரச்சொல் 'விஜய்'. அவர் ஒருநாள் கூட செட்டுக்கு லேட்டாக வந்ததில்லை. கேரவனுக்கு சென்றதே இல்லை. ஒரு வருடம் வாரிசு படத்தில் வேலை செய்திருக்கிறேன். அவரிடம் ஒரு குறையை கூட இதுவரை கண்டதில்லை. அவரிடம் குறையைக் கண்டுபிடிப்பது ஆடியோ லாஞ்ச்சுக்கு பாஸ் வாங்குவதை விட கடினம். இந்த அசுரத்தனமான உயரத்தில் அவர் இருப்பதற்கு அவருடைய அசுர உழைப்புதான் காரணம். இயக்குநர் வம்சி ஒவ்வொரு வசனத்தையும் காதலித்து செய்திருக்கிறார். இது குடும்பங்களைப் பற்றிய படம். ஆனால் ரசிகர்களுக்காக சில பன்ச் டயலாக்ஸ் இருக்கும். பொங்கல் இருக்கிறதோ இல்லையோ, விஜய் இருந்தால் எப்போதுமே சரவெடியாதான் இருக்கும்!" என்றார்.

 விவேக்
விவேக்

இதைத்தொடர்ந்து பேசிய தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ''தமிழில் எனது முதல் படத்திலேயே விஜய்யோடு நடிப்பதில் மகிழ்ச்சி. நடிகராக மட்டுமல்ல ரியல் லைஃபிலும் அவர் சூப்பர் ஸ்டார்தான்" என்றார்.

இதனைத் தொடர்ந்து வாரிசு சூட்டிங்' சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் ஷ்யாம்; 'செட்டுக்குள்ள வரும்போதே மந்திரம் போட்டுட்டே வருவீங்களா? எல்லாரையும் அப்டியே கவர்ந்து இழுத்துடுறீங்களே? என்ன சீக்ரெட்?. ன்ன்னு விஜய் சாரிடம் கேட்டேன். அதற்கு விஜய் 'எல்லாத்துக்கும் ரசிகர்கள் என் மேல வச்சிருக்குற அன்பும் பாசமும்தான் காரணம்' அப்டின்னு சொன்னார். மேலும் பேசிய அவர்,'வாரிசு படத்தின் பட்ஜெட் 50-60 கோடி இருக்கும்.

விஜய்
விஜய்

ஆனால், அதை விட கூடுதலாக 20 கோடி செலவாகியிருக்கும். தயாரிப்பாளர் தில் ராஜூ எந்த தயக்கமும் இல்லாமல் செலவளித்தார். படத்தில் லாபம் வராவிட்டாலும் பரவாயில்லை. விஜய் சார் எனக்கு டேட் கொடுத்திருக்கிறார். அதற்காக நான் செய்தே தீருவேன் என தயாரிப்பாளர் படு பிரம்மாண்டமாக படத்தை எடுத்திருக்கிறார்.' என்றார்.

இதன்பிறகு மேடையேறிய விடிவி கணேஷ் 'எனக்கான ஒரே ஒரு சீனை வம்சி 7 நாள் எடுத்தார்.' பீஸ்ட் சூட்டிங்கின் போது ஒருநாள் அடுத்தப் படம் யார் கூட பண்றீஙகன்னு விஜய்யிடம் கேட்டேன், வம்சின்னு பதில் சொன்னாரு. இங்கயே இவ்ளோ டைரக்டர்ஸ் இருக்காங்க. அப்புறம் எதுக்கு தெலுங்குல இருந்து ஒரு ஆளு? என கேட்டேன். அதற்கு விஜய், 'பார்...வெயிட் பண்ணி படத்தை மட்டும் பார்'. என நம்பிக்கையாக கூறினார்.

வாரிசு விஜய்
வாரிசு விஜய்

அதற்குப் பிறகு பேசிய நடிகர் சதீஷ், 'விஜய் சார் கூட ஃபோட்டோ எடுக்குறதுக்குன்னே ஊர்ல இருந்து கிளம்பி வந்தவன். அவர் கூட ஒரு சின்ன சீனுன்னா கூட ஓகேன்னுதான் படத்துல நடிச்சிருக்கேன். என்னோட 2 வயசு பொண்ணும் கூட விஜய் சார் ஃபேன்தான்!' அடுத்ததாக மேடையில் கண்கலங்கி பேசிய இசையமைப்பாளர் தமன், 'என்னுடைய வாழ்க்கை இன்றுதான் முழுமையடந்திருக்கிறது. நான் வாங்கிய விருதுகளை விட விஜய் சாரின் பாராட்டுகள்தான் எனக்கு பெரிது.' என நெகிழ்ந்தார்.