Published:Updated:

வாரிசு: "விஜய்க்குப் படம் பண்றேன்னு சொன்னதும், முதல்ல மகேஷ் பாபுதான் வாழ்த்தினார்!"- இயக்குநர் வம்சி

வாரிசு விஜய்

"'விக்ரம்', 'பொன்னியின் செல்வன்' படங்களுக்குக் கிடைச்ச வரவேற்பு எனக்கு ரொம்ப சந்தோஷத்தைக் கொடுத்தது. நிறைய நல்ல விஷயங்கள் நடந்துக்கிட்டு இருக்கிற சமயத்துல நானும் இங்க வந்து படம் பண்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு." - 'வாரிசு' இயக்குநர் வம்சி பைடிபல்லியின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!

Published:Updated:

வாரிசு: "விஜய்க்குப் படம் பண்றேன்னு சொன்னதும், முதல்ல மகேஷ் பாபுதான் வாழ்த்தினார்!"- இயக்குநர் வம்சி

"'விக்ரம்', 'பொன்னியின் செல்வன்' படங்களுக்குக் கிடைச்ச வரவேற்பு எனக்கு ரொம்ப சந்தோஷத்தைக் கொடுத்தது. நிறைய நல்ல விஷயங்கள் நடந்துக்கிட்டு இருக்கிற சமயத்துல நானும் இங்க வந்து படம் பண்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு." - 'வாரிசு' இயக்குநர் வம்சி பைடிபல்லியின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!

வாரிசு விஜய்
இயக்குநர் வம்சி... தென்னிந்திய சினிமாவில் தற்போதைய சென்சேஷன். விஜய்யின் `வாரிசு' படத்தை இயக்கி வருகிறார். படம் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. விரைவில் அப்படத்தின் முதல் பாடல் வெளிவரவிருக்கிறது. பொங்கலை `வாரிசு' படத்தோடு கொண்டாடக் காத்திருக்கின்றனர், விஜய்யின் ரசிகர்கள். `வாரிசு' படத்தின் ஷூட்டிங், போஸ்ட் புரொடக்‌ஷன் என செம பிஸியாக இருக்கும் இயக்குநர் வம்சி பைடிபல்லியைச் சந்தித்துப் பேசினேன். 

'விஜய் 66' படத்தை இயக்க அதிக வாய்ப்பிருக்கும் இயக்குநர்கள் என்ற லிஸ்டில் உங்கள் பெயரைக் கேட்டதும் எல்லோருக்கும் ஆச்சர்யம். எப்படி ஆரம்பமானது இந்த ப்ராஜெக்ட்?

இயக்குநராகி 15 வருடங்களில் இப்போதான் 6வது படத்தை இயக்குகிறீங்க. அதிக காலம் எடுத்துக்கிறோமோனு நினைச்சிருக்கீங்களா?

'வாரிசு' தலைப்பு ? இது எப்படியான படமா இருக்கும்? 

சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், குஷ்பூ, யோகிபாபுனு படத்துல அவ்வளவு பேர் இருக்காங்க. இவங்களை எல்லாம் எப்படி படத்துக்குள்ள கூட்டிட்டு வந்தீங்க?

விஜய் - இயக்குநர் வம்சி - ஜெயசுதா
விஜய் - இயக்குநர் வம்சி - ஜெயசுதா

ரொம்ப வருடங்கள் கழித்து, விஜய்யும் பிரகாஷ் ராஜும் சேர்ந்து நடிக்கிறாங்க. அவங்க ரெண்டு பேருடைய போர்ஷன் ஷூட் பண்ணும்போது எப்படி இருந்தது?

விஜய் கேரக்டர் பத்தி ஷேர் பண்ணலாமா?

விஜய் படத்துக்கு இசையமைக்கிறது தமனுடைய நீண்ட நாள் ஆசை. இப்போ நிறைவேறியிருக்கு. என்ன மாதிரி மியூசிக்கல் ட்ரீட் இருக்கும்?

'தோழா', 'மஹரிஷி', 'வாரிசு' தொடர்ந்து மூன்று படங்கள் எடிட்டர் பிரவீன் கே.எல் கூட வொர்க் பண்றீங்க. உங்களுக்கும் அவருக்குமான நட்பு?

விஜய்யை இயக்கிய அனுபவம் எப்படி இருந்தது? நீங்க அவர்கிட்ட இருந்து எடுத்துக்கிட்ட விஷயம் என்ன?

உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில் இந்த வார ஆனந்த விகடன் இதழில் வெளியாகிவுள்ளன. அந்தப் பேட்டியின் தொடர்ச்சி இதோ உங்கள் விகடன்.காம்-ல் எக்ஸ்க்ளூசிவ்வாக...

நீங்க எந்த ஜானர்ல படங்கள் பண்ணினாலும் அதில் மனித உறவுகளுக்குள் இருக்கும் எமோஷனுக்கு முக்கியத்துவம் இருக்கும். அதை எழுத்தில் கொண்டு வர்றது எவ்வளவு பெரிய சவால்?

"மனித உணர்ச்சிகள் மேல அதிக நம்பிக்கை இருக்கு. நான் ரொம்ப எமோஷனல். மனித உறவுகளுக்குள் இருக்கும் உணர்ச்சிகளை டிராமாவா எழுதுறது ரொம்ப பெரிய சவால்தான். எனக்கு அது பிடிச்சிருக்கு. நாகார்ஜுனா சார்கிட்ட 'தோழா' கதையைச் சொன்னபோது, 'இதுவரை கமர்ஷியலா படங்கள் பண்ணிட்டு இருந்தீங்க. ஆனா, இந்தப் படம் ரொம்ப சென்ஸிட்டிவ். இதுல ஒரு ஆன்மா இருக்கு. அதை நீங்க எப்படி திரையில எடுத்துட்டு வரப்போறீங்கனு ஆவலா இருக்கேன்'ன்னு சொன்னார். அந்தப் படத்துடைய க்ளைமாக்ஸ் ஷூட் பண்ணும்போது, நாகர்ஜுனா சார் என்னைக் கூப்பிட்டு, 'எப்படி நீ இதை பண்ணின? உனக்குள்ள இப்படியொரு எமோஷன் இல்லைனா இப்படி ஷூட் பண்ண முடியாது'ன்னு சொல்லி பாராட்டினார். நான் என்ன படங்கள் பண்ணினாலும் அது முடியும்போது நம்பிக்கை விதைக்கிற மாதிரி இருக்கணும்னு முயற்சி செய்வேன். அந்த மாதிரி நம்பிக்கைக் கொடுக்கும் படத்துல பெரிய ஸ்டார்கள் இருந்தாங்கன்னா, அதனுடைய ரீச் வேற மாதிரி இருக்கும். அப்படி நான் சொல்ற விஷயங்கள் ஒரு பத்து பேருக்கு நம்பிக்கை கொடுத்தா, அதைத்தான் என்னுடைய வெற்றியா பார்க்கிறேன். 'வாரிசு'ம் அப்படியான படம்தான்".

சாஃப்ட்வேர் வேலையை விட்டுட்டு சினிமாவுக்கு வந்தவர் நீங்க. அந்த முடிவை எப்படி எடுத்தீங்க?

விஜய் - இயக்குநர் வம்சி
விஜய் - இயக்குநர் வம்சி

"நான் பிறக்கிறதுக்கு மூணு மாசம் முன்னாடி என் அப்பா ஒரு தியேட்டர் வாங்கினார். அதனால, நான் அந்த தியேட்டர்லதான் வளர்ந்தேன். தியேட்டர் ஓனருடைய மகன்னுதான் என்ன சொல்வாங்க. ஆபரேட்டர் ரூம்ல என்னென்ன மெஷின்னெல்லாம் இருக்கும், எப்படி ரீலை புரொஜக்டர்ல கனெக்ட் பண்ணி படம் ஓட்டுறாங்கன்னு நான் சின்ன வயசில இருந்தே பார்த்து பார்த்து வளர்ந்தேன். சிரஞ்சீவி சார், கிருஷ்ணா சார், ஷோபன் பாபு சார் இவங்க படங்களெல்லாம் வரும்போது செம கொண்டாட்டமா இருக்கும். சிரஞ்சீவி சாருடைய தீவிர ரசிகன் நான். தியேட்டர் எங்களுடையதுங்கிறதால என் ஃப்ரண்ட்ஸ் எல்லோருக்கும் நான் டிக்கெட் வெச்சிருப்பேன். அவங்களை எல்லாம் நிறைய பேப்பர் கிழிச்சுட்டு வர சொல்லுவேன். சிரஞ்சீவி சார் என்ட்ரியாகும்போது, அவர் பன்ச் டயலாக் பேசும்போது, டான்ஸ் ஆடும்போதுனு பேப்பரைக் கிழிச்சு மேல விசிறி என்ஜாய் பண்ணிப் பார்ப்போம். நான் ஹாலிவுட் படம், அந்த ஊர் படம், இந்த ஊர் படமெல்லாம் பார்த்து வளரலை. தென்னிந்திய சினிமாக்கள்தான் நான் படிச்ச புத்தகங்கள். சாஃப்ட்வேர் படிக்க போறதுக்கு முன்னாடி என் அப்பாக்கிட்ட 'அப்பா... நான் காலேஜ் முடிச்சுட்டு சினிமாவுக்கு போகலாம்ன்னு இருக்கேன்'ன்னு சொன்னேன். 'போய் ஒழுங்கா படிக்கிற வழியைப் பாரு'ன்னு சொல்லிட்டார். அப்புறம், படிச்சு முடிச்சு அமெரிக்காவுக்குப் போயிட்டேன். இருந்தாலும் எனக்குள்ள சினிமா பத்தின யோசனை இருந்துக்கிட்டே இருந்தது. என் க்ளோஸ் ஃப்ரண்ட் ஷங்கருடைய அண்ணன் மார்த்தாண்ட் கே.வெங்கடேஷ் தெலுங்கு சினிமாவுல ரொம்ப முக்கியமான எடிட்டர். அவர் ஜெய்ந்த் சாருடைய படங்களுக்கு எடிட் பண்ணிட்டு இருந்தார். அவர் மூலமா 'ஈஷ்வர்' படத்துல ஜெய்ந்த் சாருக்கு அசிஸ்டென்ட் டைரக்டரா சேர்ந்தேன். அதுதான் பிரபாஸுடைய முதல் படம். அப்புறம், அப்படியே சில படங்கள் வொர்க் பண்ணி, 'முன்னா' படத்துல இயக்குநராகிட்டேன். 20 வருஷத்துக்கு முன்னாடி நான் சினிமாவுக்கு வரணும், இப்போ விஜய் சாரை டைரக்ட் பண்ணணும்ன்னு எல்லாம் எங்கேயோ எழுதியிருக்குப் போல!" 

'தோழா' படத்துல வேலை செய்யும்போது கார்த்திதான் உங்களுக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தார்னு கேள்விப்பட்டோமே!

"ஆமா. கார்த்தி சார்தான் சொல்லித் தந்தார். 'தோழா' நாள்கள் எனக்கு எப்போதும் ஃபேவரைட். அடிக்கடி அவரும் நானும் பேசிக்குவோம். சினிமாவைத் தாண்டி எங்களுக்குள்ள நல்ல நட்பு இருக்கு. 'வாரிசு' ஷூட்டிங்கும் 'சர்தார்' ஷூட்டிங்கும் ஒரே இடத்துல நடந்தது. அப்போ கார்த்தி சாரை சந்திச்சேன். அப்போ 'நல்ல சாப்பாடு வேணும் சார்'ன்னு சொன்னேன். மறுநாளே பரோட்டா, மட்டன் கிரேவினு எனக்காக எடுத்துட்டு வந்தார். ரெண்டு பேரும் ரொம்ப நாள் கழிச்சு ஜாலியா பேசி சிரிச்சுக்கிட்டே சாப்பிட்டோம். 'பொன்னியின் செல்வன்' படத்துல வந்தியத்தேவன் கேரக்டர்ல சூப்பரா பண்ணியிருந்தார்."

விஜய்க்கு படம் பண்றீங்கனு தெரிஞ்சதும் தெலுங்கு சினிமாவுல இருந்து யாரெல்லாம் பேசினாங்க?

இயக்குநர் வம்சி - மகேஷ்பாபு
இயக்குநர் வம்சி - மகேஷ்பாபு

"மகேஷ் பாபு சார் கால் பண்ணி வாழ்த்துகள் சொன்னார். அவரும் நானும் இயக்குநர் - நடிகர் உறவைத் தாண்டி ஃபேமிலி ஃப்ரண்ட்ஸ் ஆகிட்டோம். என் பொண்ணு ஆத்யாவும் அவர் பொண்ணு சித்தாராவும் ஒரு யூடியூப் சேனல் கூட வெச்சிருக்காங்க."

தமிழ் சினிமா எப்படியிருக்குனு நினைக்கிறீங்க?

"தமிழ் சினிமா மீது எப்போதும் தனி மரியாதை இருக்கு. நிறைய தமிழ்ப் படங்கள் தெலுங்கு டப்பாகி அங்க பெரிய ஹிட்டாகியிருக்கு. சமீபமா, எல்லா தமிழ்ப் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. 'விக்ரம்', 'பொன்னியின் செல்வன்' படங்களுக்குக் கிடைச்ச வரவேற்பு எனக்கு ரொம்ப சந்தோஷத்தைக் கொடுத்தது. கமல் சார், மணிரத்னம் சார் போன்றவர்களுடைய பேஷன் வியக்கவைக்குது. நிறைய நல்ல விஷயங்கள் நடந்துக்கிட்டு இருக்கிற சமயத்துல நானும் இங்க வந்து படம் பண்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு."

விஜய் - இயக்குநர் வம்சி
விஜய் - இயக்குநர் வம்சி

பாலிவுட்ல ஆமிர் கான், சல்மான் கான் மாதிரி பெரிய ஹீரோக்கள் எல்லோரும் தென்னிந்திய சினிமா கன்டன்ட்களை விரும்புறோம். அங்க வரணும்னு நினைக்கிறோம்ன்னு சொல்றாங்களே!

"தென்னிந்தியா, வட இந்தியா இல்லை. இந்தியா அவ்வளவுதான். சினிமாவுக்கு மொழி கிடையாது. அங்க நல்லா எழுதியிருந்தா, இங்கேயும் வொர்க்காகும். இங்கே நல்லா எழுதினா, அங்கேயும் வொர்க்காகும். இப்போ 'காந்தாரா' பாருங்க. கன்னடத்துல உருவாகி எல்லா ஊர்லயும் பயங்கரமா பேசப்படுது. கன்டன்ட் பவர்ஃபுல்லா இருந்தா போதும். அது எங்கிருந்து வருதுங்கிறதெல்லாம் முக்கியமில்லை."

உங்களுடைய ஆல் டைம் ஃபேவரைட் தமிழ் சினிமா மூணு சொல்லுங்க. 

"'நாயகன்', 'படையப்பா', இப்போ 'விக்ரம்'. படம் பார்த்துட்டு லோகேஷ்கிட்ட பேசினேன்.  லோகேஷுடைய வொர்க் பயங்கரமா இருந்தது. அவர் ஒரு உலகத்தை உருவாக்கிய விதம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது."

சமீபமா உங்களைக் கவர்ந்த தமிழ் சினிமா இயக்குநர் யார்?

"அருண் மாதேஸ்வரன். அவர் வொர்க் எனக்கு ரொம்ப இம்ப்ரஸிவா இருந்தது. அப்புறம், 'லவ் டுடே' டிரெய்லர் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ரொம்ப ஜாலியா இருந்தது. அந்தப் படம் பார்க்கணும்னு இருக்கேன்."