Published:Updated:

வட்டம் - சினிமா விமர்சனம்

வட்டம் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
வட்டம் - சினிமா விமர்சனம்

படத்தை நல்ல த்ரில்லராக மாறவிடாமல் தடுப்பது நெடுக விரவியிருக்கும் லாஜிக் குறைபாடுகள்தான்

வட்டம் - சினிமா விமர்சனம்

படத்தை நல்ல த்ரில்லராக மாறவிடாமல் தடுப்பது நெடுக விரவியிருக்கும் லாஜிக் குறைபாடுகள்தான்

Published:Updated:
வட்டம் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
வட்டம் - சினிமா விமர்சனம்

ஓரிரவில் நடக்கும் சம்பவங்களை இணைக்கும் ஹைப்பர்லிங்க் சினிமாவே இந்த ‘வட்டம்.'

வேலையை விட்டு நீக்கப்பட்ட நான்கு ஐ.டி இளைஞர்கள் தங்கள் முதலாளியின் மகனைக் கடத்துவதற்குத் திட்டமிடுகிறார்கள். மறுபக்கம் ‘குடியே கடமை' என போதையில் உழலும் சிபி சத்யராஜ் தொழிலதிபரான வம்சியைத் துப்பாக்கி முனையில் கடத்துகிறார். சிபி சத்யராஜ் யார், அவர் ஏன் வம்சியைக் கடத்தவேண்டும் என்ற கேள்விகளுக்கு ஒன்றன்பின் ஒன்றாக பதில் சொல்லி, அது முந்தைய கடத்தலோடு இணையும் முடிச்சை அவிழ்த்து, இறுதியாய் மெசேஜ் சொல்லி முடிகிறது படம்.

சிபி சத்யராஜுக்கு அலட்டல், ஆர்ப்பாட்ட மில்லாத சிம்பிளான கதாபாத்திரம். கடத்தல் காட்சிகளில்கூட பதற்றம் தேவைப்பட்டிராத ரிலாக்ஸான ரோலை எளிதாகக் கையாண்டிருக்கிறார். ஒருசில காட்சிகளே என்றாலும் ஆண்ட்ரியாவின் கதாபாத்திரமும் நடிப்பும் அழுத்தம். மற்றொரு நாயகியான அதுல்யா நடிப்பில் போகவேண்டிய தூரம் இன்னும் அதிகம். வம்சி கிருஷ்ணா, சசி, பால சரவணன், சைத்ரா ரெட்டி, பிரசன்னா பாலச்சந்திரன் என ஏகப்பட்ட நடிகர்கள் என்றாலும் சசி மட்டுமே கூட்டத்தில் தனித்துத் தெரிகிறார்.

வட்டம் - சினிமா விமர்சனம்

நிவாஸ் கே.பிரசன்னாவின் பின்னணி இசை ஓரிரு இடங்களில் கதைக்கு நியாயம் செய்கிறது. பி.வி.சங்கரின் ஒளிப்பதிவு ஒரு சராசரி த்ரில்லருக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கொடுத்திருக்கிறது.

இயக்குநர் கமலக்கண்ணன் ஐ.டி தொழிலாளர்களின் நிச்சயமற்ற வாழ்க்கைமுறை, வர்க்கப் பாகுபாடில்லாமல் அனைத்து மட்டங்களிலும் நிலவும் ஆணாதிக்கம், குழந்தை பெறும் கருவியாக மட்டுமே பெண்களை நடத்தும் குடும்ப அமைப்பு என ஏராளமான விஷயங்களைத் தன் படம் மூலம் பேச நினைத்திருக்கிறார். ஆனால் அதில் ஆண்ட்ரியா சொல்லும் ‘பணம் மட்டும்தான் ஒரு பெண்ணுக்கான பாதுகாப்பைக் கொடுக்கும்' என்கிற ஒரே ஒரு அம்சம் மட்டுமே நன்றாக எடுபடுகிறது.

வட்டம் - சினிமா விமர்சனம்

படத்தை நல்ல த்ரில்லராக மாறவிடாமல் தடுப்பது நெடுக விரவியிருக்கும் லாஜிக் குறைபாடுகள்தான். சிபி கடத்துவதற்காகச் சொல்லப்படும் `காரணம்’ தொடங்கி, ஆண்ட்ரியா தப்பிக்க முயலாமல் இருப்பது ஏன் என்பது வரை படம் பார்க்கும்போதே ஏகப்பட்ட கேள்விகள் எழுகின்றன. தலைப்பிற்கேற்றாற் போல சில சம்பவங்கள் திரும்பத் திரும்ப நிகழ்வதும் அலுப்பு. பல்வேறு இடங்களில் நடக்கும் சம்பவங்களை முடிவாய் ஒற்றைப் புள்ளியில் இணைக்கும் ஹைப்பர்லிங்க் முயற்சியிலும் போதிய தெளிவில்லை.

பார்ப்பவர்களுக்கு உணர்ச்சிகளைக் கடத்துவதில் மெனக்கெட்டிருந்தால் ரசிக வட்டம் அதிகரித்திருக்கும்.