Published:Updated:

நீச்சல் போட்டியில் பதக்கங்களைக் குவிக்கும் நடிகர் மாதவன் மகன் வேதாந்த்!

தேசிய அளவிலான நீச்சல் போடியில் மூன்று தங்கம், ஒரு வெள்ளி என நான்கு பதக்கங்களை வென்றுள்ளார், மாதவன் மகன் வேதாந்த்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நடிகராக இருந்த மாதவன் `ராக்கெட்ரி - தி நம்பி எஃபக்ட்' படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். அதில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனாக மாதவனே நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தன் மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் பதக்கங்கள் வென்றது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சரிதா மாதவன் - வேதாந்த்
சரிதா மாதவன் - வேதாந்த்

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் ஆர்வமுடையவர். அதுமட்டுமல்லாது நீர் சாகச விளையாட்டுகளில் பங்குபெறுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், குஜராத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு மூன்று தங்கம் மற்றும் ஒரு வெள்ளி என நான்கு பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார், வேதாந்த். இதனால் மாதவனும் அவரது மனைவி சரிதாவும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கங்களில், "எங்களை வேதாந்த் மீண்டும் பெருமைபடுத்தியுள்ளான். தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் மூன்று தங்கம், ஒரு வெள்ளி என நான்கு பதக்கங்களை வென்றுள்ளான்.

வேதாந்த்
வேதாந்த்

உங்களுடைய ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்" எனப் பதிவிட்டிருந்தார். சென்ற வருடம் தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான நீச்சல் போட்டியில் 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் கலந்துகொண்டு இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கத்தை வென்று தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துகள் வேதாந்த்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு