Published:Updated:

``அம்மா ஒரு கட்சி, அக்கா ஒரு கட்சி, நான் இப்போ சினிமாவில்..!" - வீரப்பன் மகள் விஜயலட்சுமி

விஜயலட்சுமி

வீரப்பனின் இளையமகள் விஜயலட்சுமி `மாவீரன் பிள்ளை’ திரைப்படம் மூலமாக சினிமாவுக்கு வரவிருக்கிறார். அவரிடம் பேசினோம்.

``அம்மா ஒரு கட்சி, அக்கா ஒரு கட்சி, நான் இப்போ சினிமாவில்..!" - வீரப்பன் மகள் விஜயலட்சுமி

வீரப்பனின் இளையமகள் விஜயலட்சுமி `மாவீரன் பிள்ளை’ திரைப்படம் மூலமாக சினிமாவுக்கு வரவிருக்கிறார். அவரிடம் பேசினோம்.

Published:Updated:
விஜயலட்சுமி

`சந்தனக் கடத்தல்’ வீரப்பன் இறந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவரைச் சுற்றிய பல மர்மங்களும் செய்திகளும் இன்னும் அவிழ்க்கப்படாமலேயே இருக்கின்றன. அவரின் மனைவி முத்துலட்சுமி தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்துள்ளார். மூத்த மகள் வித்யா பா.ஜ.க-வில் இணைந்துள்ளார். இளையமகள் விஜயலட்சுமி தற்போது `மாவீரன் பிள்ளை’ திரைப்படம் மூலமாக நடிப்புத்துறைக்குள் நுழைந்திருக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகவே, அவரைத் தொடர்பு கொண்டோம்.

`மாவீரன் பிள்ளை’ கதைக்குள்ள கமிட் ஆனதைப் பத்தி சொல்லுங்க?

``சின்ன வயசுல இருந்தே எனக்கு நடிக்கிற ஆசை இருக்கு. அம்மாகிட்டயும் சொல்லிட்டே இருப்பேன். ஆனா, அப்போ நான் சின்னப் பொண்ணா இருந்ததால வந்த வாய்ப்புகளைப் பத்தி என்கிட்ட அம்மா சொல்லலை. இப்போ எனக்குக் கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் என் அம்மாவை அணுகி, என்னையும் அக்காவையும் இந்தப் படத்துல நடிக்க வைக்க கேட்டிருக்காங்க. எனக்கு நடிக்கிற ஆசை முன்னாடி இருந்தே இருந்ததால, அம்மா முதல்ல என்கிட்டதான் கேட்டாங்க. கதை கேட்டு பிடிச்சு இருந்ததால, என் கணவர் அனுமதியோடு நடிக்க ஒப்புக்கொண்டேன்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாவீரன் பிள்ளை
மாவீரன் பிள்ளை

``என்ன மாதிரியான கதை இது?"

``காதலால பெண்கள் எப்படி ஏமாத்தப்படுறாங்க, விவசாய பிரச்னைகள், மது ஒழிப்பு விழிப்புணர்வுனு இதையெல்லாம் பேசுற கதை இது. தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டிலதான் கதை நடக்கும். அங்க இருக்கிற என்கிட்ட ஊர் மக்கள் பிரச்னைகளை சொல்லும்போது அதை நான் எப்படி எதிர்கொண்டு அவங்களுக்கு நல்லது செய்யுறேன்ங்கிறதுதான் என் கதாபாத்திரம். முதல் முறையா நடிக்கிறதால பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன்.”

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``ஒரு பேட்டில உங்க அக்கா வித்யா, `சின்ன வயசுல நானும் தங்கையும் தனித்தனியாதான் வளர்ந்தோம். எனக்கு ஒரு தங்கை இருக்கிறதே 14 வயசுலதான் எனக்குத் தெரிய வந்தது'னு சொல்லியிருந்தாங்க. உங்களுடைய குழந்தைப் பருவம் பத்தி சொல்லுங்க?

``என்னுடைய 10 வயசு வரைக்கும் வேற குடும்பத்துலதான் வளர்ந்தேன். ஒரு நாள் அம்மா வந்து என்னைய வலுக்கட்டாயமா கூட்டிட்டு வந்துட்டாங்க. அந்தக் குடும்பத்துலயிருந்து பிரிஞ்சு வந்ததை என்னால ஏத்துக்கவே முடியலை. அங்க இருந்து வந்ததுக்குப் பிறகு கிட்டத்தட்ட 10 வருஷங்கள் அந்தப் பிரிவால வருத்தப்பட்டு அழுதுட்டு இருந்தேன். அதனாலேயே சின்ன வயசுல என் அம்மாவ பிடிக்காம போயிருச்சு. அதுக்குப் பிறகுதான் மெதுவா நான் அம்மா, அக்கா கூட எல்லாம் நல்லா பழக ஆரம்பிச்சேன்.

இடையில, நான் ஸ்கூல் படிக்கும்போது அம்மா ஜெயிலுக்குப் போயிட்டாங்க. அப்போ, என்னை வளர்த்தவங்கதான் அடிக்கடி வந்து பார்த்துட்டு போவாங்க. காலேஜ் போனதுக்குப் பிறகுதான் வளர்த்த அம்மா, அப்பா, அண்ணாகூட அம்மா என்னை பேச அனுமதிச்சாங்க. அதுவரை என்னை அவங்கள பார்க்க விடாம கட்டுப்பாடோடதான் அம்மா வெச்சிருந்தாங்க. அப்பாவை நான் நேர்ல பார்த்ததே இல்ல. அதுக்கான சந்தர்ப்பம் கிடைச்சும் சில காரணங்களால அது நடக்க முடியாம போன வருத்தம் எப்பவும் என்னைவிட்டு நீங்காது.''

விஜயலட்சுமி
விஜயலட்சுமி

``அப்பாவைப் பத்தி உங்களுக்குத் தெரிய வந்தபோது எப்படி இருந்தது?"

``இப்ப வரைக்குமே அப்பாவ பத்தி பல தகவல்கள் வந்துட்டு இருக்கு. அவரு சில தப்புகள் செஞ்சு இருக்காருதான். இல்லைன்னு சொல்லலை. ஆனா, அந்தத் தப்புகளை பண்ண அவரோட சூழ்நிலைகளும், அரசாங்கத் தரப்புல சில விஷயங்களும் தூண்டுதலா அமைஞ்சிருக்கு. அதுக்கான தண்டனை கொடுக்காம அவரை கோபப்படுத்துற விஷயங்கள பண்ண ஆரம்பிச்சதும் அது வேற மாதிரி ஆகிடுச்சு. ஆனா, அதையெல்லாம் புரிஞ்சுக்கிட்டு அப்பாவை இப்ப வரைக்குமே பலரும் நேசிக்கறது எனக்குப் பெருமையாதான் இருக்கு.”

``நீங்க அரசியல் கட்சியில் சேர்ந்துட்டதா செய்தி வந்துச்சே..."

``ஒரு கல்வி உதவி கேட்டு வி.சி.கல இருந்த ஒருத்தரை பார்க்கப் போனபோது, அங்க கட்சியில ஆட்கள் சேர்த்துட்டு இருந்தாங்க. திருமாவளவன் அய்யா அதுக்கு முன்னாடியே அம்மாவுக்குப் பொருளாதார ரீதியா சில உதவிகள் செஞ்சுருக்காரு. அதனால, அய்யாகிட்ட பேசுறதுக்காக மேடையில என்னைய அறிமுகப்படுத்தினாங்க. அப்போ கட்சி கொடியை என் கையில கொடுத்துட்டாங்க. அதைப் பார்த்துட்டுதான் நான் கட்சில சேர்ந்துட்டதா செய்திகள் வந்தது. ஆனா, அது உண்மையில்லை.

அக்கா பி.ஜே.பில சேர்ந்தது பத்தியும் சிலர் என்கிட்ட கேக்குறாங்க. அக்காவும் நானும் குடும்பம் தொடர்பா அப்பப்போ பேசிப்போம். மத்தபடி அவங்களுடைய தனிப்பட்ட முடிவு பத்தி எல்லாம் எனக்குத் தெரியாது. ராமதாஸ் அய்யா கட்சியில சேரத்தான் அம்மா காத்துட்டு இருந்தாங்க. ஆனா, எங்களுக்கு எந்த ஆதரவும் அங்க இருந்து வரலை. அதுக்குப் பிறகுதான் எங்களுக்குப் பல உதவிகள் செஞ்ச தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் அய்யாவோட கட்சியில அம்மா சேர்ந்து கட்சிப் பணிகள் செஞ்சுட்டு இருக்காங்க.”

கோப்புப் படம்
கோப்புப் படம்

``அப்பா பத்தி வந்த படங்கள், வெப் சீரிஸ்லாம் பார்த்தீங்களா? அதையெல்லாம் வெளியிடக் கூடாது, தடை பண்ணணும்னு முன்னர் உங்க அம்மா சொல்லியிருந்தாங்களே?"

``அப்பாவுக்குப் பிறகு அவரின் மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்னு நாங்களும் இந்த சமூகத்துல வாழ்ந்துட்டு இருக்கோம். அப்படி இருக்கும்போது உண்மைக்குப் புறம்பான விஷயங்களை படமாக்கும்போது அந்தப் பாதிப்பு எங்களுக்கும் இருக்கும் இல்லையா? நாங்க எங்க அப்பா தப்பே பண்ணலைன்னு சொல்லலை. என்ன நடந்ததோ அதைப் பதிவு பண்ணட்டும். அதுக்கு, சம்பந்தப்பட்ட எங்களை அணுகி பேசாம இவங்க கேள்விப்பட்டதை வெச்சும், மத்தவங்ககிட்ட கேட்டும் படம் எடுத்து அப்பாவை பத்தி தப்பான பிம்பத்தையே மறுபடியும் கட்டமைக்கிறாங்க.

அப்பா பேரை வெச்சு பணம் சம்பாதிக்கணும்னு மட்டும்தான் நினைக்கிறாங்களே தவிர, சம்பந்தப்பட்ட எங்ககிட்ட பேசி சரியான தகவலை வாங்கிறதும், எங்களுக்கு உரிய பணம் கொடுக்கிறதும் பெரும்பாலும் நடக்கிறதே இல்ல. அப்பா எங்களுக்குனு விட்டுட்டுப் போயிருக்கிறது அந்தப் பேரும் புகழும்தானே தவிர, காசோ பணமோ கிடையாது. அப்போ, அந்தப் பேரை வெச்சுதான் நாங்களும் வருமானம் பண்ணணும்னு நினைப்போம். அதனாலதான் அம்மாவும் படங்களுக்கு தடை கேட்டாங்க. சீக்கிரமே அப்பாவை பத்தின உண்மைகளை படமா எடுக்கணும் என்ற எண்ணம் அம்மாவுக்கு இருக்கு.”