Published:Updated:

``நாவல் எப்போது சினிமாவாக மாறும், ஸ்கிரிப்ட் இல்லாமல் ஃபிலிம் மேக்கிங் எப்படி?!'' - வெற்றிமாறன்

வெற்றிமாறன்

"எதுக்காக ஒரு விஷயத்தை செஞ்சமோ அதை நேர்மாறா சிலர் புரிஞ்சிக்கும்போதுதான் கொஞ்சம் தடுமாற்றமா இருக்கும்." - வெற்றிமாறன்

``நாவல் எப்போது சினிமாவாக மாறும், ஸ்கிரிப்ட் இல்லாமல் ஃபிலிம் மேக்கிங் எப்படி?!'' - வெற்றிமாறன்

"எதுக்காக ஒரு விஷயத்தை செஞ்சமோ அதை நேர்மாறா சிலர் புரிஞ்சிக்கும்போதுதான் கொஞ்சம் தடுமாற்றமா இருக்கும்." - வெற்றிமாறன்

Published:Updated:
வெற்றிமாறன்

''விவசாயிகள், விவசாயம் பற்றி படம் எடுக்கணும்கிற ஐடியா இருக்கா?''

''விவசாயிகள் தற்கொலை சம்பந்தமான கதை ரெடி பண்ணிவெச்சிருக்கேன். இது கோட்டா நீலிமா எழுதின 'ஷூஸ் ஆஃப் தி டெட்' நாவலை அடிப்படையா வெச்சு எழுதின ஸ்கிரிப்ட். இந்த நாவல் விவசாயிகள் தற்கொலைக்குக் காரணமான சிஸ்டத்தின் தவறுகளை சொல்ற நாவல். இந்த அமைப்பு அவங்களை என்னவா பார்க்குதுன்றதைப் பற்றி பேசும்.''

''ஆனா, இங்க வெளியாகுற விவசாயம் சம்பந்தப்பட்ட படங்கள்ல கலைத்தன்மை முழுமை பெறாம, ஒரு பிரசார தொனி இருக்கே... அதுதான் சொல்லவந்த விஷயங்களை முழுமையா மக்களுக்கு இன்னும் கொண்டுபோய் சேர்க்கலையோ?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நேரடியா லைஃப்ல இருந்து வராத படங்கள் சில அப்படி இருக்கும். அதுமட்டும் இல்லாம கைத்தட்டல் வாங்குறதுக்கான டயலாக்ஸ் எழுதுறதுல இன்ட்ரஸ்ட் இருக்கு. விவசாயம் பத்தி நல்லா சொன்னா, விவசாயிகளுக்கு ஆதரவா ஒண்ணு சொன்னா கைதட்டல் கிடைக்குதுன்றப்போ அதை அங்கே வைக்க ட்ரை பண்றாங்க. ஆனா, அதோட சிக்கல்களைச் சொல்லத்தவறிடறாங்க. அந்த லைஃபை உண்மையிலேயே சரியா படம் பிடிக்கும்போது நல்லாயிருக்கும். அப்ப அது ஒரு முழுமையான கலைவடிவம் பெறும்.''

வெற்றிமாறன்
வெற்றிமாறன்

'' 'பொல்லாதவன்' தொடங்கி 'வடசென்னை' வரை உங்கள் படங்களில் மோதல் அல்லது முரண் என்பது ஒரு சாராருக்குள்தான் இருக்கும். ஆனால், 'அசுரன்' படத்தில்தான் நேரடியா இரண்டு தரப்புக்குமான பகையைக் காட்டினீங்க?''

'' 'வெக்கை' நாவல் எழுதிய பூமணியே அது காஸ்ட் இஷ்யு இல்லை, கிளாஸ் இஷ்யுன்னுதான் படம் தொடங்குறதுக்கு முன்னாடியே சொன்னார். அதனாலதான் படம் பார்த்துட்டு பிடிக்கலைன்னு நிறைய இடங்களில் பதிவு பண்ணார். ஆனா, எனக்கு அந்தக் கதைக்குள் சொல்லாமல் கடந்துபோன விஷயமா சாதி அரசியல்தான் தெரிஞ்சது. அதேபோல புனைவு சுதந்திரத்தையும் கொஞ்சம் எடுத்துக்கிட்டோம். உதாரணத்துக்கு பஞ்சமி நிலம் பற்றிய பதிவு அதில் இருக்கும். அந்தக் காலத்துல, அந்த இடத்துல பஞ்சமி பிரச்னை இல்ல. ஆனா, இப்படி ஒரு களம் கிடைச்சதால படைப்புக்கான சதந்திரத்தோட அதைச் சேர்த்துட்டோம்.''

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

'' 'வாடிவாசல்' நாவலின் கதையுமே ஒரு குறிப்பிட்ட சமூகம் சார்ந்த, ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த கதைக்களம் கொண்டதுதானே?''

''நான் அதை சாதியாப் பார்க்கல. தமிழ் கலாசார அடையாளமாத்தான் பார்க்குறேன்.''

வெற்றிமாறன்
வெற்றிமாறன்

'' 'அசுரன்'க்கு அரசியல் ரீதியா நிறைய விமர்சனங்கள், பாராட்டுகள், கண்டனங்கள்லாம் வந்துச்சு... அதையெல்லாம் மனசுல வெச்சு அடுத்தடுத்தப்படங்கள்ல சமரசங்கள் எதுவும் இருக்குமா?''

''ஒரு பின்புலம் ஒரு கதையைக் கொடுக்கும். அந்தக் கதையை நாம் சொல்லணும். அதுல ஒரு குறிப்பிட்ட மக்களை சென்டரா வெச்சுத்தான் கதை பண்றமாதிரி இருக்கும். அதுக்கு ஆதரவும், எதிர்ப்பும், விமர்சனங்களும், பாராட்டுகளும் மாறி மாறி வந்துட்டுதான் இருக்கும். அதுக்காக நாம பண்ற விஷயங்களை நிறுத்தக்கூடாது. எதுக்காக ஒரு விஷயத்தை செஞ்சமோ அதை நேர்மாறா சிலர் புரிஞ்சிக்கும்போதுதான் கொஞ்சம் தடுமாற்றமா இருக்கும். மத்தபடி ஓகேதான்.''

''நியூ நார்மல் சினிமா எப்படியிருக்கப்போகுது... இனி பெரிய பட்ஜெட், பெரிய டீம் வெச்சுலாம் படங்கள் பண்ணமுடியாதுன்னு சொல்றாங்களே?''

''நான் முன்னாடியிருந்தே இதைப்பத்தி பேசிட்டிருக்கேன். தியேட்ரிக்கல் சினிமா மொத்தமா ரீடிஃபைன் ஆகப்போகுது. முதல்ல இருக்கிற 10 நடிகர்கள், அவங்களை இயக்கப்போற 20-25 இயக்குநர்கள்தான் இனி தியேட்டர்களுக்குப் படம் பண்ணுவாங்க. நாமளாம் மற்ற விதமான ரிலீஸ் முறைகளைத்தான் நம்ப வேண்டியிருக்கும். தியேட்டர் இப்ப திறந்தாலும் மேக்ஸிமம் 50 பர்சன்ட் ஆக்குபன்ஸிதான். இதுல 100 பர்சன்ட் வரணும்னா 100 ரூபாய் டிக்கெட்டை 200 ரூபாய்க்கு விக்கணும். அப்படியே வித்தாலும் பெரிய ஸ்டார்களுக்கும், பெரிய ப்ரொடெக்ஷன் படங்களுக்கும்தான் அந்தப் பணம் கொடுத்து மக்கள் தியேட்டருக்கு வருவாங்க. அதனால தியேட்டர்களுக்கான படங்கள் இனி ஸ்டார்களை மையமா வெச்சுதான் ரிலீஸாகும். ஸ்டார் என்பது வெறும் நடிகர்கள் கிடையாது, இயக்குநர்களும் ஸ்டார்களா இருக்காங்க. ஆனா, வெவ்வேறு விதமான சினிமாக்களை நாம இனிமேல் பார்க்கப்போறோம். டெம்ப்ளேட் கதைகள்லாம் மாறும். புதுசு புதுசா ட்ரை பண்றதுக்கும், எக்ஸ்ப்ளோர் பண்றதுக்கும் நிறைய வாய்ப்புகள் வரப்போகுது. கன்டென்ட் ரீதியா ரிச்சான படங்கள் வரப்போகுது. அதேசமயம் பட்ஜெட் ரீதியா ரொம்ப எக்ஸ்பென்சிவான படங்களும் வரும்.''

வெற்றிமாறன்
வெற்றிமாறன்

''2011-ல 'ஆடுகளம்' டைம்ல இருந்தே உங்ககிட்ட பேசிட்டிருக்கேன். அப்ப எப்படியிருந்தீங்களோ, இப்பவும் அப்படியேதான் இருக்கீங்க. வெற்றிகள், வெற்றிமாறனை மாத்தலையா?''

''என்னைப் பொருத்தவரை கமர்ஷியல் வெற்றிக்கு நாம ஒண்ணும் பண்ணிடவே முடியாது. சின்சியரா வேலை செய்யணும் அவ்ளோதான். ஆனா, வெற்றிகள் அதுவாதான் அமையும். சரியான மனிதர்கள் என்னை சுத்தியிருக்காங்க. அவங்க ஒரு படம் ஜெயிச்சவுடனே வேற மாதிரி என்னை பார்க்குறது கிடையாது. முன்னாடி எப்படிப் பார்த்தாங்களோ அப்படித்தான் இப்பவும் பார்க்குறாங்க. ஆனா, நீங்க சொல்றமாதிரி நான் அதே மனிதனா இப்ப இல்ல. ஆனா, அப்படியிருக்க முயற்சி பண்றேன். 'இது எதோ கொஞ்சம் வருதே... வேணாம்... வேணாம் மாத்து'ன்னு எனக்கு நானே வொர்க் பண்றேன். கரெக்ட் பண்ணிட்டே இருக்கேன்.''

வெற்றிமாறன்
வெற்றிமாறன்

'' 'வெற்றிமாறன் ஸ்டைல் ஆஃப் ஃபிலிம் மேக்கிங்கே வேற மாதிரி இருக்கும். அவர் ஸ்கிரிப்டே இல்லாமல் ஸ்பாட்டுக்கு வருவார். ஆனா, ஸ்பாட்ல சூப்பரா பண்ணிடுவார்'னு உங்களைப் பற்றி பலர் சொல்றதைக் கேட்டிருக்கேன். அது எப்படி?''

''அதுக்கு என்னோட டீம்தான் காரணம். என்னோட கேமராமேன், எடிட்டர், ஆர்ட் டைரக்டர், அசிஸ்டென்ட்ஸ்னு பெரிய டீம் எஃபர்ட்தான். இப்பவும் 'வடசென்னை' படத்துல எந்த சீனை எடுத்துப்பார்த்தாலும் மண்ணுல லாட்டரி சீட், ப்ளூபேர்ட் சிகரெட் அட்டைலாம் இருக்கும். இந்த டீடெய்ல்ஸ்லாம் ஆர்ட் டிபார்ட்மென்ட் அவங்களா பண்றதுதான். எனக்குத் தேவையான எல்லாவற்றையும் என் டீம் உருவாக்கி கொடுக்குறாங்க. அதனால, நான் ஸ்பாட்ல போய் எஃபர்ட்லஸா, ஸ்பான்டேனியஸா ஒரு காட்சியை உருவாக்கிட முடியுது. ஆனா, இது சரியான அணுகுமுறையில்ல. கொஞ்ச நாள் கழிச்சி இப்படி என்னால இம்ப்ரவைஸ் பண்றதுக்கு முடியாமப் போகலாம். சினிமாவில் இம்ப்ரோவைசேஷனை நம்புவதைவிட திட்டமிடலை நம்புவது சிறந்தது. ப்ராப்பரா ஸ்கிரிப்ட், சீன் எழுதி, ப்ரீ ப்ரொடக்‌ஷன் சரியா பண்றதுதான் லாங்டேர்ம்ல ஹெல்ப் பண்ணும்.''

''ஒரு நாவல் எப்படி சினிமாவாக மாறுது?''

வெற்றிமாறன்
வெற்றிமாறன்

''வெக்கை நாவலோட ஓப்பனிங்கைத்தான் 'அசுரன்' படத்துக்கும் வெச்சிருந்தேன். அந்தப் பையன் வெட்டிட்டு, பாம் அடிச்சிட்டு ஓடிவருவான். மூணு பேர் துரத்திட்டு வருவாங்கன்னு ஷூட்டிங் போறதுக்கு 20 நாளுக்கு முன்னாடி வரைக்கும் இப்படித்தான் ஓப்பனிங் இருந்தது. என்னோட எல்லா படங்களும் எப்படி ஆரம்பிக்குமோ அப்படியிருந்தது. அதனாலதான் அந்த நாவலைப் படிக்க ஆரம்பிச்சதுமே எனக்குப் பிடிச்சதுன்னு நினைக்கிறேன். ஆனா, அந்தக் கதையை அணுகும்போது, கொஞ்சம் ஹோல்ட் பண்ணி யார் இவங்க, எங்கப்போறாங்கனு ஒரு சஸ்பென்ஸோட தொடங்கணும்னு தோணுச்சு. கேள்விகளின் ஊடாவே கேரக்டர்ஸ் அறிமுகப்படுத்தி, கான்ஃப்ளிக்ட்டை சொல்லிடலாம்... அதன் மூலமாவே அந்த உலகத்துக்குள்ள போலாம்னு நினைச்சேன். அப்படித்தான் நாவல்ல இருந்து கதையை எடுத்து அதை சினிமாவுக்காக மாத்திக்கிறேன்.

சினிமா பலபேரோட கூட்டுமுயற்சி. ஒரு நாவல் எழுதணும், ஒரு படம் வரையணும், ஒரு சிற்பம் செதுக்கணும்னா அதுக்குப் பெரிய இன்வெஸ்ட்மென்ட் கிடையாது. நாவல் எழுதணும்னு முயற்சி பண்றீங்க, ஆயிரம் பக்கம் எழுதுறீங்க. சரியா வரலைன்னா தூக்கிப்போட்டுட்டு மறுபடியும் எழுதலாம். ஆனா, அந்த சுதந்திரம் சினிமால இல்லை. பல கலைகளை ஒன்றடக்கியது சினிமா. மியூசிக், ஃபைன் ஆர்ட்ஸ், போட்டோகிராஃபின்னு பல்கலைகள் சேர்ந்த ஒரு பெருங்கலை. ஆனாலும், ஒரு இயக்குநருக்கு மற்ற எழுத்தாளருக்கான, ஒரு கலைஞனுக்கான, ஒரு சிற்பிக்கான ஸ்டேட்டஸ் கிடைக்கிறதில்லை. என்னைப் பொருத்தவரை இயக்குநர் என்பவர் ஒரு மேய்ப்பர். அவ்வளவுதான்.''